Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


 த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சு நடக்கவில்லை: பழனிசாமி

 த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சு நடக்கவில்லை: பழனிசாமி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருச்சி: தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் த.வெ.க., வருவது குறித்து எவ்வித பேச்சும் நடக்கவில்லை,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார்.


திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசு, தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். ஆனால், பிரதமர் மோடி, ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வரும் போதும், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கொடுக்கிறார்; தி.மு.க., ஆட்சியின் அவலங்களையும் எடுத்துக் கூறி வருகிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் த.வெ.க. வருவது குறித்து எவ்வித பேச்சும் நடக்கவில்லை. வெளியில் தான் செய்திகள் பரவி உள்ளன. எனக்கு தெரியாமல், யாரிடமும் யாரும் பேச மாட்டார்கள்.

டில்லிக்கும், தமிழகத்துக்குமான தேர்தல், என்று ஸ்டாலின் கூறிக் கொண்டிருக்கிறார். நடப்பது தமிழக சட்டசபைக்கான தேர்தல்.

அப்படியிருக்கும்போது, டில்லியை எங்கேயிருந்து கொண்டு வந்து சேர்க்கிறார் ஸ்டாலின். அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. துரதிர்ஷ்டவசமாக, அவர் கையில் முதல்வர் பதவி சிக்கி உள்ளது.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மீது யாரும் குறை சொல்ல முடியாது. அ.தி.மு.க., ஆட்சி பொற்கால ஆட்சி. ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் சிறப்பாக செயல்பட்டு உள்ளோம்.

எங்களை எதிர்த்து, நேரடியாக மோத முடியாத ஸ்டாலின், ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க., தொண்டர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது என சிலர் கூறுகின்றனர்.

அவர்கள் நிலைதான் பரிதாபமாக உள்ளது. நித்திய கண்டம்; பூரண ஆயுசு என்பது போல், 20 நாட்களாக காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.,வும் வார்த்தைப்போர் நடத்தி போராடிக் கொண்டிருந்தன.

தி.மு.க., தற்போது கெஞ்சாத குறையாக, காங்கிரசுடன் பேசி கூட்டணியை முடிவு செய்து இருக்கிறது. இதில், தி.மு.க., எவ்வளவு கேவலப்பட்டது என உலகத்துக்கே தெரியும்.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை நடக்காத நாட்களே இல்லை. ஆனால், அது குறித்த செய்திகள் பெரிதாக வெளியாவதில்லை. இவ்வாறு பழனிசாமி கூறினார்.

Advertisement

மார் 12, 2026 01:42 pm

கூட்டணி பேச்சு என்பது த வெ க வின் புரளி ~

Reply Rate this
மார் 12, 2026 09:16 am

மிஸ்டர் பேராசை, விஜய் கூட்டணிக்கு வருவதற்கு பாஐக எல்லாவித பிரம்ம பிரயத்தனமும் செய்து கொண்டிருக்கிறது. உன்னை மட்டுமே நம்பினால் அடுத்த ஆட்சியும் காட்டுமிராண்டிகளிடம் போய்விடும். நீ இருப்பவனையெல்லாம் கழிட்டுவிட்டு உன்னுடைய மகனையும் சம்பந்தியையும் வைத்து கொண்டு பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறாய். உன் ஆணவம் அடங்கட்டும்.

Reply Rate this
மார் 12, 2026 08:41 am

மக்களே இவரை அடுத்த முதல்வராக்க நினைத்தாலும் இவர் தனக்கு அது வேண்டாம் என பிடிவாதமாக இருப்பார் போல. இவரின் இத்தகைய நடவடிக்கைகள் அதிமுக காரனே திமுகவிற்கு ஓட்டுப்போட செய்துவிடும்

Reply Rate this
மார் 12, 2026 08:30 am

நடிகர் ஜோசப் விஜய் அவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு tvk ntk கூட்டணியில் சேர்ந்தால் அவர் துணை முதல்வர் ஆகலாம், தீயமூக 20 இடங்களில் கூட வெற்றி பெறாது, அப்புறம் என்ன தீயமூக தேயமூகவாக மாறி விடும், அதன்பின் நான்கு ஆண்டுகளில் கட்சியை வலுவானதாக மாற்றி விட்டு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விசிக இணைத்து எப்போதும் போன்று மதசார்பின்மை பேசி வெற்றிகரமான அரசியல் நடத்தலாம் .... பிஜேபி கட்சியை எதிர்ப்பது மட்டுமே மதசார்பின்மை அரசியல் என்ற மந்திரம் உள்ளவரை யார் வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் அரசியல் செய்யலாம் ....

Reply Rate this
மார் 12, 2026 08:29 am

விஜய் உடன் கூட்டணி வைத்து அவர் முதுகில் ஏறி அவரையே குத்த நினைக்கும் இவருடன் எப்படி தவெக கூட்டணி வைக்கும்

Reply Rate this
மார் 12, 2026 08:07 am

ஒரு கட்சியை வழிநடத்தும் எந்தவொரு தகுதியும் இல்லாத தலைவர்

Reply Rate this
மார் 12, 2026 07:58 am

அதிமுகவை ரொம்ப அடிமையாக நடத்த வேண்டாம்

Reply Rate this
மார் 12, 2026 07:47 am

எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு வெற்றி வாய்ப்பை குறைத்து விட்டார், இனி தோல்வி பழியை பிஜேபி மீது போட வேண்டியது தான் பாக்கி

Reply Rate this
மார் 12, 2026 07:45 am

என்னையா இன்னும் கருத்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.

Reply Rate this
மார் 12, 2026 06:18 am

விஜயுடன் பேச நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது. எடப்பாடி, விஜய்க்கு இந்த அரசியல் உறவு பயன் தரும். திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று இலக்கு வைத்து, கூட்டணி மந்திரிசபையை அதிக விலை கொடுத்து தவிர்த்து விட்டது. திமுக, காங்கிரஸ் கட்சியின் முடிவு தேச விரோத சக்திகள். வடிவமைப்பு தான். திமுக வென்றால், நிலைமை கடுமையாக இருக்கும்.

Reply Rate this