Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


திராவிட கட்சிகளும் த.வெ.க.,வும் ஒன்றுதான்!

திராவிட கட்சிகளும் த.வெ.க.,வும் ஒன்றுதான்!

சந்தோஷ், 24
கல்லுாரி மாணவர், சாணார்பட்டி, திண்டுக்கல்

திராவிட கட்சிகள் 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆண்டும், ஒட்டுமொத்த வளர்ச்சி, முன்னேற்றம் என சொல்ல எதுவும் இல்லை. த.வெ.க.,வின் நோக்கமும் திராவிட கட்சிகளின் சிந்தனையும் ஒன்றாகத்தான் இருக்கின்றன. முதலில், த.வெ.க.,வுக்கு அரசியல் நோக்கம் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

நா.த.க.,வின் அரசியல், திட்டங்கள், செயல்பாட்டில் தெளிவை பார்க்கிறேன். கவர்ச்சி, இலவசங்கள் இல்லாத திட்டங்கள், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அவசியமான இலவசங்கள், சமூக சீர்திருத்தங்கள் என இங்கு என்ன தேவையோ, அதை முன்வைத்து அரசியல் செய்கின்றனர்.

இந்த 21ம் நுாற்றாண்டிலும் இலவசத்தை எதிர்பார்க்கும் நிலையில் மக்களை வைத்திருக்கின்றனர் என்பதே வெட்கக்கேடு. தி.மு.க., ஆட்சியில் கனிமவளக் கொள்ளை அதிகம். பெயரளவில் நடக்கும் பணிகளிலும் ஊழல். இவை அ.தி.மு.க., ஆட்சியில் குறைவு என்றாலும், இங்கு தமிழ் தேசியம் ஆட்சிக்கு வருவதே வளர்ச்சிக்கான தீர்வு. அந்த வகையில் என் ஆதரவு நா.த.க.,வுக்குதான். நல்ல கொள்கை, நோக்கம் உள்ளோரை தளரவிடாமல் தோள் தட்டிக் கொடுப்பது நம் கடமை.

Advertisement