Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


அமமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் டிடிவி தினகரன்

 அமமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் டிடிவி தினகரன்

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் வெளியிட்டார்.
அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., அ.ம.மு.க., - த.மா.கா., புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி உள்ளன. இதில், பா.ஜ.,வுக்கு 27, பா.ம.க.,வுக்கு 18, அ.ம.மு.க.,வுக்கு 11, தமாகாவிற்கு 5 , இந்திய ஜனநாயக கட்சிக்கு 2, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் புரட்சி பாரதம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போக, மீதமுள்ள 169 தொகுதிகளில், அ.தி.மு.க., போட்டியிடுகிறது. தற்போது அதிமுக கூட்டணி கட்சிகள் தங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர் பட்டியலை வெளிடும் பணியில் இறங்கி உள்ளது. அந்த வகையில் அமமுக சார்பில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் வெளியிட்டார்.

அமமுக வேட்பாளர்கள்;

1.பெரியகுளம்- கதிர்காமு

2.மன்னார்குடி- காமராஜ்

3.திருவையாறு- கார்த்திகேயன்

4.காரைக்குடி- தேர்போகி பாண்டி

5.திருப்பத்துார்- ஞானசேகரன்

6.நாங்குநேரி- இசக்கிமுத்து

7.ஒட்டப்பிடாரம்-சுந்தர்ராஜன்

8.திருச்சி மேற்கு- செந்தில்நாதன்

9.சைதாப்பேட்டை- செந்தமிழன்

10.பூந்தமல்லி- ஏழுமலை

11.மடத்துக்குளம்- சி.சண்முகவேல்

தேர்தல் அறிக்கை



120 வாக்குறுதிகளை கொண்ட தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார். அதில் முக்கியமான வாக்குறுதிகள் பின்வருமாறு:

* 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்ளாக உயர்த்தப்படும்.

* விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* ஆசிரியர்கள் விரும்பும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம்.

* ஆண்களுக்கு சுய உதவி நிதி வழங்கப்படும்.

* மதுரையை போல் வட தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும்.

* ஜெயலலிதா, முத்துராமலிங்க தேவர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும்.

* கச்சத்தீவை மீட்க வலியுறுத்தப்படும்; கனிம வளக்கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரசாரம்

''நானும், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து தஞ்சாவூர், ஆண்டிப்பட்டியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம்'' என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

மார் 28, 2026 03:06 pm

ஆண்களுக்கு சுய உதவி நிதி - எதற்கு? இப்போது உள்ள டாஸ்மாக் வருமானம் போதாதா? எத்தனை நிதி கொடுல்தாலும் அது டாஸ்மாக்குக்கு போகும்..மிச்சம் மீதி எதாவது இருந்தால் அது உலகின் ஆதி தொழிலில் செலவழிக்கப் படும்.... இரண்டு கழகக் கபோதிகளும் தமிழகத்துக்கு தேவையற்ற ஆணிகள்.. திராவிடம் அழிந்தால் மட்டுமே தமிழகம் உருப்படும்... தமிழகத்துக்கு வைக்கப் பட்ட பில்லி சூனியம் வூடு மந்திர வாதம் செய்வினை மலையாள மாந்திரீகம்..திராவிட இயக்கம்.....

Reply Rate this
மார் 28, 2026 02:06 pm

நீண்டநாள் அரசியலில் இருந்த தனது பழுத்த அனுபவத்தை நிரூபித்துவிட்டார்.

Reply Rate this
மார் 28, 2026 01:23 pm

இது எடப்பாடியார் மீது குற்றம் இல்லை...

தமிழக பாஜக விற்குள் வளர்ந்து உள்ள களைகள் செய்து வரும் சித்து வேலைகள்...

தமிழக அரசியல் சாக்கடையைச் சுத்தம் செய்வது எளிதல்ல என்பது அரசியலில் நுழையும் போதே அவருக்குத் தெரியும்...

கால் காசுக்கு பொறுமானமில்லாத உன் போன்ற தற்குறிகள் எல்லாம் எகத்தாளத்துடன் ஏகடியம் பேசும் என்று அறிந்தே வந்து உள்ளார்...

Reply Rate this
மார் 28, 2026 12:53 pm

ஒன்னுமில்ல தினகரனுக்கு 11சீட். பிரேமாவுக்கு பத்து சீட்

Reply Rate this
மார் 28, 2026 12:16 pm

எடப்பாடி சாமர்த்தியத்தை மெச்சாமல் இருக்கமுடியவில்லை. பத்து வருஷம் பச்சை இங்கில் கையெழுத்து போட்டவன் நான். எடப்பாடி என்னும் தற்குறி என்னை பற்றி பேச தகுதி இல்லை என்று எக்காளமிட்டவர இப்படி புலம்பவிட்டுவிட்டார் அதுவும் கொஞ்சம் கூட பெரிய பிரயத்தனம் இல்லாமல்.. ஒரே கல்லில் பல மாங்காயை சாமர்த்தியமாக அடித்து பிஜேபிக்கும் சேர்த்து பாடம் புகட்டிவிட்டார். கிளை செயலாளருக்கும் நேரடி நியமனத்துக்கு தேர்தல் அரசியலில் இருக்கும் பெரிய அறிவுக்கூர்மை வித்தியாசத்தை தெளிவுபடுத்தி இனிமேலும் நேரடி நியமனங்களை தவிர்க்க சொல்லிக் கொடுத்து விட்டார்.

Reply Rate this
HoneyBee - Chittoir
நல்லா எரியிறா மாதிரி இருக்கு
மார் 28, 2026 12:28 pm
Rate this
எரியவில்லை, அனால் அண்ணாமலை நேற்று வீட்டை விட்டு வெளியே வரவில்லை யாம் அழுது கொண்டே இருந்தாராம்
மார் 28, 2026 12:52 pm
Rate this
தி.மு.க கொடுக்கப் போகும் ரூ200 க்காக ரொம்பவே அக்கறையா கூவ வேண்டாம்.NDA கூட்டணி வெற்றி பெற எடப்பாடி முதல்வராக நாம் முழுமையாக உழைக்க வேண்டும் என அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்து விட்டார் முதலில் ஸ்டாலினை தே.மு.தி.கவிடமிருந்து காப்பாற்ற வழி ஏதும் இருந்தா அத முதல்ல உங்க உடன் பிறப்புகளிடம் சொல்லுங்க.
மார் 28, 2026 02:07 pm
Rate this
பிரேமலதாவிற்கு பத்து சீட் கொடுத்து விட்டோமே என எண்ணி ஸ்டாலின் திமுகவினர் தேமி அழுகிறாரே அது மாதிரியா?
மார் 28, 2026 02:12 pm
Rate this
நேரடி நியமனங்களை முதலில் உங்கள் ஸ்டாலினிடம் சொல்லி தவிர்க்க சொல்லுங்கள்... அவர் தான் உதயநிதியை நேரடி நியமனமாக முதலில் கொண்டு வந்தவர்.
மார் 28, 2026 02:18 pm
Rate this
இருநூறு ஓவாவுக்கு கூட வக்கில்லாம இருக்குற இதுல பகல் கொள்ளைக்கார கும்பலுக்கு முட்டு வேற இன்பநிதிக்கும் நீ சலூட் தான் அடிக்கணும்
மார் 28, 2026 03:12 pm
Rate this