/ செய்திகள் / அடுத்த ஐந்தாண்டுகளும் கொள்ளையடிக்க திட்டம்; சீமான் குற்றச்சாட்டு

அடுத்த ஐந்தாண்டுகளும் கொள்ளையடிக்க திட்டம்; சீமான் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''லட்சக்கணக்கான கோடிகளை, மாநில வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், கவர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அடுத்த ஐந்தாண்டுகளும் கொள்ளையடிக்க திட்டம் போட்டே இப்படி செய்கின்றனர்'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து சீமான் கூறியதாவது: தி.மு.க., அரசு, மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில், திடீரென 5,000 ரூபாயை, வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளது. இது, தேர்தல் வருவதை கணக்கிட்டு, மக்களின் ஓட்டை பறிக்கும் சூழ்ச்சி. நீண்ட நாட்களாக திட்டமிட்டு, மிகவும் ரகசியம் காத்து, ஒரே நாளில், 1.31 கோடி பேரின் வங்கி கணக்குகளில் 5,000 ரூபாய் செலுத்துவதில், தி.மு.க., அரசு நேர்த்தியாக செயல்பட்டுள்ளது.இத்தனை கவனத்தையும் பொறுப்பையும், சட்டம் - ஒழுங்கை காப்பதில் காட்டவில்லை. பல அரசு துறை ஊழியர்கள் பணி பாதுகாப்பு, வாழ்வாதார பாதுகாப்புக்கு போராடி வருகின்றனர். நிதிநிலையை காரணம் காட்டி, அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசு, ஒரே நாளில், 6,500 கோடி ரூபாயை வாரி இறைக்கலாமா? லட்சக்கணக்கான கோடிகளை, மாநில வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், கவர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அடுத்த ஐந்தாண்டுகளும் கொள்ளையடிக்க திட்டம் போட்டே இப்படி செய்கின்றனர். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Mecca Shivan
பிப் 16, 2026 13:11

அண்ணனுக்கு ஒரு பெட்டி பார்சல்


Chinnamanibalan
பிப் 16, 2026 11:05

வெள்ளையர்கள் இந்த மண்ணை 200 ஆண்டு காலம் ஆட்சி செய்தனர். ஆனால் இந்த பூமியில் ஆற்று மண்ணும், மலைக் குன்றுகளும் வெள்ளையர்களால் கொள்ளை போகவில்லை. ஆனால் கடந்த அரை நூற்றாண்டு கால திராவிட கட்சிகள் ஆட்சியில், தமிழக ஆறுகளில் உள்ள மணலும், மலைக் குன்றுகள் பலவும் கொள்ளை போனதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் கால் நூற்றாண்டு காலம் இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால், தமிழ்நாடும் ஒரு நாள் நிச்சயம் காணாமல் போகும்.


M Ramachandran
பிப் 15, 2026 17:13

தீ மு காவின் முக்கிய கொள்கை திட்டத்தை இப்படி ஊரறிய பறைய்ய சாத்தலாமா?


Anbuselvan
பிப் 15, 2026 15:30

திமுக ஒரு அனுபவமிக்க அரசியல் கட்சி. அவர்கள் கொடுத்த ருபாய் 5000 இல் ருபாய் 2000 மட்டும்தான் அதிகமாக கொடுக்கப்பட்ட பணம். ருபாய் 1000 தலா பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொடுக்கப் பட்ட வேண்டிய ஒன்று. திமுகக்காரர்கள் புத்தி சாலிகள் இன்னமும் அஞ்சு வருஷத்திற்கு 5000 கொடுத்தோம் 5000 கொடுத்தோம் என மக்களிடம் சொல்லி சொல்லியே ஒரு உண்மையற்ற நிகழ்வை உண்மை என நம்பும் படி ஆக்கி விடுவார்கள்.


senthilanandsankaran
பிப் 15, 2026 13:53

கிறிஸ்தவ இசுலாமிய அமைப்புகள் தங்களை தமிழர்கள் என்றும் இந்தியர்கள் என்று சொல்லவே விரும்பவில்லை என்பதுதான் திமுகவின் சாதனை.


senthilanandsankaran
பிப் 15, 2026 13:50

ஊழலை உரிமையாக்கிய கட்சி திமுக.


ஆகுயர்த்தோன்
பிப் 15, 2026 13:22

சரி CAG சொன்ன 76500000000000000000 கோடி இருக்கே , பிஜேபி உம ஆளுக்கு 5000 கொடுக்கலாம் இல்லையா தேர்தல் எதுக்கு அன்னே இது இல்லமல் தேர்தல் நேரத்தில் கவனிப்பு வேறு இருக்கு ஒரே பண மழைதான் ,2026 RESULT இன்றே சொல்லிவிட்டார்


ஆகுயர்த்தோன்
பிப் 15, 2026 13:21

2026 RESULT இன்றே சொல்லிவிட்டார் அப்புறம் தேர்தல் எதுக்கு அன்னே இது இல்லமல் தேர்தல் நேரத்தில் கவனிப்பு வேறு இருக்கு ஒரே பண மழைதான்


Velan Iyengaar, Sydney
பிப் 15, 2026 18:47

பல பெயர் மாற்றி பீட்டரிக்கொள்ளும் irunooru kothadimaigalவரிசையில் இன்னும் ஒரு kothadimai ஆகுயர்தோன்


ஆகுயர்த்தோன்
பிப் 15, 2026 13:19

உனக்கென்ன தோற்போம் என்று தெரிந்தே வோட்டை பிரிக்க நோட்டு வாங்கும் பிஜேபி பி டீம் நீ ,உனக்கு இப்படி கோடி கோடியா செலவு செய்ய எங்கிருந்து பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது சொல் , திரள் நிதி இவளவு கோடியா வருது , கணக்கு காட்டு


Rathna
பிப் 15, 2026 12:50

திருநீறு பூசிய சைமன். திறமையாக பேசுகிறார். ஆனால் திராவிட மாயையில் மக்களிடம் சரியாக பேசினாலும் எடுபடவில்லை. தமிழ்நாட்டில் அறிவு சார்ந்து சரியாக கேள்வி கேட்கும் ஒரு நபர். ஆடு மாடு அரசியலை தவிர.