Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


என்னை ஈர்த்த சீமானின் ஒற்றைச்சொல்!

என்னை ஈர்த்த சீமானின் ஒற்றைச்சொல்!

என்னை ஈர்த்த சீமானின் ஒற்றைச்சொல்!



இ யற்கையை நேசிப்பதிலும், மண்ணுக்கு தேவையானதை, தமிழ் உணர்வோடு செய்வதிலும் சீமானுக்கு மாற்று யாரும் இல்லை. எங்கு பார்த்தாலும் ஊடுருவியுள்ள லஞ்சத்தை எதிர்த்து குரல் கொடுப்பது நாம் தமிழர் கட்சி தான்.

பிற கட்சிகளை பற்றி கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை. ஆனால், நாம் தமிழர் கட்சியின் பேச்சும் வீரமும், பிறரின் அரசியல் விளையாட்டுகளுக்கு 'நையாண்டி'யாக பதில் அளிக்கும் துணிச்சலும், சீமானுக்கு மட்டுமே உள்ளது. இலவசங்கள் கொடுத்து தான் ஓட்டு வாங்க வேண்டும்; மெகா கூட்டணி இருந்தால் தான் வெற்றி உறுதியாகும் என ஒவ்வொரு கட்சியும் துணையோடு துணை தேடுகிறது.

ஆனால், எங்கும், எப்போதும், எதிலும், துணிந்து தனியாக நிற்பதும்; களத்துக்கு முதலில் வருவதும் நாம் தமிழர் தம்பிகள் தான். ஆகையால், இந்த முறை என் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு தான். கூட்டணி அமைத்து சிலர் திருட்டை வளர்க்கின்றனர்.

திருட்டை தடுத்து மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார், சீமான். 'இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறோம்' என்று அவர் சொன்ன ஒற்றை வார்த்தை தான், என்னை ஈர்த்தது.

எம்.கிருத்திகா, 21 திருப்பூர்

இதற்கு பெயர் தான் மாற்று அரசியலா 'மிஸ்டர்' விஜய்?

தி .மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் கோட்டை விடுகின்றனர். பட்ஜெட் விஷயத்திலும் சொதப்பி விட்டனர். மாநில கடன் பன்மடங்கு அதிகரித்து விட்டது. அதை குறைக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை. மகளிர் ஓட்டுகளை குறிவைத்து, இலவச பஸ் பயணத்தை அறிவித்தனர். அது, ஏற்கனவே லாபம் இல்லாத போக்குவரத்து கழகத்தை இருளில் மூழ்க வைத்து விட்டது.

வழக்கமான கட்சிகளுக்கு மாற்றாக புதிய கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என தீர்மானித்துள்ளேன். கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளித்தேன். ஒவ்வொரு தேர்தலிலும் அக்கட்சியின் ஓட்டு வங்கி அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. இதுவே அக்கட்சியின் வளர்ச்சிக்கு சான்று. வெறும் பணம், புகழை வைத்து முதல்வர் ஆகிவிடலாம் என, நடிகர் விஜய் பகல்கனவு காண்கிறார். த.வெ.க., விற்கு எவ்வித கொள்கையும் கோட்பாடுகளும் இல்லை.

திராவிட கட்சிகளை விஜய் காப்பியடிக்கிறார். மாற்று அரசியல் என்று சொல்லி, பிற கட்சியில் இருந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறார். இதற்கு பெயர் தான் மாற்று அரசியலா மிஸ்டர் விஜய்?

வி.சூர்ய பிரகதீஸ்வரன், 27 பரமக்குடி

Advertisement