முன்னோடி திட்டம் தந்த அ.தி.மு.க.,
தா.கோகுல்பிரசாத், 23 திண்டுக்கல்
தி. மு.க.,விற்கு முன்பு, 2011ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டதுதான் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம். அந்த ஆண்டில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி - கல்லுாரி மாணவர்களுக்கு, 68 லட்சம் 'லேப்டாப்'கள் வழங்கப்பட்டன.
ஆட்சியில் உள்ள ஐந்தாண்டுகளுக்கு, 'எல்காட்' மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தை ஒரு டிஜிட்டல் புரட்சி என்றே சொல்வேன். ஏனெனில், 2011 காலகட்டத்தில் என் வயது இளைஞர்கள் மின்னணு தகவல் தொழில்நுட்ப துறையில் சாதிக்க விரும்பினர்.
மேலும், 'கோடிங், ஜாவா, புரோகிராமிங்' உள்ளிட்ட இணையதள வடிவமைப்புக்கும், இ - மெயில், கன்டென்ட் கிரியேஷன் என, இன்று 'ரீல்ஸ்' வெளியிட்டு, 'இன்ஸ்டாகிராம் இன்ப்ளுயன்சர்' ஆகும் அளவில் முன்னேறி உள்ளதற்கும், அப்போது வழங்கப்பட்ட லேப்டாப் தான் காரணம்.
லேப்டாப் திட்டத்தை இன்று தி.மு.க., உட்பட மஹாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கட்சிகள் பின்பற்றுகின்றன. அதனால் என் ஓட்டு அ.தி.மு.க.,விற்கு தான்.
Advertisement

வாழ்த்துக்கள்