Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


 100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி

 100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி

மதுராந்தகம்:மதுராந்தகம் சட்டசபை தொகுதியில், 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மதுராந்தகம் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் உறுதிமொழி எடுத்தல் மற்றும் கையெழுத்து இயக்கம், பழைய நகராட்சி அலுவலகம் முன் நேற்று நடைபெற்றது.

இதில், சட்டசபை தொகுதிக்கான தேர்தல் மேற்பார்வையாளர் ராஜ பாபு, நகராட்சி கமிஷனர் சுகேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் நரேந்திரன், தாசில்தார் பாலாஜி துவக்கி வைத்தனர்.

100 சதவீதம் வாக்களிப்போம் என்ற தலைப்பில், நகராட்சி துாய்மை பணியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், 100 சதவீதம் வாக்களிக்கவும், வாக்கு உங்கள் கையில், வாக்களிப்போம் ஜனநாயகத்தை காப்போம், ஒவ்வொரு வாக்கும் நாட்டின் எதிர்காலம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

-------------------------------

Advertisement