Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 பொதுமக்களிடம் பா.ஜ., கருத்து கேட்பு

 பொதுமக்களிடம் பா.ஜ., கருத்து கேட்பு

செஞ்சி: தமிழக பா.ஜ., கட்சியினர் சட்ட சபை தேர்தலுக்கான அறிக்கை தயாரிக்க பொதுமக்களிடம் கருத்து கேட்டு வருகின்றனர்.

நேற்று செஞ்சி, ஆலம்பூண்டி, வளத்தி, அனந்தபுரத்தில் கருத்து கேட்டனர். அப்போது அனைத்து தரப்பு பொதுமக்களின் கருத்துகளை கேட்டு பதிவு செய்தனர்.

நிகழ்ச்சியில் தொகுதி அமைப்பா ளர் கோபிநாத், துணை அமைப்பாளர் அன்பழகன், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொதுச் செயலாளர் பாண்டியன், துணை தலைவர் ஏழுமலை, ஒன்றிய தலைவர் தாராசிங், முன்னாள் ஒன்றிய தலைவர் ராமு, வழக்கறிஞர் சுப்ரமணி, முன்னாள் ஊராட்சி தலைவர் ஏழுமலை, நிர்வாகிகள் பாபு, முருகன், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement