மக்கள் மனசுல யார்?
டாஸ்மாக்கை மூடுவாரா விஜய்?
விஜயை நம்பினால், அவருக்கு ஓட்டு போடுங்க. 'டாஸ்மாக்' கடைகளை மூடுவதையும் இலவச கல்வியையும், விஜய் அவரது தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சியை விஜயால் மட்டுமே தர முடியும். வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். நாம் தமிழர் கட்சியும், தே.மு.தி.க.,வும் விஜய் பக்கம் நின்றிருக்க வேண்டும்.
வெறுப்புதான் வருகிறது!
தி. மு.க., ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தேர்தல் நெருங்கியவுடன் நல்லது செய்வது போல் நடிக்கிறது. அரசு அதிகாரிகள் மக்களை கண்டுகொள்வதில்லை. அரசும் இதை கண்டுகொள்வதில்லை. மக்களுக்கான அடிப்படை பிரச்னைகள் கூட தீர்க்கப்படவில்லை. இந்த அரசு மீது வெறுப்பு தான் மிஞ்சுகிறது. இம்முறை என் ஓட்டு அ.தி.மு.க.,வுக்கு தான்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்