Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


பாதுகாப்பு தருவார் விஜய்!

பாதுகாப்பு தருவார் விஜய்!

அ.நித்யஸ்ரீ, 25 தனியார் மருத்துவமனை ஆய்வக பணியாளர், தலைவாசல், சேலம்

க டந்த 2011 - 16ல், ஜெயலலிதா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது. அவர் தந்த மடிக்கணினி, தாலிக்குத் தங்கம் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அவர் மறைவுக்கு பின், அ.தி.மு.க., தலைமையில் குழப்பம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில், தி.மு.க., வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஓட்டு போட்டனர். ஆனால், பல வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றவில்லை.

தி.மு.க., ஆட்சியில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 'டாஸ்மாக்' கடைகள் அதிகமாக உள்ளன. அரசு டவுன் பஸ்சில் இலவச பயணம் செய்யும் பெண்களுக்கு மரியாதை இல்லை.

இந்த தேர்தலில் புதிதாக வரும் த.வெ.க., தலைவர் விஜய், மாற்று அரசியலை சரியான பாதையில் தான் கொண்டு செல்கிறார். கரூர் சம்பவத்தில் கூட போலீஸ் பாதுகாப்பு வழங்காதது தான் காரணம். இதற்கு முன் இருந்த ஆட்சிகளை பார்த்து விட்டோம்.

புதிதாக வரும் விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே. அவர் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என இளைஞர்கள் நம்புகிறோம்.

Advertisement

மார் 31, 2026 01:55 pm

சுவற்றில் சுவாமி படமும் நெற்றில் பொட்டும் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும்.

Reply Rate this