கட்சி தாவுகிறது முஸ்லிம் ஓட்டு!
- புதுமடம் ஜாபர் அலி -
pudumadamjaffar1968@gmail.com
தி.மு.க., சிறுபான்மை ஓட்டு வங்கியை தக்க வைப்பதற்காகவே, சட்டசபை தேர்தலில் கூட, தனது முதன்மை எதிரியான அ.தி.மு.க.,வை விட, பா.ஜ.,வையே முன்னிறுத்தி அரசியல் செய்துகொண்டு இருக்கிறது.
தேசிய அளவில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் சிறுபான்மையினர் ஓட்டு வங்கி அரசியலை செய்கின்றன. மாநில அளவில் தி.மு.க., செய்கிறது. மற்ற கட்சிகளும் முயற்சிக்காமல் இல்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், கட்சி துவங்கிய நடிகர் விஜய் கூட, தன் கட்சி சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில், குல்லா அணிந்து, 'மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்' என்று பேசி இருக்கிறார்.
ஒட்டுமொத்த முஸ்லிம் ஓட்டும், சிந்தாமல் சிதறாமல் தி.மு.க.,விற்கே விழ வேண்டும் என்ற கணக்கில் தான், கடந்த முறை அ.தி.மு.க., வோடு கூட்டணி வைத்த எஸ்.டி.பி.ஐ.,யையும் விடாமல், அனைத்து முஸ்லிம் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்த்து, தி.மு.க., தனது கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. இதற்கு காரணம், முஸ்லிம்கள் மத்தியில் மாறி வரும் கள நிலவரம் தான்.
நிறைவேறாத வாக்குறுதிகள்
முஸ்லிம் மக்களின் பாதுகாவலனாக தி.மு.க., தன்னை காட்டிக் கொண்டாலும், கடந்த தேர்தலின் போது கொடுத்த சிறுபான்மை சமூக வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை.
முஸ்லிம் தலைவர்கள் பெயரில் மணிமண்டபம், அரசு விழாக்கள், அரசு விடுமுறை அறிவிப்பு, ஹஜ் யாத்திரைக்கு அரசு மானியம், இப்தார் விருந்து, நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி, சந்தனக்கூடுக்கு சந்தனம் போன்ற அடையாள நிகழ்ச்சிகள் என, சிறு சிறு சலுகைகளை தான் முஸ்லிம்களுக்கு தி.மு.க., செய்திருக்கிறது.
முஸ்லிம்களின் பொருளாதாரத்தை உயர்த்தப் போகிறோம் என்ற அறிவிப்புகள் எல்லாம் வெற்றுக் கூச்சல்களாகவே இருக்கின்றன.
இன்றைக்கும் தமிழகம் முழுதும் மோசமான சாலைகள், தரமான பள்ளிகள், கல்லுாரிகள், தொழிற்சாலைகள், வங்கிகள் இல்லாத பகுதிகள்தான் முஸ்லிம்களின் வாழ்விடமாக அறியப்படுகின்றன.
முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த சச்சார் கமிஷன், அமிதாப் குண்டு கமிஷன் போன்ற பல்வேறு கமிட்டிகள் முன்வைத்த பரிந்துரைகளை நிறைவேற்ற, எந்த அரசும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
முஸ்லிம் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படையாக எடுத்தாலும், அவர்களோடு கைகோர்த்து செயல்பட்டால், பெரும்பான்மை மக்களின் ஓட்டுகளை பெற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமும் தி.மு.க., - காங்கிரஸ் போன்ற கட்சிகளிடையே இருக்கிறது. இது, அவர்களின் வேட்பாளர் தேர்விலேயே வெளிப்படுகிறது.
இன்றைய முஸ்லிம் இளைஞர்களுக்கு, மற்ற சமூகங்களை போல், தாங்கள் முன்னேற்றம் அடையவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது.
உடையும் ஜமாத் கட்டமைப்பு
எல்லா மதங்களிலும் ஏற்பட்டுள்ள தலைமுறை மாற்றம், இப்போது முஸ்லிம் சமூகத்திலும் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் இளைஞர்களும், இளம்பெண்களும் ஜமாத் கட்டமைப்பை உடைத்து, தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு ஓட்டு போட ஆரம்பித்துவிட்டனர்.
ஓட்டு போடுவது மட்டுமின்றி, முஸ்லிம் பெண்கள் இப்போது நாம் தமிழர், த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளில் வெளிப்படையாக செயல்படவும் ஆரம்பித்துள்ளனர்.
இவ்வளவு நாளாக முஸ்லிம்களுக்கு ஆதரவும் நல்லிணக்கமும் அளித்து வந்த ஈ.வெ.ரா., அமைப்புகளே அதிர்ச்சியடையும் வகையில், முஸ்லிம் இளைஞர்கள், ஈ.வெ.ரா.,வுக்கு எதிராக பேச ஆரம்பித்து விட்டனர். இதற்கு, முஸ்லிம் அமைப்புகளிடம் இருந்து போதிய எதிர்வினை இல்லை என்ற கவலை ஈ.வெ.ரா., சார்ந்த அமைப்புகளிடம் இருக்கிறது.
இதனால் சில கட்சிகளின் ஐ.டி., விங்குகள், சீமானையும் விஜயையும் ஆதரிக்கும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு சமூக வலைதளங்களில் காட்டமாகப் பதிலளித்து வருகின்றன. எதிர்காலத்தில் இதன் விளைவு எவ்வாறு இருக்கும் என்று முஸ்லிம் பெரியவர்கள் கவலை கொள்ள ஆரம்பித்து விட்டனர்.
இளைஞர்கள் மத்தியில் முஸ்லிம் கட்சிகள் மீதான நம்பகத்தன்மை போய்விட்டது. ஒன்று அல்லது இரண்டு சீட்டுகளை பெற்று, தலைவர்கள் மட்டும் எம்.எல்.ஏ., ஆகி விடுகின்றனர்.
மற்றவர்களுக்கான வாய்ப்பு, குறிப்பாக பெண்களுக்கான வாய்ப்பு மிக மிக குறைவு. ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே பெண்கள் அழைத்து வரப்படுகின்றனர் என்ற விரக்தியாலேயே சீமான், விஜய் ஆகியோரை நோக்கி இளைஞர்கள் நகர்கின்றனர்.
அமைப்புகளுக்கு அப்பாற்பட்ட, எந்த கட்சியின் சாயலும் இல்லாத ஐந்து வேளை தொழுகை, தானுண்டு தன் வேலையுண்டு என இயல்பான வாழ்க்கையில் இருக்கும் முஸ்லிம் மக்களே அதிகமாக இருக்கின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் தான், நாம் தமிழர் கட்சிக்கும், த.வெ.க.,விற்கும் ஆதரவாக ஓட்டு போட தயாராகிவிட்டனர்.
நாம் தமிழர் கட்சி, ஏற்கனவே 10 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதுடன், கணிசமான ஓட்டுகளையும் பெற்றுள்ளது. சீமான் தொடர்ந்து இஸ்லாமியர்கள் பிரச்னையை பற்றி பேசுகிறார், அவர்களுடன் நெருக்கமாக இருக்கிறார்; ஆனால் குல்லா அணிவதோ, கஞ்சி குடிப்பதோ இல்லை. மறுபுறம் நடிகர் விஜயும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.
இதனால், ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் ஓட்டும் சிந்தாமல் சிதறாமல் தி.மு.க., கூட்டணிக்கே விழும் என்பதெல்லாம் பழங்கதையாகிக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் ஓட்டுகளை மொத்தமாக 'வாங்கிவிடலாம்' என்ற பேக்கேஜ் நம்பிக்கையை, இளம் தலைமுறை முஸ்லிம்கள் மாற்றி வருகின்றனர்.
Advertisement
முஸ்லிம்கள் ஒட்டு 90% dmk வுக்கு தான் விழும் . இடையில் ஒரு சில லெட்டர் படு கட்சிக்காரர்கள் பணத்துக்காக எதிர் அணி உடன் கூட்டணி பேசுவார்கள் . இது ஒவ்வொரு தேர்தலுக்கும் நடந்து கொண்டு தான் இருக்கிறது . அப்படி ஒட்டு இல்லாமல் தனியாக விடுபட்டவர்கள் தான் வேல் முருகன் , கிருஷ்ணசாமி , தமிழரசன் போன்றவர்கள் . ஆனாலும் இந்த தேர்தலில் 3 முதல் 4 கட்சிகள் வரை இரண்டு கூட்டணியிலும் இடம் பெற்று விட்டனர் . இவைகள் தேவை இல்லாத ஆணிகள்
தீ மு க்கா வின் குறளி வித்தை புஸ் ஆயிடுச்சி இது எதிர் பார்த்துதான். மோடி அரசால் முஸ்லீம் களின் தலாக் சட்டம் கொண்டு வந்த போது ஸ்டாலின் ஆதரிக்க வில்லை. இதுவும் பெண்கள் மத்தியில் வருத்த்தை கொடுத்திருக்கு . தவிர உ.பி. காங்கரஸ் இண்டி கூட்டணியாய் தோற்க முஸ்லீம் கள் ஓட்டுக்கள் ஆதரவுடன் தேர்தலில் யோகி தான் ஜெயித்தார். இதை ஸ்டாலின் சீர் தூக்கி பார்க்க வில்லை. அது உ.பி. இங்கு தமிழ் நாட்டில் யேமாற்ற நினைதத்தார். இப்போது விஜயின் கட்சியை யம் சீமான் கட்சியையும் தீ மு கா ஆடிய ஆட்டத்தைய ஆடி பார்க்கிறார்கள். மோடி பொத்திய காட்டி இனி முஸ்லிம்களைய்ய ஏமாற்ற முடியாது. உலகளவில் இந்திய திரு நாட்டில் அடுத்த முஸ்லீம் நாட்டைய விட நிம்மதியாக இருக்க முடிகிறது. காங்கரஸ் ஆட்சியென்றால் பிரித்தாளும் கொள்கையை கடை பிடிப்பார்கள். அதுவும் இப்போனது செல்லு படியாகாது உலக நடப்பு தெளிவாக காட்டி கொடுக்கும். தற்போனது உள்ள நிலையில் மோடியா தெளிவான உலகளாவிய கொள்கையால் நாம் இந்த ஈரான் போரினால் பொருளாதாரத்தில் மிகவும் கடின நிலையில் விலையேற்றதால் பாகிஸ்தான் உள்பட அண்டைய நாடுகள் கஷ்ட படுகிறார்கள். நம் நிலையய் மோசமாக வில்லை. அது மட்டுமல்ல அண்டைய நாடுகளுக்கு நாம் பெட்ரோலிய பொருட்களியையையும் அனுப்புகிறோம். சில நாடுகளுக்கு உணவு மருந்து போனற அத்தியாய பொருட்ட்களையும் அனுப்புகிறோம். யாதென காங்கரஸ் ஆட்சியில் இருந்தால் நாம் அமெரிக்கவைய வலி மொழிந்து போனார் சூழலில் மாட்டி கொண்டிருப்போம். இப்போதும் கெட்ட எண்ணம் கொண்ட கான்க்ரஸ் தலைமை ஏன் அமெரிக்கா பக்கம் சாய வில்லை என்று கிண்டி கொண்டிருக்கு.
இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதிகளில் வங்கிகள் பெரும்பாலும் இருக்காது. அதற்கு காரணம் அந்த சமுகத்தில் உள்ள கள்ள நோட்டு புழக்கம்தான். வங்கிகளுக்கு அது ஒரு தீராத தலைவலி.
I dont think, majority of the DMC, Dalits, Muslims and Christians will vote for NTK or TVK.
They know, voting for TVK or NTK is as good as voting for BJP.
dont underestimate them.
இஸ்லாம் கிறிஸ்தவம் இரண்டுமே நாஸ்திகத்தை அறவே ஏற்பதில்லை..அவர்களை பொறுத்தவரை நாஸ்திகம் பேசுவது மரண தண்டனை விதிக்கப்பட வேண்டிய குற்றம்... அப்படி இருக்க நாஸ்திகத்தை உயிர் மூச்சாக உடைய திராவிடத்தை ஆப்ரஹாமியர்கள் ஆதரிப்பது என்பதே அடிப்படை முரண் மட்டுமன்றி அவர்களின் மதத்துக்கு எதிரான கடுமையான குற்றமாகும்..நாஸஸ்திகத்தை ஆதரித்த அவர்களுக்குத்தான் அவர்கள் மதப்படி முதல் தண்டனை தரப்படவேண்டும்.... இப்படி கட்டுரைகள் எழுதுவதால் என்ன மாற்றம் ஏற்பட போகிறது? சந்தர்ப்ப வாதத்தை ஆப்ரஹாமியர் ஏற்கவில்லை என்ற ஒரு சப்பைக்கட்டுக்கு வேண்டுமானால் இது உதவலாம்.. இவர்களுக்கு உண்மையான மதப்பற்று இருந்தால் திராவிடத்தை எதிர்க்க வேண்டும் அல்லது அவர்களை நாஸ்திக வாதத்தை கைவிடச் செய்யவேண்டும். இதை செய்யாதவரை கட்டுரைகள் எழுதி எந்த ஒரு புண்ணியமும் இல்லை..
இது திமுகவுக்கு சோதனைதான் எத்தனை காலம்தான் ஏமாற்ற முடியும். அவர்கள் கிழித்து கொண்டார்கள்

முஸ்லிம் அரசியல்வாதிகள் மிகவும் பிற்போக்கான அரசியலை செய்கிறார்கள். தீவிரவாதத்தை எதிர்க்கவும், சமூக மற்றும் பெண் கல்வியை ஊக்குவிக்கவும் அந்த சமூகம் செய்யவேண்டும். இரண்டு குழந்தை திட்டத்தை சமூகத்தில் கடைபிடித்தால் சமூக பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு உயரும். இந்த சமூக அரசியல்வாதிகள் மேற்கண்ட செயல்களை ஏதாவது செய்தார்களா என்று பார்த்து வோட்டு போட வேண்டும்.