Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


50 ஆண்டுகளாக திமுகவுக்கு பெப்பே

 50 ஆண்டுகளாக திமுகவுக்கு பெப்பே
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியில், 55 ஆண்டுகளாக தி.மு.க., நேரடியாக வெற்றி பெறாத நிலையில், இம்முறை தி.மு.க.,வை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அக்கட்சியினர் குரல் எழுப்புகின்றனர்.
பாபநாசம் தொகுதியில், கடந்த 2021 தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். இந்த தேர்தலிலும் போட்டியிட, அதே தொகுதியை கேட்டு வருகிறார். ஆனால், 'இம்முறை தி.மு.க.,வே போட்டியிட வேண்டும்' என கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது:பாபநாசம் சட்டசபை தொகுதியில், கடந்த 1952 முதல் 1967ம் ஆண்டு வரை, காங்., வெற்றி பெற்றது. பின், 1971 தேர்தலில் மட்டும் தி.மு.க., சார்பில் கணபதி என்பவர் போட்டியிட்டு வென்றார். அதன்பின், 1977 முதல் 1991 வரை காங்கிரஸ் வென்றது; 1989ல் மறைந்த ஜி.கே.மூப்பனார் வெற்றி பெற்றார். பின் 1996 மற்றும் 2001ல், த.மா.கா., வென்றது.
அதைத் தொடர்ந்து, 2006, 2011, 2016 தேர்தல்களில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு பாபநாசம் தொகுதியை ஒதுக்கிய நிலையில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது. கடந்த 2021 தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி வெற்றி பெற்றது.

கடந்த 1971 தேர்தலுக்கு பின், 55 ஆண்டுகளாக, பாபநாசம் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றதில்லை. கடந்த தேர்தலில், உதயசூரியன் சின்னம் வென்றாலும், வேட்பாளர், தி.மு.க.,வை சேர்ந்தவர் இல்லை. எனவே, இந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளரே நேரடியாக களமிறங்கும் வகையில், தொகுதியை தி.மு.க.,வுக்கே ஒதுக்க வேண்டும் என, கட்சி தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மார் 23, 2026 11:11 am

ஜெயில் தண்டனை பெற்று ஜாமீனில் இருப்பவர் பாப நாச எம்எல்ஏ. கொடுமைடா சாமி.

Reply Rate this
மார் 23, 2026 10:44 am

பாஜக வை நிறுத்தலாம் எளிதாக வெற்றி perum

Reply Rate this
மார் 23, 2026 10:31 am

கோவில்பட்டி தொகுதியிலும் திமுக இதுவரை வென்றதில்லை

Reply Rate this
மார் 23, 2026 06:58 am

முன்னர் கட்சியை இணைக்க ஒப்பந்தம் போட்டிருப்பார்கள்....

Reply Rate this
மார் 23, 2026 05:43 am

பாவம் நாசம் ஆன பிறகு திமுக எங்கே இருக்கும்

Reply Rate this