மேடை காமெடியை சீரியஸாக எடுக்க வேண்டாம்
'தி.மு.க.,விற்கும் த.வெ.க.,விற்கும் இடையே தான் போட்டி' என தொடர்ந்து பேசி வரும் த.வெ.க., தலைவர் விஜய், இதுவரை ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. கட்சி துவங்கிய ஆறாவது மாதத்திலேயே, லோக்சபா இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற இயக்கம் அ.தி.மு.க., என்ற வரலாறு விஜய்க்கு தெரியாது. த.வெ.க., யாருக்காவது போட்டியாக இருந்துவிட்டு போகட்டும். தமிழக தேர்தல் களத்தில் இன்றைக்கு அ.தி.மு.க.,விற்கு போட்டி யாரும் இல்லை என்பது தான் உண்மை. 'அ.தி.மு.க.,விற்கும், த.வெ.க.,விற்கும் போட்டி' என விஜய் சொல்ல மாட்டார். அவருக்கு அ.தி.மு.க.,வின் சுயபலம் என்னவென்று தெரியும். மேடைக்காக காமெடி செய்கிறார்; விஜய் காமெடி பண்ணுவதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தி.மு.க., ஆட்சியின் அவலங்கள் குறித்து கேள்வி எழுப்பாத திருமாவளவனுக்கு, அ.தி.மு.க., பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது. - கடம்பூர் ராஜு, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,