Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 நிர்வாகிகள் 'எஸ்கேப்': ராமதாஸ் 'அப்செட்'

 நிர்வாகிகள் 'எஸ்கேப்': ராமதாஸ் 'அப்செட்'
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அ ன்புமணி தரப்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களை தோல்வியடைய செய்யும் நோக்கத்தில், 18 தொகுதிகளில் 10 இடங்களுக்கு ராமதாஸ் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுவரை ஆறு கட்டங்களாக 37 வேட்பாளர்களை ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதில் பலர், தங்களுக்கு போட்டியிட விருப்பம் இல்லை என கூறி 'எஸ்கேப்' ஆகி வருகின்றனர். மேலும் பலர், ராமதாசின் அழைப்பை தவிர்ப்பதற்காக தங்களது மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்து வைத்துள்ளனர். ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி, தேர்தலில் நிற்க ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிக் கொண்டார்.

கடைசி வரை ராமதாஸ் உடன் சேர்ந்து பயணித்து வந்த கட்சியின் தலைவர் மணி, உஷாராக, தி.மு.க., - காங்., கட்சியுடன் மறைமுக பேச்சு நடத்தி, தன் சொந்த தொகுதியான பென்னாகரத்தில், தன் மகனும், பா.ம.க., மாநில இளைஞர் சங்க முன்னாள் தலைவருமான தமிழ்குமரனை, காங்., வேட்பாளராக களத்தில் இறக்கி விட்டுள்ளார்.

இதையடுத்து, தைலாபுரம் தோட்டத்துக்கு செல்வதை பெரும்பாலானோர் தவிர்ப்பதுடன், போன் அழைப்பையும் ஏற்க மறுத்து வருகின்றனர். இதனால், ராமதாஸ் மிகுந்த மன வேதனையில் உள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement

ஏப் 05, 2026 05:48 am

ஏதோ நல்லது நடந்தால் சரி .

Reply Rate this