கூட்டணி கட்சிகள் போராட்டம்: தி.மு.க.,வுக்கு பா.ஜ., கண்டனம்
சென்னை: 'பாகிஸ்தானால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போது, குற்றவாளிகளை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் போராடவில்லை. ஆனால், சென்னையில் முழு போலீஸ் பாதுகாப்புடன், ஒரு போராட்டம் நடந்துள்ளது' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து, சென்னையில் நேற்று முன்தினம் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், வி.சி., தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
பாகிஸ்தானால் நடத்தப்பட்ட கோழைத்தனமாக பயங்கரவாத தாக்குதலில், பஹல்காமில் அப்பாவி இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும், குற்றவாளிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை கண்டித்து வீதிகளில் போராடவில்லை.
ஆனால், சென்னையில் நேற்று முன்தினம் முழு போலீஸ் பாதுகாப்புடன், ஒரு போராட்டம் நடந்தது. ஆசிரியர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு ஊழியர்கள் போராடினால் கைது செய்யப்படுகின்றனர்.
தி.மு.க.,வை பொறுத்தவரை, திருப்திபடுத்துதல் எப்போதும் அவர்களின் முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.bஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
இதுங்களை அரசு செலவில் Israeli க்கு அனுப்ப வேண்டும் , அங்கே போய் போராடட்டும் . ஒழியட்டும்.
தேசவிரோதிகளை வேட்டையாடுவதை விட்டுவிட்டு பாராளுமன்றத்துக்குள் அனுமதித்தால் ஒரு மாற்றமும் வராது.
ஒட்டு பிச்சை, ஒரு குறிப்பிட்ட மதம் உலகம் முழுக்க விஷத்தை கக்குகிறது, இது கூட தெரியாமல் இவர்கள் அரசியல் செய்வது வேடிக்கை, கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் க்கு ஆதரவாக போராட்டம் நடத்த வேண்டும்
இவர்களை உடனே அமெரிக்க நீதி மன்றத்தில் வழக்கை பதிவு செய்ய சொல்லலாமே முடிந்தால் இவர்களும் இந்த போரில் இறங்கலாம்
நடப்பது சிறுபான்மையினருக்காக அவர்களது ஓட்டுகளை அண்டிப்பிழைப்பவரின் காட்டாட்சி.வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

தமிழக இஸ்லாமியர்களில் பெரும்பாண்மை ஷன்னி பிரிவினர். இவர்களுக்கு ஷியா பிரிவு ஈரானிய இஸ்லாமியர்கள் பகையாளிகள். இது தெரியாமல் திருமா அவசரபட்டு.. திமுக விடம் அதிக சீட் கேட்க இப்படி ஒரு போராட்டம் நடத்தி இருக்கிறார்..