Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 'டார்ச்லைட்' கமல்ஹாசனுக்கு திருமாவளவன் திடீர் வக்காலத்து

 'டார்ச்லைட்' கமல்ஹாசனுக்கு திருமாவளவன் திடீர் வக்காலத்து
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: 'சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட வேண்டும். அவர்களை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கோருவது ஏற்புடையது இல்லை,' என, வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

அவரது அறிக்கை: தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. இதில், மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல், கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை.

கமல்ஹாசன், மக்களின் நன்மதிப்பை பெற்ற திரை கலைஞர் மட்டுமின்றி, நான்கு சதவீத ஓட்டு வங்கி உடைய அரசியல் கட்சி தலைவர். அவர், நம்மோடு மனமுவந்து களத்தில் நிற்பது தான் கூட்டணிக்கு நலம்.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், மக்கள் நீதி மய்யத்திற்கு இடப்பகிர்வு அளிப்பதில் ஏற்பட்ட நெருடல், அக்கட்சி இம்முடிவை எடுக்க காரணமாக அமைந்து விட்டது. இவை நாகரிகமான அணுகுமுறை என பெருமிதப்பட்டாலும், நம் கூட்டணியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க., தங்களது சின்னத்திலேயே கூட்டணி கட்சிகளை போட்டியிட வேண்டும் என கோருவது ஏற்புடையது இல்லை. இவை, அக்கட்சியின் சுதந்திரமான அரசியலை முடக்கிவிடும்.

எனவே, தொகுதி எண்ணிக்கை எதுவானாலும், அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள, 'டார்ச்லைட்' சின்னத்தில் போட்டியிட அனுமதித்து, கூட்டணி மீதான நன்மதிப்பை உயர்த்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

மார் 26, 2026 04:07 pm

போலி மதச்சார்பின்மை கூட்டணி

Reply Rate this
மார் 26, 2026 02:30 pm

அறிவாலய காவல் கமல்

Reply Rate this
மார் 26, 2026 01:41 pm

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதது..... பக்கத்து இலைக்கு பாயாசம் வேண்டும் என்பது போல் உள்ளது இவரது பேச்சு.... கமலுக்கு டார்ச் லைட் கொடுக்கவில்லை என்றால்.... விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று இவரால் கூற முடியுமா ?

Reply Rate this
மார் 26, 2026 12:09 pm

சரியாகத்தான் பேசி இருக்கிறார் திருமா. ஒரு கூட்டணி கட்சியான மையத்திற்கு அதுவும் எண்ணிக்கையில் கூட எந்தப் பிரச்சனையும் இல்லை. அந்த கட்சியின் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட வைப்பதில் என்ன தவறு? இப்பிரச்சனையில் கமலை சமாதானப் படுத்தவெல்லாம் ஸ்டாலின் முயலவில்லை. திண்ணை எப்ப காலி ஆகும்னு உடனே கமலுக்கு நன்றி சொல்லி தி.மு.க வே அந்தத் தொகுதியை திரும்ப எடுத்துக் கொள்வது? என்ன மாதிரியான கூட்டணி தர்மம் இது? ஏற்கெனவே அதிருப்தியில் இருக்கும் கம்யூனிஸ்ட், வி.சி.கவிற்கு அந்த சீட்டை பிரித்துக் கொடுத்திருக்கலாமே? இதில் தி.மு.க உள்ளிட்ட ஒட்டுமொத்த தி.மு.க கூட்டணி கட்சிகளிலேயே அதி புத்திசாலிகள் தே.மு.தி.கவின் பிரேமலதாவும், அவரது தம்பி சுதீசும்தான்.

Reply Rate this
மார் 26, 2026 11:50 am

கமல்ஹாசன் விட்டு கொடுத்த 2 இடங்களை, திமுக, பெருந்தன்மையுடன், விடுதலை சிறுத்தை கட்சிக்கு அளிக்க வேண்டும்.

Reply Rate this
மார் 26, 2026 09:17 am

தேர்தலுக்கு பிறகு முட்டு குடுக்க ஒரு ஆளு வேணாமா அப்போதான் உன்னாலே நான் கேட்டேன் என்னாலே நீ கேட்டேன்னு கூவலாம்

Reply Rate this
மார் 26, 2026 08:47 am

பக்கத்து இலைக்கு பாயசம் கோரிக்கை. ஆனா இவருக்கு?

Reply Rate this
மார் 26, 2026 08:19 am

இவருக்கு அவர் சங்கிலி போட்டதற்கு கைமாறோ . நடிகருக்கு விழுந்த அடியை தியாகம் கடமை என்றெல்லாம் சொல்லி whitewash செயகின்றனர். கழகத்தின் உண்மை முகம் இப்போது நடிகருக்கு தெரிந்திருக்கும். இதற்குப்பதில் தனித்து நின்று போட்டி போட்டிருக்கலாம். இருவர் முகத்திலும் பிளாஸ்திரி தெரிகின்றது.

Reply Rate this