பிரசாரத்திற்கு வருவாரா ராகுல்?
புதுடில்லி: நடிகர் விஜயின் த.வெ.க., உடன் கூட்டணி அமைக்க, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்பினாலும், கடைசியில் தி.மு.க., கூட்டணியிலேயே இருக்க காங்., தலைமை முடிவெடுத்தது. இதில் ராகுலுக்கு உடன்பாடில்லை என பேசப்பட்டது. அவருக்கு, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க விருப்பம். ஆனால், சோனியாவின் கட்டளைக்கு உட்பட்டு அமைதியாகி விட்டார்.
தி.மு.க., - -காங்., கூட்டணி அமைந்தது குறித்து, ராகுல் இதுவரை எந்த கருத்துமே தெரிவிக்கவில்லை. இதற்கிடையே இன்னொரு பேச்சும் காங்., தலைமை அலுவலகத்தில் உலவுகிறது.
'காங்., போட்டியிடும் தொகுதிகளில், த.வெ.க.,விற்கும், காங்கிரசுக்கும் ஒரு ரகசிய உடன்பாடு ஏற்படும்' என்கின்றனர் காங்., தலைவர்கள். இது தொடர்பாக, காங்., தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, த.வெ.க.,வுடன் பேசி வருவதாக சொல்லப்படுகிறது.
'இவர் தான் தி.மு.க., வேண்டாம்; த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என பாடுபட்டவர். இந்நிலையில், 'தமிழகத்தில் தி.மு.க., - -காங்., கூட்டணிக்காக ராகுல் பிரசாரம் செய்வது சந்தேகம்' என சொல்கின்றனர். 'ஒருவேளை சோனியாவின் கட்டளைக்கு இணங்கி பிரசாரத்திற்கு வந்தாலும், அது வேண்டா வெறுப்பாகத் தான் இருக்கும். அதுவும், ஒன்று அல்லது இரண்டு கூட்டங்களுக்கு மேல் ராகுல் வர மாட்டார்' என்றும் சொல்லப்படுகிறது.
கேரளாவில் காங்., ஆட்சியை பிடிக்க வேண்டும் என விரும்புகிறார் ராகுல். ஆனால், இப்போதுள்ள நிலையில் அது சாத்தியப்படுமா என்பது அவருக்கே சந்தேகமாக இருக்கிறதாம். 'விஜயுடன் தமிழகத்தில் கூட்டணி அமைந்தால், அவரை கேரளா பிரசாரத்திற்கும் பயன்படுத்தலாம்' என எண்ணியிருந்தார் ராகுல். தற்போது, மீண்டும் இடதுசாரிகளே கேரளாவில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாம்.
Advertisement
வருவது சந்தேகம் காரணம் செ பெ க்கும் ராகுலுக்கும் உள்ள நீண்ட இடைவெளி. தமிழக காங்கிரசை சவக்குழியில் தள்ளியதே இந்த மாமனிதர். எவ்வளவு பெரிய மனிதர்கள் தலைவர்களாக இருந்த கட்சி இப்பொழுது அரக்கன் கையில். தலைவன் என்ற போர்வையில் வலம் வரும் ஒரு ஜடம். இவர் இருக்கும் வரை காங்கிரஸ் எந்த முன்னேற்றமும் அடையாது.
பானி பூரி வடக்கன் இங்கே வரும் போது ரெண்டு கிலோ கஞ்சா கொண்டுவருவதாக விடியல் மந்திரி பேச்சு .....
வடக்கன் படிக்காதவன்.. தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலம். இங்கே எதுக்கு வடக்கன் பனி பூரி இத்தாலிக்காரன் விடியலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வரனும்?? விடியலுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை என்று நினைச்சுட்டானுங்களா.
வந்தா NDA வுக்கு லாபம். வரலேன்னா ஸ்டாலின் மறுபடியும் ராகுல்தான் அடுத்த பிரதமர் அப்படினு ஓட்டமுடடியாது சத்தியமூர்த்தி பவன் வாசல்லே துண்டு வியாபாரம் அமோகமா நடக்கும் தலையிலே துண்டு போட்டுக்கினு உள்ளே போக
ராகுல் பிரசாரத்திற்கு வரவேண்டும் அப்போது தான் பாஜக கூட்டணியின் வெற்றி இன்னும் உறுதியாகும் தமிழகம் இந்த விடியல் கும்பல்களிடம் இருந்து காப்பாற்ற படும்.
மல்லுக்கட்டுவதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும் நிபுணர்கள் என்பது ராகுலுக்கு நன்றாகவே தெரியும்.
ராகுல் காந்தி தமிழகம் வந்து தீவிர பிரசாரம் செய்ய வேண்டும். குறிப்பாக தி மு க வலுவாக உள்ள இடங்களில். திமுக தோற்கடிக்க படவேண்டும். திராவிடம் என்னும் சொல் தமிழ் நாட்டில் அகற்ற அதுவே முதல் படியாக அமையவேண்டும்.

ராகுல் பிரச்சாரத்திற்கு வந்து திமுகவின் தோல்வியை உறுதிப்படுத்த விரும்புகிறோம். இவருடைய பேச்சை ஆங்கிலத்தில் தப்புத் தப்பாக மொழி பெயர்த்து கூறி மக்களுக்கு சிரிப்பு மூட்ட தங்க பாலு போன்ற ஒருவர் கூடவே இருக்க வேண்டும். எங்களுக்கும் நல்ல என்டர்டெயின்மென்ட் கிடைக்கும்.