வெற்றி பெற்ற பிறகு அதிகார பகிர்வை வாதிடலாம்
பா.ஜ., பிடிக்குள் அ.தி.மு.க., போய் விட்டது. தமிழகத்தில், அ.தி.மு.க., வெற்றி பெற்றால், ஆர்.எஸ்.எஸ்., தான் ஆளும். திருவள்ளுவருக்கு காவி பூசக்கூடிய வேலையை , முன்னாள் முதல்வர் பழனிசாமி, துணிச்சலாக செய்யக்கூடிய அளவிற்கு நிலைமை மாறி இருப்பது வேதனை அளிக்கிறது. அ.தி.மு.க., தலைவர்கள் கவனமாக, எச்சரிக்கையாக செயல்படாவிட்டால், சுய அடையாளத்தை அவர்கள் இழக்க நேரும். தி.மு.க., அமைத்துள்ள குழுவுடன் பேச்சு நடத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கான தொகுதிகளை கேட்டு பெறுவோம். தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் தொடரும். 'அதிகார பகிர்வு வாயிலாகவே கட்சி வளர்ச்சி அடையும்; அதனால் தான், அதை, உயர்த்தி பிடிக்கிறோம் என்பது இன்றைய அரசியல் சூழலுக்கு உகந்ததாக இல்லை. வெற்றி பெற்ற பிறகு அதிகார பகிர்வை கூறி, வாதிடலாம். ஆனால், வெற்றிக்கு குந்தகம் விளைவிக்கும் எவ்வித முயற்சியையும் செய்யக்கூடாது - திருமாவளவன் தலைவர், விடுதலை சிறுத்தைகள்
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
மதுரையில் பிரதமர் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்: இடம் மாறுகிறது அரசு நிகழ்ச்சி
பிப் 24, 2026 09:58 pm
மீண்டும் 30 ஆண்டுக்கு முந்தைய அதிரடி அரசியல்: எதிர்க்கட்சிகளுக்கு தி.மு.க., மேயர் மிரட்டல்
பிப் 24, 2026 08:33 pm
இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க போராடுவோம்: முதல்வர் ஸ்டாலின்
பிப் 24, 2026 05:43 pm
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் கருணைத்தொகை; இபிஎஸ் தேர்தல் வாக்குறுதி
பிப் 24, 2026 12:27 pm