Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ஓட்டுப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக வைப்பு

ஓட்டுப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக வைப்பு

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் ஓட்டு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 'சீல்' வைக்கப்பட்டது.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு சங்கராபுரம் சட்டசபை தொகுதிக்கு பேலட் யூனிட் 408,கண்ட்ரோல் யூனிட் 442, வி.வி.பாட் 442 ஆகியவை சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் உள்ள பாதுகாப்பு அறையில் இறக்கி வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக அறையில் வைத்து 'சீல்' வைக்கப்பட்டது.

சங்கராபுரம் சட்டசபை தேர்தல் நடத்தும் அலுவலர் சிராஜூதீன்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வைரக்கண்ணன்,வாசுதேவன்,வருவாய் ஆய்வாளர் திவ்யா வி.ஏ.ஓ., திவிகுமார் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Advertisement