வாங்கிய ஆர்வம் கொடுப்பதில் இல்லை; திரும்பி வராத விருப்ப மனு; விஜய் அதிர்ச்சி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
'த.வெ.க.,வில் போட்டி போட்டு விருப்ப மனுக்களை வாங்கி சென்றவர்களில், பெரும்பாலானோர் மனுவை பூர்த்தி செய்து ஒப்படைக்கவில்லை' என, தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தலுக்காக, த.வெ.க., சார்பில், போட்டியிட விரும்புவோருக்கு, சென்னை, பனையூர் அலுவலகத்தில், கடந்த 6ம் தேதி விருப்ப மனு வழங்கப்பட்டது. முதல் நாளே, 10,000 மனுக்கள் விற்று தீர்ந்தன. மனு வாங்க ஏராளமானோர் குவிந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, 'மனு வாங்க நேரில் வர வேண்டாம். 'ஆன்லைன்' வழியே, மனு வாங்கிக் கொள்ளலாம்' என, கட்சி தலைமை அறிவித்தது. இந்நிலையில், விருப்ப மனு சமர்ப்பிக்க, 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 17 )
முதல்வர் விஜய் தான் அவர் போட்டு இருக்கிற சட்டை மத்த கட்சியுடையது ரஜினி செந்தில் காமடி தான் ஞாபகம் வருகிறது அவரின் ஆட்சி அதிகாரம் பங்கு என்ற வாக்குறுதி என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்
வர்ரூம் .. ஆனா வராது
இதெல்லாம் Souvenirs எனப்படும் நினைவு பொருள். இந்த தேர்தலுக்கு பின் கட்சி இருக்காது
அடுத்த டார்ச் லைட்.
Half of them not an adult
எதற்கும் பழைய பேப்பர் கடைகளில் தேடுங்கள்... மொத்தமாக எடைக்கு போட்டு, அந்த காசும் டாஸ்மாக்குக்கு போயிருக்கபோகுது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பெரியார், சமத்துவம், சமூக நீதி இப்படி பீலா விட்டுட்டுட்டு வேட்பு மனு வாங்க எஸ்.சி எஸ் டீ அப்படின்னா ஐயாயிரம், மற்ற ஜாதிக்காரங்களுக்கு பத்தாயிரம் அப்படின்னு வேட்புமனு வை விக்கிறானுங்களே ஒரு தேர்தல் வேட்புமனுக்கே இப்படி வித்தியாசம் பாக்கும் இவங்கல்லாம் சமத்துவ சமூக நீதி பத்தி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கு? இந்த லட்சணத்தில் பெரியார், அம்பேத்கர் அப்படின்னு பம்மாத்து வேற........
வேட்பாளர் தேர்வு லட்சணம் தெரிந்து விட்டது. ஓட்டு வங்கி லட்சணம் புரிந்து கொண்டு சுதாணாமா நடந்தால் மானமாவது மிஞ்சும்
இது அதிர்ச்சி அல்ல. தேர்தலுக்கு பின் வரும்
விசில் ஊதணும்னா, உடனே வருவாய்ங்க.
மேலும் செய்திகள்
தி.மு.க., பக்கம் சாய்ந்த தே.மு.தி.க., நழுவவிட்ட பழனிசாமி; பா.ஜ., குமுறல்
பிப் 20, 2026 04:43 am