Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 விஜய் நம்பிக்கைக்குரியவராக தெரியவில்லை: பீயூஷ் கோயல்

 விஜய் நம்பிக்கைக்குரியவராக தெரியவில்லை: பீயூஷ் கோயல்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: 'த.வெ.க., தலைவர் விஜய் அடிக்கடி மாற்றி பேசுகிறார்; நம்பிக்கைக்குஉரிய நபராக தெரியவில்லை' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் கூறியுள்ளார்.
பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க., தலைவர் விஜயை சேர்க்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர முயற்சி மேற்கொண்டார்; இதற்காக நேரடியாகவும், தன் மகன் ஜெய் ஷா, மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் மற்றும் தனக்கு நெருக்கமானவர்கள் வாயிலாகவும் பேச்சு நடத்தினார்.

சமீபத்தில் திரைப்பட இயக்குநர் அட்லீ வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கவும், ஜனநாயகன் பட வெளியீடு தொடர்பாக பேசவும், விஜய் மும்பைக்கு சென்றதாக தகவல் வெளியானது. ஆனால், அங்கு அவர், மத்திய அமைச்சர் பீயூஷ் கோயலை சந்தித்துள்ளார்.

அப்போது விஜயுடன் நடந்த பேச்சு குறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம் பேசிய பீயூஷ் கோயல், 'என் சொந்த ஊரான மும்பையில் விஜயை அழைத்து பேசி, எத்தனை தொகுதிகள் வழங்கப்படும் என்பது பற்றி தெரிவிக்கப்பட்டது.

'அதை விட அதிகமாக கேட்பது அல்லது கூட்டணிக்கு வருவது, வராதது பற்றி விஜய் பேசி இருக்க வேண்டும். 'ஆனால், சம்பந்தம் இல்லாத விபரங்களையே விஜய் தெரிவித்தார். தான் பேசியதையே, அவர் அடிக்கடி மாற்றி மாற்றி பேசுகிறார். அவர், நமக்கு நம்பிக்கைக்குரிய நபராக தெரியவில்லை. அவர், கூட்டணிக்கு வராவிட்டாலும், தே.ஜ., கூட்டணி பலமாக உள்ளது' என தெரிவித்துள்ளார். இவ்வாறு அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

விஜய் தான் முதல்வர் வேட்பாளர், விஜய் தலைமையில் தான் கூட்டணி எங்களுக்கு 60 சீட் கொடுத்தால் போதும் என்று அதிமுக சொல்லியிருந்தாலும் அவர் கூட்டணி வைத்திருக்க மாட்டார் காரணம் திமுகவால் அப்படி ப்ரோகிராம் செய்யப்பட்டிருக்கிறார். சரியாக சொல்லவேண்டும் என்றால் தூரந்தர் படத்தில் ரன்வீர் சிங்குக்கு மாதவன் கொடுத்த அஸைன்மென்டை எப்படி நிறைவேற்றுகிறாரோ அதேபோல் திமுக வால் கொடுக்கப்பட்ட அஸைன்மென்டை விஜய் கச்சிதமாக செய்து வருகிறார்.. எப்படி 2021ல் கமல் ஹாசனோ அது போல் 2026ல் விஜய் அவ்வளவே.. இதில் பரிதாபத்திற்குறியவர்கள் விஜய் ரசிகர்களே.....!!!

Reply Rate this
மார் 24, 2026 08:49 am

இனி வரமாட்டார்னு முடிவயிடுச்சுனா, தறலெவலுக்கு இறங்கி திட்ட ஆரம்பிங்க..

Reply Rate this
மார் 24, 2026 07:37 am

avan pondattikae avan nambikkai uriyavana illa.

Reply Rate this
மார் 24, 2026 06:38 am

EPS சும் அப்படிதான் என்பது போக போக தெரியும்.

Reply Rate this
மார் 24, 2026 05:52 am

hmm trust EPS

Reply Rate this
மார் 24, 2026 04:56 am

"சீ, சீ இந்தப்பழம் புளிக்கும்" என்னும் கதையாக விஜய்யிடம் கூட்டணிக்கு நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலைந்து விட்டு, அது கைகூடாமல் போனவுடன் நம்பிக்கை இல்லாதவர் என்று குறை கூறுகிறார்கள். ஆமா, பியூஸ் போன பல்ப் ஸாரி கோயல் உங்கள் கட்சி நாட்டு மக்களுக்கு என்ன நன்மை செய்து விட்டது - கடந்த நாலேமுக்கால் வருடமாக திருட்டு ஊழல் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதைத் தவிர?

Reply Rate this