Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 சுக்கு நுாறாக உடைந்த கண்ணாடி போன்ற கூட்டணி

 சுக்கு நுாறாக உடைந்த கண்ணாடி போன்ற கூட்டணி

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. தென் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் தான் சட்டம் - ஒழுங்கு அதிகளவு மோசமாக உள்ளது. இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது.

முதல்வர் ஸ்டாலினுடன் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் சந்திப்பு, தனிப்பட்ட சந்திப்பு; அதுபற்றி கூற எதுவும் இல்லை. சட்டசபை தேர்தலில், பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். இது மக்கள் நம்பிக்கை பெற்ற கூட்டணி. ஆனால், தி.மு.க., கூட்டணி, சுக்குநுாறாக உடைந்த கண்ணாடியாக உள்ளது. அதை எப்படி ஒட்ட வைத்தாலும் முகம் பார்க்க உதவாது.

- வாசன் தலைவர், த.மா.கா.,

Advertisement