'செல்ப்' எடுக்காத வேளாண் திட்டங்கள்!
* சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சிகளில், எட்டு கோடி ரூபாய் செலவில், 50 சிறப்பு அங்காடிகள் அமைக்கப்படும்
* பெண் விவசாயிகள் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு அதிக லாபம் ஈட்டவும், தினசரி வருமானம் பெறவும் 100 மகளிருக்கு காளான் உற்பத்தி கூடம் அமைக்க, ஒரு கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்
* தரிசு நில தோட்டக்கலை சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு, மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்படும்
* தொலையுணர்வு தொழில்நுட்பம் வாயிலாக, இயற்கை வளங்களை ஆராய்ந்து பயிர், மண் மற்றும் நீர் குறித்த தகவல்கள் கணினிமயமாக்கப்படும்
* விவசாயிகள் நலனுக்காக, 24 மாவட்டங்களில் தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் கல்லுாரிகளில், பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்
* நெல் அறுவடை இயந்திரங்களை சிறுதானியம், பயறு வகைகளை அறுவடை செய்வதற்காக, வேளாண் பொறியியல் துறையிடம் உள்ள, 25 சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்கள் மாற்றி வடிவமைக்கப்படும்
* பொது மக்களுக்கு ஆண்டு முழுதும் தடையின்றி வெங்காயம் கிடைக்கும் வகையில், 40 கோடி ரூபாய் செலவில் வெங்காய சாகுபடி இயக்கம் துவங்கப்படும்; வெங்காய சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டு, சேமிப்பு அமைப்புகளும் உருவாக்கப்படும்
* தோட்டக்கலை பயிர்களில் சந்தை சார்ந்த தொழில்நுட்ப முறைகளை துல்லியமாக செயல்படுத்துவதற்காக, வேளாண் வணிகத் துறையில் தோட்டக்கலை தொழில்நுட்ப அலுவலர்கள் சிறப்பு பணியமர்த்தப்படுவர்
* தோட்டக்கலை இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, 20 வட்டாரங்களில் தோட்டக்கலை கிடங்குகள் அமைக்கப்படும்
* தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை காலத்தில் கிடைக்கும் மழை நீரை, மலைப்பகுதிகளில் உள்ள சுனைகளில் தேக்கி, மலைவாழ் மக்களுக்கும் விலங்குகளுக்கும் பயன் தரும் வகையில், 14 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், சுனை நீர் வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம், மத்திய - மாநில அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்
* தமிழகத்தில் செயல்படும் 25 முன்னணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு, தேசிய அளவில் சிறந்த மேலாண்மை நிறுவனங்களில் படித்தவர்களை தலைமை செயல் அலுவலர்களாக நியமித்து, வேளாண் வணிக செயல்பாடுகள் மேம்படுத்தப்படும்
* கரும்பு பயிர்களில், பருப்பு வகைகளை ஊடுபயிராக பயிரிடு வதை ஊக்குவிக்கும் திட்டம், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்
* வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதிக்கான வழிமுறைகளை, விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும்
* வி வசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ஒருங்கிணைந்த தரக்கட்டுப்பாட்டு பிரிவு ஏற்படுத்தப்படும்
* புரதச்சத்து நிறைந்த மரத்துவரை, காராமணி உள்ளிட்ட பருப்பு வகைகளை இல்லந்தோறும் வளர்க்கும் வகையில், ஒரு லட்சம் இல்லங்களுக்கு பருப்பு வகை விதைகள் அடங்கிய தொகுப்பு, 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்