திருடர்களிடம் ஆட்சி: சீமான் கடும் விமர்சனம்
கிருஷ்ணகிரி: “என் நிலத்தில், வட மாநிலத்தவருக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கினால், நாட்டை விட்டே வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை,” என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, தளி, பர்கூர், ஓசூர், வேப்பனஹள்ளி தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கெலமங்கலம் ராயக்கோட்டையில், சீமான் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:
மாற்றம் மாற்றம் என்று சொல்லும் அரசியல் கட்சிகள் எல்லாம், இலவசம் என்கிற கவர்ச்சி திட்டத்தை அறிவிக்கின்றனர். ஒருவர் கையேந்தினால் பிச்சை எடுக்கிறான் என சொல்வீர்கள், எல்லோரும் கையை ஏந்தினால், அது பிச்சை இல்லாமல் இலவசம் ஆகி விட்டது.
திருடர்களிடம், திரும்பத் திரும்ப ஆட்சியை கொடுத்ததால், அவன் திருடிய காசில், 1,000 ரூபாய், 2,000 ரூபாய் என பங்கு கொடுக்கிறான்.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் 10,000 ரூபாய் தருகிறோம், மகளிருக்கு 2,000 ரூபாய், பிரிஜ் தருவோம், என்கின்றனர்.
இதெல்லாம் ஒரு திட்டமா, நாட்டையும், மண்ணையும் விற்று, கடன் வாங்கி கொடுப்பீர்களா? மக்களுக்கு, 2,000 ரூபாய் தருகிறோம், 5,000 ரூபாய் தந்து விட்டோம் எனக்கூறும், தி.மு.க., அரசு, கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்றவற்றை ஏன் இலவசமாக தரவில்லை? இலவச திட்டங்களை அறிவிக்கும் கட்சிகள், சாராயத்தை ஒழிப்போம் என, ஏன் கூறுவதில்லை?
இலவசங்களை கொடுத்து, மக்கள் வேலை செய்வதை தடுத்து விட்டு, வட மாநிலங்களில் இருந்து வேலைக்கு ஆட்களை கொண்டு வந்ததோடு, எஸ்.ஐ.ஆர்., வாயிலாக, ஒன்றரை கோடி வட மாநிலத்தவருக்கு ஓட்டும் வாங்கி கொடுத்து விட்டார்கள். என் நிலத்தின் அரசியல் அதிகாரத்தை, அவன் முடிவு செய்யப்போகிறான்.
ஏற்கனவே மொழி, வரலாறு, வழிபாடு உள்ளிட்டவற்றை விட்டு வெளியேறி விட்டோம், அடுத்து, இந்த நாட்டை விட்டு வெளியேறுவது தவிர வழி இல்லை. நான் உங்களுக்கு போதிக்கும் போது புரியாது, நீங்கள் பாதிக்கும் போது தான் புரியும். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement
சீமான் அவர்களெ திராவிட கட்சியை வளர விடக்கூடாது என்று நினைத்தி திருந்தால் பா ஜா கா வுடன் கூட்டணி சேர்ந்திருக்கலாம்
SIR கணக்கெடுப்பின் பொது பங்களாதேசியரை வடக்கன் என்று முத்திரை குத்தும்போது எங்கே இருந்தீர்கள் சீமான் அவர்களே ?
இங்கே சீமானுக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ள பலரையும் பார்க்கும்போது சிரிப்பாகவும் வேதனையாகவும் கோபமாகவும் வருகிறது. அடுத்தவரை விடுங்கள், தங்கள் சந்ததிகளின் நலனைக்கூட சிந்திக்காத சுயநலக்கூடாரமாக தமிழ்நாடு மாறிவிட்டது, தமிழர்கள் மாறிவிட்டார்கள் என்பது வேதனையானது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அனைத்து உயிர்களுக்குமான அரசியலை பேசும் ஒருவனை புரிந்துகொள்ளாமல் மற்ற மனிதனுக்கு எதிராக காண்பித்து அவன் பேசும் அரசியலை நீர்த்து போக செய்யும் கும்பல் இது. சீமான் கூறுவது எல்லாரும் நன்றாக வாழ வேண்டும் அதற்க்கு தமிழ்நாட்டை தமிழ்தான் ஆள வேண்டும். இந்த உண்மை விரைவில் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டியது வரும்.
உன் நிலத்தில்.... இந்தியாவை சேர்ந்த வட மாநிலத்தைச் சேர்ந்த ஆட்களுக்கு வாய்ப்பு வழங்க கூடாது சரி.. ஆனால் பாகிஸ்தான்.. பங்களாதேஷ் போன்ற அயல்நாடுகளை சேர்ந்த ஆட்களுக்கு வாய்ப்பு வாங்கினால் சரி.. அப்படி தானே சைமன் ?
இவர் பரம யோக்கியர் பொய் சொல்லி நன்கொடை உண்டியல் மூலம் வயிறு வளர்க்கிறார்
இது போல அரசியல்வாதிகள் தான் உள்நாட்டு தீவிரவாதிகள். மத, இன, மொழி பிரச்சனைகளை பேசி வருமானம் உண்டாக்கும் விஷக்கிருமிகள்.
சீமான் சொல்வதை போல வடமாநிலங்களில் உள்ள மக்கள் தமிழர்களை பற்றி இவர் போல பேசியிருந்தால் இந்நேரம் அங்கே குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் பல லட்சக்கணக்கான தமிழர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி இருக்குமே. வடமாநிலத்தார் என்றால் அவர்கள் என்ன பாகிஸ்தானிலிருந்தா வந்தவர்கள்? இந்தியர்கள் எந்த மாநிலத்திலிருந்து எங்கு வேண்டுமானாலும் வாழும் உரிமை உள்ளவர்கள். இப்படி மூடத்தனமாக பேசி பேசியே நாட்டை குட்டிச்சுவர் ஆக்காமல் விடமாட்டார் போலும். அறிவார்ந்த கட்சித்தலைவர்கள் என்று யாருமே இப்படி பேசியதே கிடையாது. ஓட்டுக்காக பிரிவினையை உருவாகும் இவர்கள் அந்நிய கைக்கூலிகளாக இருக்க கூடும். நான் போதிப்பதை ஏற்க மறுப்போர் பாதிக்கும்போது நினைத்து பார்ப்பார்கள்.

கத்தி கத்தியே உனது ?