வலுவான கூட்டணியால் வெற்றி: அமைச்சர் கூறுகிறார்
மதுரையில் பல நாட்களுக்கு பின், அமைச்சர் தியாகராஜன் நிருபர்களை சந்தித்தார். வேட்பு மனு தாக்கல் முடிந்து வெளியில் வந்த அவர் கூறியதாவது:
பத்தாண்டுகள் அ.தி.மு.க., ஆண்ட காலத்தில் செய்ததைவிட, கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சியில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். அதனால் பொருளாதார ரீதியாக நல்வாழ்வு, கல்வி, வேலைவாய்ப்பு என பல்வேறு துறைகளிலும் சாதனை குறியீட்டில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது.
கடந்த முறை எங்களை எதிர்த்து நின்ற, தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், எஸ்.டி.பி.ஐ., கட்சிகள் இப்போது எங்களுடன் உள்ளனர். அதனால் கடந்த முறை இருந்ததைவிட இன்னும் வலுவான கூட்டணியாக உள்ளோம். இந்த வலுவான கூட்டணியால் வெல்வோம். எங்கள் வெற்றிக்கு காரணமாக உள்ள ஐந்தாண்டு கால சாதனைகளை பிரசாரத்தில் எடுத்துரைப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Advertisement
இவர் படித்தவர் நியாயப்படி நடந்து கொள்வார் என நினைத்தால் 30000/= கோடி அடித்தான் என்று சொன்ன கட்சியிலேயே நின்றால் படித்தும் உபயோகம் இல்லை என்று தெரிகிறது.
இரண்டு வருடங்களில் 30000 கோடி அடித்து என்ன செய்வது தெரியாது என்று மகன் மச்சாங்கெ இருக்காங்கேன்னு பகாரை விடியோவில் விட்ட உத்தமன் மீண்டும் அதேகட்சியிலே வேட்பாளராம்.
ஐயா முதலில் நீங்க ஜெயிக்கிற வழிய பாருங்கள். மூர்த்தி ஆளுங்க உள்ள வாராக

அப்போ நீங்க ஏதும் நல்லது பண்ணி வெற்றி பெரல கூட்டணியால் தான் வெற்றி படிச்சவன் பொய் பேசமாட்டாயா....