கூடுதல் சீட்டுக்காக கூட்டணி மாறும் அவசியம் இல்லை: திருமாவளவன்
திருச்சி: ''காங்கிரஸ் கட்சி, தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறது; எங்கள் கூட்டணி கட்டுக்கோப்பாக தேர்தலை சந்திக்கும்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். திருச்சியில் அவர் அளித்த பேட்டி: மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு என்பது, ஒட்டுமொத்த இந்திய மக்களின் கோரிக்கை. தமிழகத்தில் படிப்படியாக மதுக் கடைகளின் எண்ணிக்கையை குறைத்து, அடுத்தடுத்து மூட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். அது குறித்த நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை தருகிறது. எனவே, மது ஒழிப்பு குறித்து, தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில், கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்படுவது இயல்புதான். கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினர், ஆட்சியில் பங்கு கேட்கின்றனர். ஆட்சியில் பங்கு கேட்பதால், ஒரு கூட்டணி உடைந்து விடாது. கூட்டணியில் இருப்பதால், உரிமையோடு பங்கு கேட்கின்றனர். காலங்காலமாக வெற்றிக்காக உழைத்திருக்கிறோம் என்று கூறி, அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறு இல்லை. 'தமிழக அரசியலுக்கு அது பொருந்தி வராது' என முதல்வர் ஸ்டாலின் சொன்னால், பேச்சு நடத்தினால் அது முடிவாகும். காங்கிரஸ் நிச்சயம் தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கும். இந்த கூட்டணியை உருவாக்கிய எங்களுக்கு, அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. எனவே, வேறு அணியில் கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. இந்த கூட்டணியில் நீடிப்பதோடு, எங்களுக்கான உரிமையை கேட்போம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 21 )
ஆட்சியில் பங்கு கேட்போம் ஆனால் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை! கூடுதல் சீட் கேட்போம் ஆனால் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை! என்ன மாதிரி அரசியல் இது? இதுக்கு எதுக்கு கேட்கணும்?
உங்களுக்கு தீ மு கா வை விட்டால் வேறு நாதி கிடையாது என்பதை இப்படி நாசூக்காகூறுகிறீர்களா?
ஒத்த பிளாஸ்டிக் ஷேர் போதும்ங்கண்ணா
இருபத்தி ஒன்று மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக தமிழகத்தில் பத்தோ பதினைந்து கொடுத்தால் போதும் என்று நிலைமையிலே தான் உள்ளது
ஒதுக்கீட்டு....
சமீபத்தில் திருமால்வளவன் சொன்னார் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறும் நிலையில் அவரது கட்சியான வி சி க இருக்கிறது என்று. அப்படி இருக்கும் போது எதற்காக திமுக அணியில் தொங்கவேண்டும். பேசாமல் அவரே ஆட்சி அமைத்து டாஸ்மாக்கை மொத்தமாக மூடிவிடலாம் .
தம்பி கொடுக்கிறத வாங்கிக்க. உன் பின்னே எத்தனையோ கூத்தாடிகள்
நீங்க கூட்டணி மாறினாலும், நீங்க கேட்கிற சீட் யாரும் கொடுக்க போறதில்லை. இருக்கிற இடத்துலயே continue பண்ணுங்க. எதுக்கு இந்த உதாரெல்லாம்
மக்கள்தான் உன்னை தண்ணிதெளிச்சு உட்டுட்டாஙகளே. . பொறவு எதுக்கு சும்மாங்காட்டியும் அறிக்கையுனு உசிரவாங்கரே.
பூசி மொழுகுவதில் படு கில்லாடி திருமா. படி படியாக மதுவை முதல்வர் ஒழித்து விடுவாராம். டாஸ்மாக் கடைகளை பூட்டும் சாவி முதல்வரிடம் இருக்கிறது. டாஸ்மாக் வியாபாரம் ஜோராக நடக்கிறது. இந்த முதல்வரை வைத்து மது ஒழிப்பு மாநாட்டுக்கு தலைமை தாங்க வைத்து நடத்துவாராம். மக்கள் எல்லோரையும் ஒன்றும் தெரியாதவர்கள் என்று நினைத்துக் கொண்டார் திருமாவளவன். என்னத்த சொல்ல.
மதுக்கடைகளை ஒழிப்பதில் எந்தவித முன்னேற்றமும் இல்லையாம் ஆனாலும் கூட்டணியில் தொடர்வாராம் இந்த திருட்டு சிறுத்தை.
மேலும் செய்திகள்
தேர்தலில் வீடியோ பிரசாரம் ஒன்லி; விஜய் முடிவால் கட்சியினர் ஷாக்
பிப் 19, 2026 05:21 am
கோவை மக்கள் தங்கள் ஊரை தவிர பிற ஊர்களை கெடுப்பர் தயாநிதி பேச்சுக்கு பா.ஜ., கண்டனம்
பிப் 19, 2026 03:59 am
ரூ.5 ஆயிரம் வழங்கிய திமுக அரசு; வீடு வீடாக பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
பிப் 18, 2026 03:32 pm