பெண்களுக்கு ரூ.5,000: தலைவர்கள் கிண்டல்
சென்னை : 'மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில், 5,000 ரூபாய் கொடுத்து, அடுத்த ஐந்தாண்டுகள் கொள்ளையடிக்க, தி.மு.க., வினர் துடிக்கின்றனர்' என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:
தி.மு.க., அரசு, மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில், எந்த மாதமும் இல்லாமல், திடீரென, 5,000 ரூபாய் முன்பணமாக, வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளது. இவை தேர்தல் வருவதை கணக்கிட்டு, மக்களின் ஓட்டை பறிக்கும் சூழ்ச்சி. நீண்ட நாட்களாக திட்டமிட்டு, மிகவும் ரகசியம் காத்து, ஒரே நாளில், 1.31 கோடி பேரின் வங்கி கணக்குகளில், 5,000 ரூபாய் செலுத்துவதில், நேர்த்தியாக தி.மு.க., அரசு செயல்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகள் கொள்ளையடிக்க பார்கின்றனர். தி.மு.க.,வின் ஓட்டு பறிக்கும் திருட்டுத்தனத்திற்கு, மக்கள் பாடம் புகட்டுவர்.
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு:
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தி.மு.க., அரசை கண்டித்து நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: கோடை காலம் ஆண்டுதோறும் வரும். இந்த ஆண்டு மட்டும் தமிழக மக்கள் மீது அவ்வளவு அக்கறை ஏன்? கரிசனம் என்ன? பாசம் என்ன? என கேட்டால் தேர்தல் வருகிறதுதான் காரணம்.
தேர்தலுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிவிட்டு கடைசியாக 50 நாட்களில் மூன்று மாதம் கொடுக்க வேண்டிய தொகையை சேர்த்துக் கொடுத்துள்ளார்களாம். 2000 ரூபாய் கோடைகால சிறப்பு நிதியாம்? ஐந்து ஆண்டுகளாககோடைகால சிறப்பு நிதி எங்கே போனது?. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி:
முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள ரூ.5 ஆயிரம் மகளிர் உதவித்தொகை தேர்தலுக்கான வித்தை. அரசு பணத்தில் ஓட்டு சேகரிக்கும் தி.மு.க.,வின் போக்கை தடுக்க தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்த வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில், போதை கலாசாரம், பணி நியமன ஊழல், விலைவாசி உயர்வால் அனைவரும்அதிருப்தியில் உள்ளனர்.கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதனை மடைமாற்ற ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணத் தொகை வழங்குவர். ஆனால், 'கோடைகால நிவாரணம்' என்று ஒரு புதிய கரடியை முதல்வர் அவிழ்த்து விட்டுள்ளார்.
அ.ம.மு.க. பொதுச் செயலர் தினகரன்:
தமிழகத்தில், மகளிருக்கு 5,000 ரூபாய் மட்டுமில்லை, 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும், தி.மு.க., தோல்வியடையப் போவது உறுதி. தோல்வி பயத்தில், எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டாலும், தமிழக மக்கள் மத்தியில், ஒருபோதும் எடுபடாது. தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளை காரணம் காட்டி, இதுபோன்ற அறிவிப்புகளை, முதல்வர் ஸ்டாலின், அவசரகதியில் வெளியிட்டிருப்பதன் பின்னணியில் இருப்பது, தி.மு.க.விற்கு ஏற்பட்டிற்கும், தேர்தல் தோல்வி பயம் தானே தவிர, மகளிர் மீதான உண்மையான அக்கறை இல்லை.
எனவே, தோல்வி பயத்தில், தி.மு.க., எடுக்கும் எந்தவித அஷ்திரமும், எடுபடாது. தி.மு.க.விற்கு, வரும், சட்டசபை தேர்தலில், அனைத்து தரப்பு மக்களும் இணைந்து, படுதோல்வியைப் பரிசாக வழங்கப்போவது உறுதி.
பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்:
மோடி மஸ்தான் வேலை என்பது போல், தேர்தலுக்காக எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றலாம் என்பதில் முதல்வர் கைதேர்ந்தவர். தற்போது, 5 ஆயிரம் ரூபாய் தந்து, தேர்தலில் வெற்றி பெற்றால் உரிமைத்தொகையை, 2 ஆயிரமாக உயர்த்தித் தருவதாக அறிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத்தொகையை தடுத்து நிறுத்த நினைத்தால், முன்பே நிறுத்தி இருப்போம். முதல்வர் அறிவிப்பில், கோடைகால விடுமுறைக்கு, 2 ஆயிரம் ரூபாய் என்பது ஆச்சர்யமாக உள்ளது. இது தேர்தலுக்கான அச்சாரம். தமிழகத்தில் கஞ்சா விற்பனை, பாலியல் பிரச்னை, வயதானவர்களுக்கான அச்சுறுத்தல் என, நாட்டில் நடக்கும் அனைத்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகளையும் மறைக்க, 5 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர்.
இதற்கு முன்னர் பொங்கலுக்கு, கோடைகால விடுமுறைக்கு பணம் கொடுக்கவில்லை. தேர்தல் வருவதால் அச்சரமாக பணத்தை கொடுத்துள்ளனர். இதைப்பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். இவர்கள் தேர்தலில் வெற்றி பெறவும் முடியாது.
பா.ம.க., தலைவர் அன்புமணி:
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்குகளில், தி.மு.க., அரசு திடீரென 5,000 ரூபாயை வரவு வைத்துள்ளது. ஆட்சி கையை விட்டுப் போவது உறுதியானதை உணர்ந்து கொண்ட தி.மு.க., தோல்வியின் வெளிப்பாடாகவே இதை செய்துள்ளது. இந்த கபட நாடகங்கள் மக்களிடம் எடுபடாது.
அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும், 1,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்த தி.மு.க., ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகளுக்கு, உரிமைத் தொகை வழங்க முடியாது என்று அறிவித்தது. அந்த துரோகத்தை அவர்கள் இன்னும் மறக்கவில்லை.ஒரே முறை 5,000 ரூபாயை வழங்குவதன் வாயிலாக, மக்களை ஏமாற்றி விட முடியாது. வரும் தேர்தலில் தி.மு.க., வீழ்த்துவது என்ற முடிவில் இருந்து, மக்கள் பின்வாங்க மாட்டார்கள்.
Advertisement
பிப் 14, காதலர் தினத்தை எதிரிகட்சிகளின் கதறல் தினமாக ஆக்கி விட்டார் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
என்ன அறிவித்தாலும் காச வாங்கி பாக்கெட்ல வைத்துவிட்டு ஓட்டைமட்டும் மட்டும் திமுகவுக்கு போட்டுவிடாதீர்கள் மக்களே தமிழ் வாசனையை தமிழ் மண்ணில் இருந்து அளித்துவிவார்கள், எத்தனை கோவில்கள் இடிக்கப்பட்டது, ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எத்தனை சொல்லி மாளாது
ஏன் இப்படி போய் செய்திகளை போடுகிறாய் பாலு..... பிஹாரில் கொடுத்தது தொழில் தொடங்க மாண்யம்.... அதுவும் வாங்கிய கடனில்.
ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். நான் முன்பே எழுதியிருக்கிறேன். எடப்பாடியார் ரூ 2000 அறிவிச்சப்புறம் பைத்தியம் பிடிச்சுட்டுது.
பீகாரில் ரூ பத்தாயிரம் கொடுத்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார் நிதிஷ் குமார்! அதில் பாதி கொடுப்பது எந்த வகையில் ராஜ தந்திரம்? எண்பது சீட்டு கூட தேறாதே!
Recover All90% NotDue VoteBribe Freebies asabotaging Democracy& Economy from All RulingParty Leaders& Illegal Beneficiaries. Until then, DeRecognise& Suspend their CitizenshipRights
தமிழகத்திற்கு தேவையான உபயோகமான திட்டங்களுக்கு பணம் இல்லை . ஆனால் இப்படி முன்கூட்டியே கொடுக்க இருக்கிறது. தூய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள் | செவிலியர்கள் இவர்களுக்கு கொடுக்க பணம் இல்லை. ஆனால் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்க பணம் இருக்கிறது. அதுவும் அரசு பணத்தில் லஞ்சம் . திமுக திருட்டு அரசு மீது வழக்கு தொடுத்து இனி தேர்தலில் நிற்க முடியாதவாறு செய்ய வேண்டும்
மீதமுள்ள மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி இல்லை என தமிழக அரசால் முத்திரை குத்தப்பட்ட பெண்களுக்கு கோடை காலம் கிடையாதா? மகளிர் உரிமை தொகை பெறும் பெண்கள் மீது மட்டும் சித்திரை கத்தரி வெயிலாகவும் அதே வெயில் மகளிர் உரிமைத் தொகை பெறாத பெண்கள் மீது சுவிட்சர்லாந்து வெயிலாகவும் அடிக்குமா? மகளிர் உரிமை தொகை வேண்டாம்! கோடை கால நிவாரணம் என்று அரசு ரூ 2000 வழங்குகிறதே? அதைப் பெறக்கூட அவர்கள் தகுதியற்றுப் போனார்களா?

ஆண்களுக்கு உரிமை வேண்டும் ஆண்கள் ஓட்டு திமுகவுக்கு இல்லை
கல்வி கடன் தள்ளுபடி உடன் அறிவிக்க வேண்டும்