Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற முடியாது

 காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற முடியாது

காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில், எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. வெளிப் படைத் தன்மையோடு தொகுதி தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற, எங்கள் கருத்து ஏற்கப்படவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டு விட்டது.

உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை, தமிழக காங்கிரஸ் கட்சிக்காக, ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத சிலர் விற்றுத் தின்பதை பார்க்க வேதனையாக உள்ளது. இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மவுனமாக இருக்க முடியாது.

பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர் மட்டும் கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும், உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாக பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது.

- ஜோதிமணி, காங்., - எம்.பி.,

Advertisement

மார் 28, 2026 05:24 pm

திருடுவோர் முதலில் கழகம் இந்த தேர்தலுக்குப்பின் அழிவது உறுதி

Reply Rate this
மார் 28, 2026 03:53 pm

நீங்க இப்படி சொல்லுறீங்க ஆனால் செல்வப்பெருந்தகையின் வெற்றியை மட்டும் உறுதிசெய்ய சொல்லியிருப்பதாகவும், அவர் தேர்தல் வெற்றிக்குப்பின் திமுகவில் சேர்ந்து விடுவார் என்றும் திமுக ஒருவேளை வெற்றிப்பபெற்றால் அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்படும் என மக்கள் பேசிக்கொள்கிறார்களாம்

Reply Rate this
மார் 28, 2026 02:04 pm

ஏன் முடியாது? நீங்க கட்சியை விட்டு போனால்?

Reply Rate this
மார் 28, 2026 12:41 pm

காப்பாற்ற வாய்ப்பே இல்லை.

Reply Rate this
மார் 28, 2026 09:29 am

எந்தவொரு கட்சியும் ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பது ஜனநாயக விரோதம் ........ அக்கட்சி மக்களின் வெறுப்புக்கு ஆளாவது திண்ணம் ...... அப்படியொரு குடும்பக்கட்சியில் இருந்து கொண்டு கட்சி அழிகிறதே என்று கவலைப்படுவது அறிவீனம் ........

Reply Rate this