/ செய்திகள் /  முஸ்லிம் அமைப்புகள் திடீர் போர்க்கொடி; தி.மு.க., தலைமை கடும் அதிர்ச்சி

 முஸ்லிம் அமைப்புகள் திடீர் போர்க்கொடி; தி.மு.க., தலைமை கடும் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

முஸ்லிம் மக்களில், பெருவாரியாக உள்ள சன்னி பிரிவினர், தி.மு.க., அரசு தங்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டி உள்ளனர். இது தி.மு.க., தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முஸ்லிம் மதத்தில், சன்னி, ஷியா என இரு பிரிவினர் உள்ளனர். இதில் பெரும்பான்மை பிரிவை சேர்ந்த சன்னி முஸ்லிம்தான், தமிழகத்தில் அதிகமாக உள்ளனர். சன்னி முஸ்லிம் பல ஆண்டுகளாக, தி.மு.க., ஆதரவாக இருந்த, சன்னி முஸ்லிம் அமைப்புகள், சென்னையில், தி.மு.க.,வுக்கு எதிராக கண்டன கூட்டம் நடத்தி உள்ளன. இது குறித்து, தென்னிந்திய தர்கா, பள்ளிவாசல் சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சன்னி முஸ்லிம் மக்கள், அமைதியை விரும்புவதுடன், தர்கா மற்றும் மசூதி வழிபாட்டை பின்பற்றுபவர்கள். அதனால்தான், பிரதமர் மோடியே, ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் ஷெரீப் தர்காவில், ஆண்டுதோறும் நடக்கும் உர்ஸ் திருவிழாவிற்கு, புனித போர்வை வழங்கி வருகிறார். ஆனால், சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று சொல்லும் தி.மு.க., அரசு, எங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்கிறது. தர்காவில் உள்ள உண்டியல் வருமானத்தில், ஏழு சதவீதம், வக்ப் வாரியத்திற்கு வழங்கப்படுகிறது. இதில்தான் அந்த வாரியம் செயல்படுகிறது. ஆனால், வாரியம் சிறுபான்மையின மக்களுக்கு தேவையான, அடிப்படை உரிமைகளை பெற்று கொடுக்காமல், அரசியல் சண்டையிடும் இடமாகி விட்டது. வாரியத்துக்குள் உறுப்பினர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையிலான மோதல், உச்சக் கட்டத்தில் உள்ளது. வாரியத்துக்கு நிரந்தர முதன்மை செயல் அலுவலர் நியமிக்கவில்லை. இதனால், வெள்ளிக்கிழமை தோறும் நடக்கும், அலுவல் கூட்டம் நடக்காமல், கோப்புகள் தேங்கி நிற்கின்றன. தற்போதுள்ள முதன்மை அதிகாரிக்கு, தமிழ் கலாசாரமோ, தர்கா, மசூதி கலாசாரமோ தெரியவில்லை. இதனால், வாரியத்தில் முடிக்க வேண்டிய, பல பிரச்னைகள், நீதிமன்றத்துக்கு சென்று, பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகின்றன. இது தொடர்பாக, பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும், அவர்கள் செவி சாய்க்கவில்லை. இந்நிலையில்தான், ஹாஜி நியமனத்தில், சன்னி முஸ்லிம் மக்களுக்கு, தி.மு.க., அரசு பெரும் துரோகம் செய்து விட்டது. அதாவது, தமிழக அரசின் தலைமை ஹாஜியாக இருந்த சலாஹுத்தீன் அய்யூப், கடந்த ஆண்டு மறைந்தார். புது ஹாஜியாக, வேலுார் உஸ்மான் முஹயித்தீனை, தி.மு.க., அரசு சமீபத்தில் நியமித்தது. தலைமை ஹாஜி இவர், சன்னி முஸ்லிம் வழிபாட்டுக்கு எதிரான மனநிலை கொண்ட, தாருல் உலுாம் தியோபந்த்தில் பட்டம் பெற்றவர். அவர் எப்படி சன்னி முஸ்லிம் வழிபாட்டுக்கு ஆதரவாக இருப்பார். இந்த நியமன பின்னணியில், தி.மு.க., கூட்டணியில் உள்ள, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி., நவாஸ் கனி ஆகியோர் உள்ளனர். சன்னி வழிபாட்டை பின்பற்றும் நபர், ஹாஜியாக வந்துவிடக்கூடாது என, தலைமைச் செயலரை நேரடியாக சந்தித்து, அழுத்தம் கொடுத்துள்ளனர். இதை வெளிப்படையாக, தனது 'வாட்ஸாப்' குழுவில் ஜவாஹிருல்லா பதிவிட்டுள்ளார். இதன் வழியே, வக்ப் வாரியத்தை தொடர்ந்து, தலைமை ஹாஜி நியமனத்திலும், தி.மு.க., அரசு எங்களுக்கு எதிராக இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. எனவேதான், தலைமை ஹாஜி சொல்லும், நோன்பு, பெருநாள் பிறை, மாத பிறை விஷயங்களை பின்பற்ற வேண்டாம் என, கடந்த மாதம் முடிவு செய்தோம். அதைத்தொடர்ந்து, தென்னிந்திய முக்கிய மதத் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், சென்னையில் சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் 'சன்னி முஸ்லிம் மக்களுக்கு எதிரான, மனநிலையில் இருந்து தி.மு.க., மாறவேண்டும். 'இல்லையெனில், வரும் தேர்தலில், தி.மு.க.,வுக்கு தக்க பாடம் புகட்டுவது' என, முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு, அனைத்து தர்காக்களுக்கும், மசூதிகளுக்கும் உத்தரவாக அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த தகவலை உளவுத்துறை வழியாக அறிந்த, தி.மு.க., தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

பா மாதவன்
பிப் 15, 2026 05:59

அட்ரா சக்கை... அட்ரா சக்கை... எப்பொழுதும் இந்து விரோதப் போக்கு கொண்ட திராவிஷ கூட்டத்திற்கு வச்சான் பாரு ஆப்பு. இது தொடர வாழ்த்துக்கள். ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலைபாடு கொண்ட திராவிஷ கூட்டத்திற்கு எப்பொழுதும் சமத்துவம் பேணி காக்கப் பட வேண்டும்


Barakat Ali
பிப் 14, 2026 19:30

அதிகாரத்தில் இருக்கும் திமுகவைப் பயன்படுத்தி காரியம் சாதித்துக்கொள்வதே அருவருப்பானது .... இஸ்லாம் இதை ஏற்பதில்லை .....


Barakat Ali
பிப் 14, 2026 19:28

பாஜக எப்படி ஹிந்துக்களை வாக்குவங்கியாக பயன்படுத்திக்கொள்கிறதோ, அதே போலத்தான் திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சிறுபான்மையினரை நடத்துகின்றன .....


Balasubramanian
பிப் 14, 2026 15:06

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா எந்த பிரிவினர் ஐ சேர்ந்தது அதை முதலில் விளக்கினால் சமரசம் செய்து கொள்ளலாம்!


S.jayaram
பிப் 18, 2026 00:41

அந்த தர்கா வக்ஃபு வாரியத்தில் இல்லை என்பது காதால் கேட்ட தகவல் உண்மைத் தன்மை ஆராயப் படவேண்டும்


EagleEye
பிப் 14, 2026 14:17

திருபரங்குன்றம் பிரச்சனைக்கு நடுவில் இந்த தி ம் கே அரசு வக்பு திருத்த மசோதா silentaka நிறைவேற்றி விட்டது இவங்களுக்கு தெரியுமா...


S SRINIVASAN
பிப் 14, 2026 13:46

திராவிட மாடல் ஆட்சிக்கு ஆப்பு வைத்த பாட்ச்சா.


Ms Mahadevan Mahadevan
பிப் 14, 2026 13:08

அரசு , ஜாதி மதம் பார்த்து ஆட்சி செய்யக் கூடாது. ஆனால் தமிழ் நாட்டில் அப்பிடி இல்லாமல் ஜாதி மத சலுகைகள் வழங்கி , மக்களிடையே பிரிவினை யை உண்டாக்கி அரசியல் செய் கிறது


ஆரூர் ரங்
பிப் 14, 2026 12:40

வகாபி இஸ்லாமிய கொள்கைபடி மாற்று மதத்தினருடன் ஒரே நாட்டில் ஒத்து வாழமுடியாது. அப்படிப்பட்ட கொள்கை உள்ளவரை அரசு காஜியாக நியமிப்பது பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கே நல்லதல்ல.


R SRINIVASAN
பிப் 14, 2026 10:47

ஹிந்துக்களை மத வெறியர்கள் என்று கூறும் திமுக இதற்கு என்ன சொல்ல போகிறது


ஆகுயர்தான்
பிப் 14, 2026 11:24

டீ மூ கா வே மத வெறி பிடித்த விஷயம். இதுல குறிபிட்ட மதம் பற்றி சொல்ல தைரியம் இல்லை. ஓட்டு எப்படி கெடைக்கும்...இந்த சின்ன புத்தி கூட இல்லாம இருக்க...irunooru குவார்ட்டர் க்கு மாரடிதால் இப்படித்தான்


ருத்ரன்
பிப் 14, 2026 10:14

அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைத்தாலும் அது சாத்தியமில்லை iyer sir. இந்தியா செகுலர் நாடு என்பதை முதலில் மாற்ற வேண்டும். அது சாத்தியமா என்று தெரியவில்லை.


Iyer
பிப் 14, 2026 13:55

SECULAR என்ற சொல் நமது கான்ஸ்டிடூஷன் ல் இந்திரா காந்தியால் புகுத்தப்பட்டது. SECULAR என்ற சொல் அவசியம் இல்லாத சொல் ஆகும். ஹிந்துக்கள் ஆளும் எந்த தேசமும் AUTOMATIC ஆக SECULAR ஆகத்தான் இருக்கும் BJP - பாரதத்தை ஹிந்து ராஷ்ட்ர என்று அரிவிக்கும் முன் SECULAR என்ற சொல்லை நமது அரசியல் சாசனத்தில் இருந்து நீக்கும் என்று நம்புகிறேன்


M S RAGHUNATHAN
பிப் 14, 2026 15:34

Secular=Anti Hindu. இதுதான் Secularism definition.