திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு: ஓபிஎஸ் பேட்டி
சென்னை: '' திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்கிறது,'' என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.அரசியலில் இதுவரை தனது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்காத முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவுவையும் சந்தித்தார். பிறகு மீண்டும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.இதன் பிறகு நிருபர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது: திமுக, ஐந்தாண்டு ஆட்சியை சிறப்பாக நிறைவு செய்ததற்காக முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தமிழக மக்களின் எண்ணத்தையே, எம்எல்ஏ ஐயப்பன் சட்டசபையில் வெளிப்படுத்தினார்.பொதுவான கருத்து, இன்று இருக்கும் அரசியல் சூழ்நிலை, கடந்த 5 ஆண்டு ஆட்சி நிலை, நாட்டிற்கு செய்த சாதனை மக்கள் மனதில் ஆழமாக பதிந்து உள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது. தமிழகத்திற்கே வழி பிறந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 60 )
எடப்பாடி செய்தது சரியென்று நிரூபித்தார் ஓ.பி.எஸ். இரண்டு வழிகள் இருந்தன... முதல் வழி செங்கோட்டையன் போல த.வெ.க. செல்வது...இல்லையேல் அரசியலில் இருந்து விலகுவது... இரண்டில் எது செய்தாலும் மக்களிடம் முக்கியமாகஅதிமுக தொண்டர்கள் அனுதாபம் வந்திருக்கும்... ஆனால் இப்போது ஒரு அதிமுக முன்னாள் முதல்வர் திமுகவில் இணைவது அவர் அதிமுகவில் இல்லையென்றாலும் துரோகமாகத்தான் கருதப்படும்....
கேவலமான அரசியல் அயோக்கியத்தனம்
உண்ட வீட்டிற்கு இரண்டகம் விளைவித்த உத்தமனா நீ இப்படி பேசுவது உனக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் உன்னை பெற்று எடுத்த தாய்கட்சி அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த நீயா இப்படி பேசுவது நாவில் நரம்பே இல்லையா இப்படி பேச உனக்கு எப்படித்தான் தூக்கம் வருது இப்படி பேச
எதற்காக கசிகலா இவரை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சொல்லி பிடறியில் கொடுத்தாங்கன்னு இப்பதான் புரியுது.
எடப்பாடி இவர் விசயத்தில் பிடிவாதமா இருக்கும் காரணம் புரியுதா.. கட்சியில் சேர்த்தால் விளங்குமா..புரட்சிதலைவர் அம்மா விசுவாசிகள் இப்பவாவது இவர் சுயரூபத்தை புரிந்து கொள்ளனும்.
ஈ பி எஸ் ஒரு சிறந்த அரசியல் வாதி என்பதை நிரூபிக்கிறார். பிரிந்து சென்றவர்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கும் போது இப்படி எல்லாரையும் நீக்கி விட்டால் மீதம் இருக்கப்போவது இவர் மட்டும் தான் என்று நான் கருதினேன். இவரை நம்பி விஜய்யுடன் ஐக்கியமான செங்கோட்டையனை நீக்கியது சரி என்று இப்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இப்படிப்பட்ட எதிரி முகாமைச் சேர்ந்தவர்களை கட்சிக்குள் சேர்க்கவேண்டும் என்ற செங்கோட்டையன் கோரிக்கை நியாயமற்றது என்று இன்று மக்களுக்கு புரிந்துவிட்டது. வர இருக்கும் தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவினாலும், அது உண்மையில் நெஞ்சு நிமிர்த்தி போரிட்டு தோற்றத்துக்கு ஒப்பாகும். புறமுதுகிட்ட வெற்றியைவிட நெஞ்சு நிமிர்த்திய தோல்வியே சிறந்தது.
OPS இவ்வளவு தரம் தாழ்ந்து போவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முதலில் வைகோ. அடுத்து கமல்ஹாசன். இப்போது ஓபிஎஸ்.
வசவு பாட வார்த்தை இல்லை .
இவரை மாதிரி ஒரு கேடு கெட்ட அரசியல்வாதியை தமிழ்நாடு இதுவரை கண்டதேயில்லை
சசிகலாவை தவறாக எடை போட்டுவிட்டேன் .இப்போதுதான் தெரிகிறது, சசிகலா இவரைப்புறம் தள்ளிவிட்டு ஈ பி எஸ் சை முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுத்ததின் காரணம். .
மேலும் செய்திகள்
மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த திமுக அரசு: விஜய் விமர்சனம்
பிப் 20, 2026 02:22 pm