Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


குவாரிகளில் புதைந்த அறிவிப்புகள்!

குவாரிகளில் புதைந்த அறிவிப்புகள்!
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சுரங்கங்கள் மற்றும் கனிமவளத் துறை என்பது, இந்த ஆட்சி காலத்தில், 'இயற்கை வளங்கள்' துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், இத்துறை தொடர்பாக, 2021 - 25 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட பெரும்பாலான அறிவிப்புகள் முறையாக அமலுக்கு வரவில்லை. குறிப்பாக, அரசுக்கு வருவாய் கிடைக்கும் வகையிலான அறிவிப்புகள் தவிர்த்து, அரசு செலவு செய்ய வேண்டிய அறிவிப்புகள் அமலுக்கு வரவில்லை.
இத்துறையில் அமலுக்கு வராத அறிவிப்புகள்:
* தமிழக சிறு கனிம விதிகள் - 1959ஐ மறு ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை செய்ய குழு அமைக்கப்படும்
* விழுப்புரம் மாவட்டத்தில், ஒரு புவிசார் பாரம்பரிய இடம், 5 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்
* கனிம வளங்களை ஏலம் விடுவதற்கும், மின்னணு தளத்தை பயன்படுத்த, திட்ட மேலாண்மைப் பிரிவு தனியாக உருவாக்கப்படும்
* மாநில அளவில், கனிமவள ஆய்வு அறக்கட்டளை, 1 கோடி ரூபாயில் அமைக்கப்படும்
* திருவண்ணாமலை, திருநெல்வேலி மாவட்டங்களில் நிலச்சரிவு போன்ற பேரிடர்களை அறிந்துகொள்ள, புவி தொழில்நுட்ப மையங்கள் ஏற்படுத்தப்படும்
* தமிழக கனிம நிறுவனத்தின் வாயிலாக, சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, தர்மபுரி மாவட்டம், கடத்துார் காப்புக்காட்டில் நீர்நிலைகள் உருவாக்கப்படும்
* தமிழக மேக்னசைட் நிறுவனத்தில், ஒருங்கிணைந்த வணிக மேலாண்மை மென்பொருள் 75 லட்சம் ரூபாயில் உருவாக்கப்படும்
* தமிழகத்தில் சுரங்கப் பணிகளில், சுற்றுச்சூழல் பாதிப்பு, எரிபொருள் செலவை குறைக்கும் வகையில், 10 கிரானைட் சுரங்கங்கள் மின்மயமாக்கப்படும்
* கரூர், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில், குவாரி பணிகளில் இருந்து வரலாற்று சின்னங்கள், பழந்தமிழர் கல்வெட்டுகள், சமணப்படுகை, தொல்பொருள் தளங்கள் பாதுகாக்கப்படும்
* சேலம், திருநெல்வேலி, துாத்துக்குடி, பெரம்பலுார் மாவட்டங்களில், ஜிப்சம் கனிம இருப்பு பகுதிகளை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும்.

Advertisement