ஆட்டோ பிரசாரம் செய்ய ஊராட்சிகளுக்கு உத்தரவு
காஞ்சிபுரம்:நுாறு சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என, ஊராட்சிகள் தோறும் ஆட்டோ பிரசாரம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள், 100 சதவீதம் ஓட்டளிக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆட்டோக்கள் மற்றும் ஒலிப்பெருக்கி மூலமாக, 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தனித்தனி ஆட்டோ மூலமாக, கிராமம் மற்றும் குக்கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்