Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


இந்த முறை ஓட்டு யாருக்கு? ஏன்?

இந்த முறை ஓட்டு யாருக்கு? ஏன்?

 எங்கு பார்த்தாலும் போதை நடமாட்டம்


இ ந்த முறை சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டு போடலாம் என நினைக்கிறேன். கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டேன். தற்போது இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் உள்ளன. இவர்களுக்கு ஓட்டு போட்டால் மத்திய அரசின் சலுகைகள், திட்டங்கள் தமிழகத்திற்கு தடையின்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் முதல், நம் மாவட்டத்தில் போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, ஓசூர் பகுதிகளில் பாலியல் குற்றங்கள், போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன.

எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதை நடமாட்டம் உள்ளது. இதை தடுக்க வலுவான எதிர்க்கட்சி வேண்டும்.

நாம் தமிழர், த.வெ.க., போன்ற கட்சிகள், தி.மு.க.,வை எதிர்த்தாலும், அ.தி.மு.க.,தான் சரியாக எதிர்க்கும்; தி.மு.க.,வை வெல்லும் என நம்புகிறேன். குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டுமானால், ஆட்சி மாற்றம் அவசியம்.
-ஆர்.சதீஷ், சலூன் கடை, வேப்பனஹள்ளி, கிருஷ்ணகிரி

 அரசியல் என்பது சினிமா இல்லை


மக்களுக்கு என்ன வேணும், என்ன வேண்டாம் என்பதை தெரிந்து செயல்படுபவர் தான் தலைவராக இருக்க முடியும். முறையான கல்வி, படிச்சு முடிச்சதும் வேலைவாய்ப்பு இதுதான் ஒவ்வொருவரின் கனவு. இதுல அரசு முழு கவனம் செலுத்தினாலே போதும். இப்ப புதுசா டி.வி.கே., கட்சி வந்திருக்கு. அரசியல்ங்கிறது சினிமா கிடையாது. எழுதி கொடுத்ததை வாசித்து, பதவிக்கு வந்ததும் ஒருநாள் முதல்வரா இருந்து உடனடியா நிறைவேற்றுவதற்கு இது சினிமா அல்ல. அரசியலுக்கு வந்ததும், உடனே மொத்த தமிழ்நாட்டையும் அவங்க கையில கொடுத்துட முடியுமா என்பது கேள்விக்குறிதான். அரசியல் அனுபவம் கட்டாயம் தேவை.

இப்போ நடக்கிற ஆட்சியில குறைபாடுகள் தான் ஜாஸ்தியா இருக்கு. சட்டம் - ஒழுங்கு படுமோசமா இருக்கு. ஹாட் பாக்ஸ், விளக்கு, அண்டா அப்படினு இலவசமாக கொடுத்து மக்களை ஏமாத்துறாங்க.

கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவத் திட்டங்களுக்கு வாக்குறுதி யார் நல்லதா கொடுக்கிறார்களோ அவங்களுக்குத்தான் ஓட்டு போடணும். அப்படி வரும் வேட்பாளருக்கு தான் என் ஓட்டு.

- கே.ஸ்வர்ணமால்யா, பி.எச்டி மாணவி, குன்னூர், நீலகிரி

Advertisement