என் மீதான நம்பகத்தன்மையை நானே நாசமாக்கி கொண்டேன்
இலங்கை ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே போர் நடந்தபோது, இலங்கை வன்னிக்கு நான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதைய பிரதமர் ராஜிவ், இந்திய ராணுவத்தை அனுப்பி வைத்தார். இலங்கையில் நான் இருந்தபோது எனக்கு இரண்டு அடி முன்னால் பீரங்கி குண்டு விழுந்தது. இயற்கை அன்னை அளித்த வரத்தால் போர் பூமியில் இருந்து தப்பினேன். கடந்த காலங்களில் நான் செய்த ஏராளமான பிழைகளால், என் மீதான நம்பகத்தன்மையை நானே நாசமாக்கி கொண்டேன். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது மன்னிக்க முடியாத முடிவானது. இதனால், இமயம் என இருந்த நான் படுபாதாளத்துக்கு சென்றேன். அதே சமயம் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கட்சியினருக்கு வழங்கினேன். சினிமா நடிகருக்கு இணையான கூட்டம் எனக்கு வந்தது. ஆனால், பல்வேறு தோல்விகளால் கூட்டம் குறைந்தது. - வைகோ பொதுச்செயலர், ம.தி.மு.க.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இவரை நம்பி இவர் பின்னால் வந்து தங்கள் வாழ்க்கையை நாசமாக்கி கொண்டவர்கள் எத்தனை பேர் ?
அவசரப்பட்டு ஏதாவது வாய் விட்டுவிடப் போகறீர்கள். திரும்பவும் அதிமுகவிற்கு வால் பிடிக்கப் போகும் நிலை வந்தால், இப்பொழுது பேசுவதைச் சப்பை கட்டு கட்ட ரொம்ப மெனக்கிடணும்.
எவன் திமுகவுடன் கூட்டணி வைப்பான் ? இப்படி சொன்னவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை தவறு என்கிறார் .தழினத்துரோகி கருணாநிதி என்றவர்தானே . போதும் வைகோ .
உன்மேல் யாரும் இதுவரை எந்த நம்பிக்கையையும் வைக்க வில்லையே. பின் ஏன் கவலை
வயது மூப்பு, உளறல். பார்லிமெண்ட் க்கு போய் மக்கள் பிரச்சனைகளை பேசு என்றால் இவர் அங்கே போய் மனிப்பு கேள்... மன்னிப்பு கேள் அப்டின்னு பிதற்றினார்.
அ.தி.மு.க உடன் கூட்டணி வச்சது மன்னிக்கமுடியாத குற்றமா?. அப்போ, இலங்கை தமிழர்களை கொன்ற காங்கிரஸுடன், திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது குற்றமே இல்லையா? இப்படி கொஞ்சம் கூட வெக்கம், மானம், சூடு சொரணை இல்லாமல் இருக்கும் ஒரு அரசியல் வியாபாரியை நான் பார்த்தது இல்லை. கேவலம் பெட்டிக்கும், சீட்டுக்கும் அடகு வச்ச இவருக்கு எந்த ஒரு அரசியல் கட்சி, தலைவரையும் விமர்சிக்க தகுதி, தராதரம் இல்லை. அட, இவருக்குதான் மானம், வெக்கம் எல்லாம் இல்லை, கொஞ்சாமாக இருக்கும் கட்சிக்காரர்களுக்கு? அட.....சே
வைகோவிற்கு இருப்பது பேச்சுத்திறமை மட்டுமே. கொள்கை என்பது பூஜ்யம். இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையை இழந்தது அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அல்ல.. அறிவாலய அடிமையாக மாறியதுதான் காரணம். திமுகவிற்கு எதிராக கட்சி ஆரம்பித்து தீமுகவிடமே அடிமையாக மாறியதுதான் இதற்க்கு காரணம்.
அப்போதே தலைமை பொறுப்பில் இருந்து விலகி வேறு ஒருவருக்கு வழிவிட்டிருக்க வேண்டும். தலைமை பேராசை ஒரு நல்ல இயக்கத்தை சீராழித்தது. உண்மையில் மதிமுக அழிவிற்கு காரணம் கருணாநிதிதான் அவர்தான் மதிமுகாவை சிதைத்தவர் இதை நன்கு அறிந்தவர் வைகோ ஆனால் அதை சொல்ல தைரியமில்லாத கோழை வைகோ. மதிமுகாவிற்கும் பாமாவிற்கும் அரசியல் அங்கீகாரம் கிடைக்க காரணமாக இருந்தவர் ஜெயலலிதா. மகனின் MP சீட்டுக்காக ஒரு அபாண்டமான பொய் பேசி தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்டவர் வைக்கோ எனும் மா மனிதர்
திமுக உன்னை துரத்திய போது எத்தனை பேர் தன் இன்னுயிர் துறந்தநர் அதை மறந்து திரும்பவும் திமுக சென்றதால் அழிந்தீர்.
மானங்கெட்ட வாழ்க்கைக்கு ஒரு காரணம்.
மேலும் செய்திகள்
ஆட்சியில் பங்கு கேட்டு சென்னையில் ஒட்டப்பட்ட காங்கிரஸ் போஸ்டர்கள்; மர்ம நபர்கள் கிழிப்பு
பிப் 17, 2026 06:09 pm