இந்த முறை ஓட்டு யாருக்கு? ஏன்?
வரிப்பணம் நம்மது... பலன் யாருக்கோவா?
என்னை பொறுத்தவரை தி.மு.க., ஆட்சிக்கு ஒரு 'எண்டு கார்டு' போடணும். அதனால என் ஓட்டு அ.தி.மு.க-.,வுக்குத்தான். கடந்த அஞ்சு வருஷமா மக்கள் எத்தனையோ பிரச்னைகளை சந்திச்சாங்க, அப்போதெல்லாம் வராத அக்கறை, இப்ப தேர்தல் வருதுன்ன உடனே வருது.
மக்கள் கோபத்துல இருக்காங்கன்னு தெரிஞ்ச உடனே ரூ.5,000 உதவித்தொகையை உடனே போட்டு விடுறாங்க. இது யாரு வீட்டு காசு? நாம கஷ்டப்பட்டு கட்டுற வரிப்பணத்தை எடுத்து, நமக்கே கொடுத்து, 'கண் துடைப்பு' நாடகம் ஆடுறாங்க.
முக்கியமா, 'லேப்டாப்' கொடுக்கிறாங்க.
அ.தி.மு.க ஆட்சியில பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'லேப்டாப்' கொடுத்தாங்க, அது அவங்களோட உயர்கல்விக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு.
ஆனா இவங்க அதை நிறுத்திட்டு, இப்ப தேர்தல் நேரத்துல மாணவர்களுக்கு டிஸ்ட்ரிபியூட் பண்றாங்க. மக்களுக்கு தேவையான நேரத்துல தானே கிடைக்கணும்?
கண்டிப்பா ஒரு ஆட்சி மாற்றம் வேணும். இப்படியே போனா தமிழ்நாடு திவாலாயிடும். இளைஞர்களோட மனநிலை இப்ப மாறிட்டு இருக்கு. எங்களுக்கு தேவையெல்லாம் வெறும் இலவசங்கள் இல்லை; முறையான வேலைவாய்ப்பும், ஒரு இளம் தலைமைத்துவமும் தான்.
-எஸ். துரைராஜ், 21,
சமூகப்பணி மாணவர், பொள்ளாச்சி
படிப்புக்கு 'இம்பார்டன்ஸ்' டி.எம்.கே.,வுக்கு ஓட்டு
இ து எனக்கு ரெண்டாவது எலக் ஷனுங்க. போன தடவ, பார்லிமென்ட் எலக் ஷன்ல, டி.எம்.கே., அலையன்ஸில், கம்யூனிஸ்ட்டுக்கு ஓட்டு போட்டேன். வர்ற எலக் ஷனில், என் ஓட்டு கண்டிப்பா டி.எம்.கே.,வுக்கு தான்.
படிக்கிற பசங்களுக்கு ரொம்பவுமே இம்பார்டன்ஸ் தர்றாங்க. நம்ப ஸ்டேட் இன்னும் டெவலப்மென்ட் ஆகோணும்னா, கண்டிப்பா எஜுகேஷன் நல்லா இருக்கோணும். இங்ங உள்ள காலேஜ்கள் உலகத்தரம் வாய்ந்த ஸ்கில் டெவலப்மென்ட் டிரெயினிங் குடுத்து, வேற லெவல்ல காலேஜ் ஸ்டூடன்ட்ஸை மாத்துறாங்க.
இதுபோக, முக்கியமா சொல்லோணும்னா, ஜாப் ஆப்பர்ச்சூனிட்டிக்கு சாப்ட்வேர், டெக்னிக்கல் ஸப்ஜெக்ட், டிரெயினிங் எல்லாமே எங்களுக்கு இலவசமா கெடைக்குது. என் கூட படிக்கும் நெறைய பேரு, யு.பி.எஸ்.சி., எக்ஸாமுக்கு ரெடியாயிட்டு வர்றோம். அதுக்குண்டான நிதி, பர்ஸ்ட் லெவல்ல ஆரம்பிச்சு, இன்டர்வியூ வரை டிரெயினிங், கவர்மென்ட் குடுக்குறது என்னப்போல பல மாணவர்களுக்கு பேருதவியா இருக்குது.
மொத்தத்துல கவர்மென்ட் ஸ்கூல் ஸ்டூடன்ட்ஸ்க்கு இன்ஜினியரிங், மெடிக்கல், லா-ன்னு பல படிப்புக்கு நல்ல ஹோப் இருக்குதுங்க. அதேபோல, ஹையர் ஸ்டடீஸ்க்கும் ஈஸியா போக முடியுது. இப்படி, ஸ்டூடன்ட்ஸ் சைடு எக்கச்சக்க ஹெல்ப் கெடைக்குறதால, கண்டிப்பா, டி.எம்.கே.,வுக்கு, இன்னொரு சான்ஸ் கொடுக்கப் போறேன்.
-எம்.ஸ்ரீலட்சுமி ஷெட்டி, 20,
கல்லுாரி மாணவி, திருப்பூர்
Advertisement

வாசகர்கள் கருத்துகள்