/ செய்திகள் / த.வெ.க.,வுடன் கூட்டணி; காங்கிரசார் வலியுறுத்தல்

த.வெ.க.,வுடன் கூட்டணி; காங்கிரசார் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio
நமது நிருபர் 'த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சை துவக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றும்படி, மாவட்டத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுங்கள்' என, தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் சிலர், கட்சியினருக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, கே.விஜயன், எம்.ஜோதி, என்.முருகானந்தம், கே.தணிகாசலம், எஸ்.வி.ரமணி, இல.பாஸ்கரன், நசீர் ராஜா ஆகியோர், சென்னையில் நேற்று முன்தினம் ரகசிய கூட்டம் நடத்தினர். இதில் எடுத்த முடிவை, கட்சியினருக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளனர். அதில், 'காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் மாவட்டத் தலைவர்களை தொடர்பு கொண்டு, த.வெ.க.,வுடன் உடனே கூட்டணி பேச்சை துவக்க, கட்சித் தலைமையை வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றுங்கள். தீர்மானத்தின் நகலை, காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வையுங்கள் என அழுத்தம் கொடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Sundar R
பிப் 16, 2026 13:56

2026 தேர்தலில் யார் யாருக்கு வாக்களிக்கக் கூடாது?


ஆகுயர்த்தோன்
பிப் 16, 2026 13:44

திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியேறினால் "காங்கிரஸ் முக்த் பாரத்" என்பது தமிழ்நாட்டிலிருந்து தொடங்கும். பாஜக ஒரே தேர்தலில் தங்களின் இரண்டு கணக்குகளை தீர்த்துக் கொள்வார்கள் ஒன்று அதிமுகவை இல்லாமல் செய்வது மற்றொன்று காங்கிரசை மொத்தமாக முடித்துவிடுவது அதற்குத்தான் மாணிக்தாகூர் போன்ற அரைவேக்காடுகள் ஆசைப்படுகிறார்கள்.


கனோஜ் ஆங்ரே
பிப் 16, 2026 13:21

ஆமா... வரிசையா பெயர் போட்டிருக்கீங்களே... இவங்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் பதவியில் இருக்குறவங்களா.? இதுகளெல்லாம் முக்கூட்ல நின்னு ஊளையிடுறதுங்க...? இவனுங்க பீகார் மாநிலம் மாதிரி தமிழ்நாட்லேயும் காங்கிரசை அழிக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்க போலிருக்கு... செய்யுங்க, செய்யுங்க...? அழிச்சு வாயில போட்டுக்கோங்க...?


krishna
பிப் 16, 2026 11:48

பேசுங்க பேசுங்க தேர்தல் முடிந்ததும் பேசுங்க பேசுங்க தேர்தல் முடிவு தெரிந்ததும் பேசுங்க பேசுங்க


Baskaran
பிப் 16, 2026 11:38

மறுமலர்ச்சி காங்கிரஸ் கட்சிக்கு...


Mariadoss E
பிப் 16, 2026 11:31

போய் தொலைங்கப்பா ...


vivek
பிப் 16, 2026 11:37

இருநூறு வாங்கிட்டு போய் தொலையும்


Rathna
பிப் 16, 2026 11:20

ஒரு புது கூட்டணி உண்டாகி, பழைய கூட்டணியில் இருந்த இரண்டு அயோக்கியன்ல ஒரு அயோக்கியன் அழிவது நாட்டிற்க்கு நல்லது. எவ்ளோ தான் பொது சொத்தை கொள்ளை அடிக்க விடலாம்?


Siva Rama Krishnanan
பிப் 16, 2026 11:16

என்ன செய்ய தமிழக காங்கிரஸ் தலைமை ஸ்டாலினுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன் செல்வபெருத்து விட்டதால்


RAJ
பிப் 16, 2026 11:07

என் தமிழ் மக்களை கொன்ற காங்கிரஸ் தமிழ்நாட்டில் வேரறுக்கப்பட வேண்டும்..


rameshkumar natarajan
பிப் 16, 2026 11:05

At present Congress has 18 MLA and 10 MPs in parliament.People like him will make sure congress will make sure congress will not be represented in assembly in 2026. These people are working against the interest of congress workers.