தி.மு.க.,விற்கு போட்டியாளரே கிடையாது: சொல்கிறார் பன்னீர்செல்வம்
சிவகங்கை: தமிழக சட்டசபை தேர்தலில் இன்றைய சூழலில் தி.மு.க.,விற்கு தகுதியான போட்டியாளரே கிடையாது என காளையார்கோவிலில் தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் அவர் கூறியதாவது: 5 ஆண்டு காலம் தமிழகத்தின் முதல்வராக இருந்து ஸ்டாலின் ஆற்றிய பல்வேறு திட்டங்கள் நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கிற திட்டங்களாக உள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராக வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
இன்றைய அரசியல் சூழலில் தி.மு.க.,விற்கு எதிராக எந்த அரசியல் கட்சியும் போட்டியிடக்கூடிய தகுதி இல்லை.
அண்ணாதுரை ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
பழனிசாமி ஒரு சுயநலவாதி. ஒரு தலைவர் அனைத்து மக்களையும் அனைவரையும் அரவணைப்போடு நடத்திச் செல்ல வேண்டும்.
அந்த பண்பாடு பழனிசாமியிடம் இல்லை. அ.தி.மு.க.,வை படுகுழியில் தள்ளியவர் பழனிசாமி. அ.தி.மு.க.,வை எங்கு கொண்டுபோய் அடகு வைத்துள்ளார்கள் என்பதை நாட்டு மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
சாதாரண தொண்டனாகத் தான் தி.மு.க.,வில் இணைந்து இருக்கிறேன். விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளார். சட்டசபை தேர்தலில் தனித்துத்தான் போட்டியிடுவோம் என்று சொல்லியிருக்கிறார்.
மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆட்சியாக ஸ்டாலின் ஆட்சி இருக்கிறது என்றார்.
Advertisement
இப்படிப் பேசினால்தான் அதிமுகவுக்கு அனுதாப வாக்குகள் கிடைக்கும் என்று திட்டமிட்டு பேசுகிறாரோ ????
ஐயா பன்னீர் அவர்களே எல்லாரும் எப்படி உங்களை கழுவி ஊத்தறாங்களே இதையெல்லாம் படித்து பார்த்துட்டு ....
இந்த மனிதரை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் ஒரு முறை பார்த்தேன் தியானம் செய்து கொண்டு உட்கார்ந்து இருந்தார் கூடவே ஒரு பத்து அல்ல கைகள் காசு கொடுத்து கூட்டி வந்திருப்பார். இவருக்கெல்லாம் சாமி தரிசனம் தேவைதானா.
விபூதி குங்குமம் நெற்றியில் ஆனால் சேர்ந்திருப்பது நாஸ்திக கட்சி. சிகப்பு எல்லைக்கு பதிலாக கருப்பு சிவப்பு வண்ணத்தில் பூசிக் கொள்ளுங்கள்.
இந்த நேரத்தில் மகாகவி பாரதியாரின் மறவன்பாட்டு கவிதையில் வரும் நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு என்ற வரிகள்தான் நம் ஞாபகத்திற்கு வருகிறது!
ஏற்கனவே வடிவேலு ஒரு முறை திமுகவுக்கு பிரச்சாரம் செய்து திமுகவை படுகொலையில் தள்ளினார். இப்போது மறுபடியும் வடிவேலு திமுக ஆதரவாக தளத்தில் உள்ள கூடவே பன்னீர்செல்வம் இரண்டு பேரும் சேர்ந்து திமுகவை காலி செய்ய போகிறார்கள்.
அடகு வைத்துள்ளனர் என்ற புளித்துப்போன வார்த்தைகளை உபயோகிப்பதை விட்டுவிட்டு புதியதாக ஏதாவது சொல்லுங்கள்.

உன் நிலையை நினைத்தா பரிதாபமா இருக்கு பண்ணீரு...