சிறுபான்மையினர் ஓட்டுக்காக பிரித்தாளும் சூழ்ச்சி; தி.மு.க., மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
சென்னை: ''சிறுபான்மையினரின் ஓட்டுக்காக, அவர்களை பிரித்தாளும் சூழ்ச்சியை தி.மு.க., அரசு செய்கிறது; அதை முறியடிக்கும் வகையில், வேலுார் இப்ராஹிம் அற்புதமான நுாலை எழுதியுள்ளார்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பா.ஜ., சிறுபான்மை அணி தேசியச் செயலர் வேலுார் சையத் இப்ராஹிம் எழுதிய, 'பாரதம் 2014க்கு முன் - பின் இஸ்லாமியர்களின் நிலை' என்ற நுால் வெளியீட்டு விழா, சென்னை தி.நகர் கமலாலயத்தில் நேற்று நடந்தது.
நுாலை, நயினார் நாகேந்திரன் வெளியிட, முன்னாள் கவர்னர் தமி ழிசை பெற்றுக் கொண்டார். பா.ஜ., மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் ஹண்டே உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
தமிழிசை பேசும்போது, ''இஸ்லாமியர்கள் இடையே வேற்றுமையை ஏற்படுத்தி கொண்டிருப்பது, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் தான். குழந்தைகள் பர்தா அணிந்து செல்வதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கும். அழகான ஆடை அணிந்திருப்பர்; அதைக்கூட வெளியே தெரியாமல் மறைத்திருப்பர். இதை பற்றி பேசினால், மதத்திற்கு எதிராக பேசுகின்றனர் என்று கூறுவர்,'' என்றார்.
அதிகம் கடன்
நயினார் நாகேந்திரன் பேசியதாவது: சிறுபான்மையினரின் ஓட்டுக்காக, அவ்வினத்தவரை பிரித்தாளும் சூழ்ச்சியை தி.மு.க., அரசு செய்கிறது. அதை முறியடிக்கும் வகையில், வேலுார் இப்ராஹிம் அற்புதமான நுாலை எழுதியுள்ளார்.
முத்தலாக் சட்டம், வக்ப் சட்டம் என எந்த சட்டமாக இருந்தாலும், ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழ்வதற்காகத் தான் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின், 'முத்ரா' கடன் திட்டத்தில், இஸ்லாமியர்கள் அதிகம் கடன் வாங்கியுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
வேலுார் சையத் இப்ராஹிம் பேசியதாவது: என் வாழ்வில், நான் கத்தியின் மீது நடந்து கொண்டிருக்கிறேன்; எந்த நேரம் வேண்டுமானாலும், எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கும் என்று தெரியும்.
லட்சியம்
எனக்கு பாதுகாப்பு கொடுக்கிற போலீசார் முதல் உயர் அதிகாரிகள் வரை சொன்னது, 'ரொம்ப உஷாராக இருங்கள்; பாதுகாப்பு கொடுத்திருக்கிறோம்' என்கின்றனர்.
நான் சொன்ன கருத்துகள், அனைத்து மக்களிடமும் போக வேண்டும் என்பதற்காகத் தான், இந்த நுாலை எழுதியுள்ளேன். பா.ஜ.,வில் தேசத்திற்காக உழைக்கிற ஒரு இஸ்லாமியனாக இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் உள்ளேன்.
இஸ்லாமியர்கள் மத்தியில் எந்த கொள்கை அரசியலும் செய்யாமல், எது சத்தியமோ, தர்மமோ, எது உண்மையோ, அதை எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement
சிறுபான்மை ஓட்டு கட்டளை அடிப்படையில் வாக்கு வங்கி ஆகிறது. பெரும்பான்மை சாதி ஓட்டு சாதி தலைவர்கள் விருப்பம் போல் சாதி வாக்கு வங்கியாக மாறுகிறது. அதிக வாக்கு தீர்மானிப்பது பாராளுமன்ற உறுப்பினர்கள். அதிக குறைந்த வாக்கு விகிதம் தீர்மானிக்கும் முறை அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்கள் தேர்தலில் இருக்க வேண்டும்.
அன்று முகம்மது கஜினி காலத்திலும் பாபர் காலத்திலும் கோரி காலத்திலும் திப்பு சுல்தான் காலத்திலும் கூட்டமாய் வந்து கொன்று போட்டனர் இன்றும் கூட்டமாக போயி வோட்டு போட்டு நாட்டை சிதைத்து கொண்டே இருக்கின்றனர் , சொந்தமாக யோசிக்கும், பகுத்தறியும் திறனை இந்துக்கள், கிருஸ்துவர்கள் இழந்து விட்டதால் அவர்கள் ஆடுகின்றனர்
திரு. வேளூர் சையத் இப்ராஹிம் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்த திமுக, காங்கிரஸ், அனைத்து இண்டி கூட்டணி கட்சிகள் மற்ற திராவிட கட்சிகள் அனைத்தும் சிறுபான்மையினர் என அழைக்கப் படும் இஸ்லாமியர் கிருஸ்தவர்களை பார்த்தால் ஓட்டுகளாக தான் பார்க்கின்றன மனிதர்களாக பார்பது இல்லை ஒரு ஓட்டு வருகிறது போகிறது உட்காருகிறது நடக்கிறது ஓடுகிறது தூங்குகிறது என பார்க்கிறார்கள் சகோதர சகோதரிகளாக பார்பது இல்லை அவர்கள் தவறான வழியில் நடந்தாலும் தவறுகள் செய்தாலும் கண்டு கொள்வதில்லை அவர்களை சமூகத்தின ஒரு அங்கமாக பார்பது இல்லை மாறாக ஓட்டு வங்கிகளாக தான் பார்க்கின்றனர். அவர்களும் ஈனமாணம் இல்லாமல் இந்த திராவிட காங்கிரஸ் இண்டி கூட்டணி கும்பல்களுக்கு தான் மொத்தமாக ஓட்டு போடுகின்றனர் இந்த நிலை மாற வேண்டும். இஸ்லாமிய கிருஸ்தவர்கள் இனி பாஜக வுக்கு ஓட்டு போட்டு பாருங்கள் இந்த ஓட்டு பொறுக்கி கூட்டங்கள் உங்களை சக குடிமக்களாக பார்க்கும் நிலை உருவாகும் மதிப்பும் இருக்கும் இதுகளும் ஓரளவு திருத்தும்.

சிந்திக்கும் திறனிழந்து விட்டால் சிறுபான்மை, பெரும்பான்மை என்பதெல்லாம் கிடையாது.