Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


பிடிஆர் என்ன எம்ஜிஆரா: கேட்கிறார் சுந்தர்.சி.

பிடிஆர் என்ன எம்ஜிஆரா: கேட்கிறார் சுந்தர்.சி.
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மதுரை: பிடிஆர் என்ன எம்ஜிஆரா? திமுகவின் பலமே பலமாக இருப்பதாக காட்டுவது தான் என தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி கடுமையாக சாடி உள்ளார்.

மதுரையில் நடந்த தே.ஜ.கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் சுந்தர்.சி பேசியதாவது: சென்னையில் இருந்து நான் கிளம்பும்போது என்னிடம் கேட்டார்கள். எதிர்க்கட்சி வேட்பாளர் இரண்டு முறை எம்எல்ஏவாக இருக்கிறார். இந்த முறை அமைச்சராக இருக்கிறார். ரொம்ப பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்.

அரசியல் செல்வாக்கு மிக்கவர். கட்சியின் தலைமைக்கு மிகுந்த நெருக்கமானவர். இவரை எதிர்த்து எல்லாம் ஜெயிக்க முடியுமா என்று கேட்டார்கள். நான் பதில் சொல்கிறேன் என்று சொன்னேன். இப்பொழுது உங்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு மிகப்பெரிய தைரியம் வந்துவிட்டது.

அந்த கேள்விக்கான பதில் இப்பொழுது தான் எனக்கு தெரிகிறது. அவரை ஜெயிக்கவே முடியாது என்று சொல்வதற்கு எம்ஜிஆரா? பிடிஆர் தானே? திமுகவின் பலமே தங்கள் பலமாக இருப்பது போல் காட்டிக் கொள்வது தான். அவர்கள் பலமாக இருந்தால் எதற்கு கூட்டணி தேவை? ஒன்று சொல்கிறேன் கூட்டமாக இருப்பது எல்லாம் கூட்டணி கிடையாது.

கூடியிருப்பது தான் கூட்டணி. நமது கூட்டணி மாதிரி. அன்பால், கொள்கையால் சேர்ந்த கூட்டணி. அந்தக் கூட்டணியில் குழப்பம், வேட்பாளர்கள் மாற்றம் என பல இருக்கிறது. என் பாசையில் சொல்லப் போனால் பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு. இவ்வாறு சுந்தர்.சி பேசினார்.

Advertisement

ஏப் 07, 2026 09:41 pm

தியாகராஜன் வெளிப்படையாக 30,000 ஊழலை சொல்லப்போக அவருக்குநிதி அமைச்சர் பதவியே பறிபோனது அவரை எதோ பொம்மைபோல ஒரு அமைச்சராக இந்த திராவிட மாடல் அரசு வேடிக்கை அழகு பார்கிரது ஏனென்றால் அவரின் மூதாதையர்கள் கட்சிக்கு பலன் நிறைய தியாகம் செய்துள்ளார் என்ற ஒரே நம்பிக்கைதான் இவருக்கு மதுரையிலேயே இவர் தொகுதியிலேயே உள்குத்து அதிகம் ஆதலால் சுந்தர்.சி இங்கே ஜெயிப்பது நிச்சயம்.

Reply Rate this
ஏப் 07, 2026 07:54 pm

பூனம் பாஜ்வா உங்களுக்காக தேர்தல் பிரச்சரம் பண்ண வருவாரா ?

Reply Rate this
ஏப் 07, 2026 07:17 pm

கவலை வேண்டாம். PTR வாய்மலர்ந்து சொன்ன ஒரு செய்திக்காக அவரை நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து உதவாத இலாக்காவுக்கு மாற்றி விட்டார்கள். அவர்சொன்னத்தை இன்றும் எதிர் கட்சிகள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆதலால் தலைமை இந்நேரம் தொண்டர்கள் மூலமாக அவரை கவிழ்ப்பதற்கு ஏற்பாடு செய்து இருப்பார்கள். ஏற்கனவே அங்கு கோஷ்டிச்சண்டை நடந்துகொண்டு இருக்கிறது. சும்மா மெல்லுகிற வாய்க்கு இப்போது அவள் கிடைத்ததுபோல் ஆகிவிட்டது. PTR க்கு உள் குத்து வேலை நடக்கிறது ஆதலால் அவரால் ஜெயித்து வருவது கஷ்டம்

Reply Rate this
ஏப் 07, 2026 06:31 pm

சபாஷ் சுந்தர் சி . அருமையான பேச்சு. கூட்டணி பற்றிய உங்களின் சிந்தனை மற்றவர்களின் பார்வையிலிருந்து மாறுபட்டுள்ளது. அவரும் நீங்களும் ஒரே சாதிதான். அதனால் அவருக்கு விழப்போகும் வாக்குகள் உங்களுக்கும் விழத்தான் போகிறது. மதுரை மக்கள் எம் ஜி யாரின் நிரந்தர ரசிகர்கள். அவர்களின் வாக்குகள் ஒருபோதும் திமுக பக்கமே செல்லாது. உங்கள் வெற்றி உறுதியானது.

Reply Rate this
ஏப் 07, 2026 06:15 pm

எம்.ஜி.ஆர் மாதிரி நீயும் ஒரு கூத்தாடி.

Reply Rate this
Saravanan - Madurai
உதயநிதி என்ன கூத்தாடி
ஏப் 07, 2026 06:54 pm
Rate this
Karunanithi, ஸ்டாலின், உதயநிதி, இவங்க எல்லாம் சுதந்திர தியாகிகளா? இவர்களும் சினிமா காரங்கதான்..
ஏப் 07, 2026 07:17 pm
Rate this