Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


தி.மு.க.,-காங்., கூட்டணி அமையுமா? இன்று தெரியும்!

தி.மு.க.,-காங்., கூட்டணி அமையுமா? இன்று தெரியும்!
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா அல்லது த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பதா என்பது குறித்து, காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களிடம், அக்கட்சியின் பொதுச்செயலர் வேணுகோபால் தனித்தனியாக கருத்து கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் தொகுதி எண்ணிக்கை தொடர்பான முடிவை வெளியிட, தி.மு.க.,வுக்கு இன்று இரவு வரை காங்கிரஸ் தலைமை கெடு விதித்துள்ளது. தி.மு.க., குழுவினரிடம், காங்கிரஸ் குழுவினர் நடத்திய சமீபத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால், தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
காங்கிரஸ் தரப்பில் கேட்கப்படும் 41 தொகுதிகளுக்கு பதிலாக, 25 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என தி.மு.க., தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா அல்லது த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பதா என்பது குறித்து, காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.

தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களிடம் கூட்டணி பற்றி கருத்து கேட்டு, தன்னிடம் கூறுமாறு, காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபாலுக்கு, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களிடம், வேணுகோபால் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்; ஒவ்வொருவரிடம் கூட்டணி குறித்து கருத்து கேட்டுள்ளார். அவற்றை தொகுத்து, ராகுலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஒன்பது பேரில், நான்கு பேர் மட்டும், தி.மு.க., கூட்டணியில் நீடிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். மீதமுள்ள ஐந்து பேர், த.வெ.க., கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்தனர்.

கூட்டணி நீடிக்க விருப்பம்



மொத்தமுள்ள 17 எம்.எல்.ஏ.,க்களில், ஆறு பேர் மட்டும் தி.மு.க.,வுடன் கூட்டணி நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 11 பேரும், டில்லி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறியிருக்கின்றனர்.

இது குறித்து, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது:
ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா சீட், உள்ளாட்சிகளில் ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை, தி.மு.க.,விடம் முன்வைத்துள்ளோம். 'ஆட்சியில் பங்கு தர மாட்டோம்; 25 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா பதவியும் தருகிறோம்' என சொல்கின்றனர்.

உள்ளாட்சி பதவிகளில் ஒதுக்கீடு குறித்து, சட்டசபை தேர்தலுக்கு பின் முடிவு செய்வோம் என தி.மு.க., குழு தெரிவித்து விட்டது. எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை என்பதால், முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் வாழ்த்து கூறுவதை, ராகுல் தவிர்த்தார். அவரை வலுக்கட்டாயமாக வாழ்த்து சொல்ல வைக்க, தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவர் முயற்சித்தார்.
அதன்படி, காங்கிரஸ் தலைவர் கார்கே பேசிய பின், நேற்று முன்தினம் மதியம் 1:30 மணிக்கு ராகுல் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் ராகுலுக்கு நன்றி தெரிவித்து, ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'சகோதரர் ராகுல்' என குறிப்பிடுவதை தவிர்த்து விட்டார்.
இதையடுத்து, 'இன்ஸ்டாகிராம், எக்ஸ்' வலைதளங்களில் முதல்வர் ஸ்டாலினை பின்தொடர்வதை, நேற்று ராகுல் நிறுத்தி விட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான 10 நாட்கள் பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. அதில் ராகுலும், வேணுகோபாலும் பங்கேற்றனர்.

இன்று இரவுக்குள் கெடு


சென்னையில் இருந்து சென்ற த.வெ.க., நிர்வாகி ஒருவர், அங்கு ராகுலையும், வேணுகோபாலையும் சந்தித்து பேசியுள்ளார். த.வெ.க., கூட்டணியில் காங்கிரசுக்கு 78 தொகுதிகள், 10 அமைச்சர், ஒரு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து பேசியிருக்கிறார்.

கேரளம், புதுச்சேரி தேர்தலில் காங்கிரசுக்கு த.வெ.க., முழு ஆதரவு அளிக்கும் என்றும், அம்மாநிலங்களில் காங்கிரசுக்கு ஆதரவாக விஜய் தீவிர பிரசாரம் செய்யவும் தயார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, தி.மு.க., தன் முடிவை இன்று இரவுக்குள் அறிவிக்க வேண்டும் என, காங்கிரஸ் கெடு விதித்துள்ளது. இன்று இரவுக்குள் தொகுதி பங்கீடு தொடர்பான தன் முடிவை தி.மு.க., வெளியிடவில்லை என்றால், த.வெ.க., - காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

விஜய் வீட்டில் ஆலோசனை



தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு பேச்சில் சுமுக முடிவு எட்டப்படாததால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. இது குறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில் தொடருவதை, காங்., நிர்வாகிகள் பலரும் விரும்பவில்லை. இதனால், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, த.வெ.க., தரப்பில் கடுமையாக முயற்சிகள் நடந்தன. ஆனால், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், கனிமொழி ஆகியோர் தொடர்ச்சியாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை சந்தித்து பேசி வருவதால், கூட்டணி பேச்சை வெளிப்படையாக செய்ய முடியவில்லை. தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் தலைமையிலான குழு, தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து சமீபத்தில் பேசியது. அப்போது, தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் முடிவை தி.மு.க., சொன்னதால், உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அதிருப்தியான காங்., மேலிடம், த.வெ.க.,வுடன் மீண்டும் பேச்சை துவங்கியுள்ளது. அதன்படி, த.வெ.க., தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, பிப்., 28-ம் தேதி டில்லி சென்று, காங்., மூத்த தலைவர் சிலரை சந்தித்து பேசினார்; தொடர்ந்து, மார்ச் 1ம் தேதி ஹைதராபாத் சென்றார். ஆந்திராவில் இருந்து அங்கு வந்த காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூரையும் ஹோட்டலில் சந்தித்து பேசினார். இதனால் தான், மார்ச் 1ம் தேதி நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், ஆதவ் பங்கேற்கவில்லை. அப்போது, வேணுகோபாலுக்கு போன் செய்த மாணிக்கம் தாகூர், அவருடன் ஆதவ் அர்ஜுனாவை பேச வைத்துள்ளார். 'த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க, காங்.,கில் பலரும் ஆர்வமாக உள்ளனர். கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகளை பெற தலைமையும் விரும்புகிறது. ஆனால், 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் மூலமாக, ராகுலுக்கு தி.மு.க., நெருக்கடி கொடுக்கிறது. தி.மு.க., கூட்டணியில் அதிக தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால், நிச்சயம் தலைமையும் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க பச்சைக்கொடி காட்டி விடும். எனவே, ஓரிரு நாட்கள் எங்களுக்காக காத்திருங்கள்' என வேணுகோபால் கூறியுள்ளார். இந்த தகவலை சென்னை திரும்பிய ஆதவ், விஜயிடம் கூறி உள்ளார். எனவே, இது குறித்து ஆலோசனை நடத்த, நீலாங்கரை வீட்டில் இருந்து, பட்டினப்பாக்கம் வீட்டுக்கு விஜய் நேற்று சென்றார். அங்கு விஜய், ஆதவ், ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில், காங்கிரசுக்காக ஓரிரு நாட்கள் காத்திருக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.



- நமது நிருபர் -

Advertisement

விடியல் சார் காங்கிரஸ் இல்லைனா 20 தொகுதில டெபாசிட் காலி ஆகும்

Reply Rate this
மார் 03, 2026 06:00 pm

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்!

Reply Rate this
வேணு. .. ஒண்ட வந்த பிடாரி.. ஊர் பிடாரி ரெண்டு சேர்த்தா ஊர் நாசம்....இது எப்படி இருக்கு
மார் 03, 2026 08:29 pm
Rate this
மார் 03, 2026 02:11 pm

இன்று சந்திர கிரகணம். சூரியனின் ஒளி சந்திரனிற்கு போய் சேராத வண்ணம், பூமி குறுக்கே செல்லும்.

Reply Rate this
மார் 03, 2026 02:05 pm

எனக்கு என்னமோ காங்கிரஸ் உஷார் ஆகி விட்டது என்று நினைக்கிறேன் அவர்கள் திமுக உடன் வைத்திருக்கும் உறவால் வட மாநிலங்களில் பெருத்த அடி வாங்குகிறோம் என்று இப்பொழுதுதான் உணரத் தொடங்கியுள்ளார்கள் திமுகவின் இந்து இந்தி மற்றும் கடவுள் எதிர்ப்பு வட மாநிலங்களில் பலத்த அடியை கொடுத்துள்ளது காங்கிரஸுக்கு அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள் இவர்களை வைத்து இருந்தால் நாம் இந்தியாவில் இனி வளர முடியாது என்பதால் இவர்களை கை கழுவ முடிவு செய்துவிட்டார்கள் எது இருந்தாலும் ஒரு நாட்டிற்கு எதிர்க்கட்சி கண்டிப்பாக தேவை அதற்கு காங்கிரஸ் வளர வேண்டும் என்பது எனது எண்ணம்

Reply Rate this
மார் 03, 2026 01:58 pm

போங்கப்பா , ஓரமா போயி விளையாடுங்கப்பா . . . ஜனங்களுக்கு நிறையா வேலை இருக்கு , , டிஸ்டர்ப் பண்ணாதீங்கப்பா . .

Reply Rate this
மார் 03, 2026 01:34 pm

மேலிடத்திற்கு காங்கிரஸ் திமுகவை விட்டு வெளியேறினால் ஒன்றும் தேறாது மற்றும் தேவையும் இல்லை என தெரியும், ஆனால் கேரளாவில் கட்டாயம் இந்த முறை வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது, எனவே விஜய் ரசிகர்களின் ஒட்டு கேரளாவில் தேவை.

Reply Rate this
மார் 03, 2026 12:50 pm

ஸ்டாலின் காங்கிரஸ் அவர்களாகவே வெளியே செல்லட்டும் என்று நினைக்கிறார் . அதனால் இப்போதே கிளம்பலாம் .இரவு வரை எதற்கு

Reply Rate this
மார் 03, 2026 12:43 pm

இங்கே வந்துள்ள கருத்துக்களை பார்த்தால் காங்கிரஸ் தமிழ் நாட்டில் இருந்து அழியவேண்டும் என்ற நல்லஎண்ணத்தில் வந்த பிஜேபி காரர்களின் கருத்தாக தெரிகிறது

Reply Rate this
மார் 03, 2026 12:33 pm

காங்கிரஸ் தேவை இல்லை கிளம்பு கிளம்பு கிளம்பு . விஜய் 75 தொகுதி கொடுத்தாலும் ஒன்றில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாது . இது கட்சி தலைவர்களுக்கு தெரியும் அதனால் யாரும் போட்டி இட துணிய மாட்டார்கள்.. வேட்பாளர்களை தேடித்தான் நிறுத்த வேண்டும். அல்லது ராகுல் மற்றும் கிரிஸ் ஷோடங்கர் தான் நிற்கவேண்டும். கட்சி 2 ஆக உடையும் . 1996 போல காங்கிரஸ் பூஜ்யம் ஆகும் . 0 + 0= 0.

Reply Rate this
இருக்கட்டுமே.. 18 சீட்டை வச்சுகிட்டு 5 வருசத்தில் என்ன கிழித்தாய்ங்க... காங்கிரஸ் கூட்டணியை விட்டு புட்டுகிட்டா போட்டி அஇஅதிமுக கூட்டனி..தவெக கூட்டணி என்றாகி விடும்.திமுக மூன்றாம் இடம் போயிடும்.
மார் 03, 2026 12:57 pm
Rate this
Modisha - Chennai
கூலி கிடைக்கிறது என்று மனம் போல் பேசாதீர்கள் . திமுக காங்கிரஸ் கூட்டணி அமைந்து விட்டால் உங்களுக்கு கூலி கட் .
மார் 03, 2026 01:04 pm
Rate this
ramesh - chennai
ஹாஜா ரொம்ப கனவு காணாதீங்க . ஸ்டாலின் மீண்டும் முதல்வராக தொடர்வார் . 3 இடத்துக்கு விஜய் இடம் போட்டி போடுங்கள் . காலா நிலவரம் தெரிந்து பதிவு செய்யுங்கள் . இந்த ஒரு இனைய தளத்தை மட்டுமே பார்த்து வந்தால் நாம் மட்டுமே வெற்றி பெறுவோம் என்ற பொய்யான எண்ணம் மட்டுமே தோன்றும்
மார் 03, 2026 05:30 pm
Rate this
ramesh - chennai
என்ன மோடிஷா இந்த கூலியில் தான் உமது குடும்பமே தினமும் நடக்கிறது என்ற உண்மையை உலகம் அறிய வெளிச்சம் போட்டு காட்டி விட்டீரே .
மார் 04, 2026 09:53 pm
Rate this
ramesh - chennai
இங்கே சொந்தமாக கருத்து போட மண்டையில் சரக்கு இல்லாத கூட்டம் தான் மற்றவர்களை பார்த்து 200 ரூபாய் , கிறிஸ்தவன் , முஸ்லீம் என்று கருத்து போட்டு வருகிறது .
மார் 04, 2026 09:57 pm
Rate this
மார் 03, 2026 11:51 am

முடிவில் பலத்த காயங்களுடன் தலையில் கட்டுடன் படுக்கப்போவது செல்லாபெரும்தொகைதான்

Reply Rate this