/ செய்திகள் / மகளிருக்கு ரூ.5 ஆயிரம்: தலைவர்கள் சொல்வது என்ன?

மகளிருக்கு ரூ.5 ஆயிரம்: தலைவர்கள் சொல்வது என்ன?

சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு கோடை சிறப்பு தொகுப்பு ரூ.2 ஆயிரம் உட்பட ரூ.5 ஆயிரம் இன்று (பிப்ரவரி 13) மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளுக்கு வங்கியில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக தலைவர்கள் கருத்துகள் தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு;பயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேர்தல் தோல்வி பயம்,முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது. 28 மாதங்களாக '1000 ரூபாய்' கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து 'கோடைக்கால சிறப்புத் தொகை' கொடுக்கிறாராம்.2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா? சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகத்தை சீர்குலைத்துவிட்டு, இப்போது 'தேர்தல் நேரத்து பணம்' வரவு வைக்கும் இந்த பேட்ச்ஒர்க் வேலையை தமிழக பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?செப் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே 'ரூ.3,50,000'! இதை வீடு வீடாக சென்று அதிமுக அம்பலப் படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு?இப்போது 'மாதம் 2000 ரூபாய்' என்று நான் அளித்த அதிமுக தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும், வரும் 2026 சட்டசபை தேர்தல் பயத்தில், இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது.யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து 'ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்' என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது. 'அனைத்து குடும்ப அட்டைக்கும்' என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி ,1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்.இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள அதிமுக ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு 'குல விளக்குத் திட்டம்' முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் 'மாதம் ரூ.2000' என்று நான் அளித்த வாக்குறுதியானது, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.மோசடி திமுகவின் வலையில் தமிழக மகளிர் சிக்க மாட்டார்கள்! தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்: 2021-இல் ஆட்சி அரியணை ஏறியதிலிருந்து 2024 லோக்சபா தேர்தல் வரை 28 மாதங்கள் மகளிர் உரிமைத் தொகை வழங்காமல் ஏமாற்றிய திமுக அரசு, வலையை விரித்து இரையைப் பிடிப்பது போல, இப்பொழுது ரூ.5,000 பணத்தைக் கொடுத்து, தங்கள் அவல ஆட்சியின் சுவடுகளை மறைத்துவிடலாம் எனத் தப்புக்கணக்கு போடுகின்றது.ஆட்சி தொடங்கியதிலிருந்து பொங்கலும் கோடை காலமும் எத்தனையோ முறை வந்திருக்கிறது. ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் தான் பொங்கலும், கோடை காலமும் திமுகவின் கண்களுக்குத் தெரியுமா? உண்மையில் பொங்கலுக்கான ரூ.3,000-மும், கோடைகாலத் தொகை ரூ.2,000-மும் மக்கள் நலனுக்காகக் கொடுக்கப்பட்ட தொகை அல்ல, தேர்தல் தோல்வி அச்சத்தில் கொடுக்கப்பட்ட அச்சாரத் தொகையே!2021-இல் இருந்து 2023 வரையிலான ₹28,000 மகளிர் உரிமைத் தொகையை வழங்காமல் ஏமாற்றிவிட்டு, 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சிலருக்கு மட்டும் உரிமைத் தொகையை வழங்கிய திமுக, ஒருவேளை, தப்பித்தவறி துரதிஷ்டவசமாக 2026 தேர்தலில் வென்றால், உடனே 2026-இல் மகளிர் உரிமைத் தொகையை வழங்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?சொல்லப் போனால், திமுகவின் திட்டமே, தற்போது ரூ.5,000 வழங்கி அதையும் இதையும் செய்து குட்டிக்கரணம் அடித்து சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்துவிட்டால், முன்பு செய்தது போல, 3 ஆண்டுகள் வரை உரிமைத் தொகையைக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டு, 2029 லோக்சபா தேர்தல் நெருங்கியதும் மீண்டும் பணத்தைக் கொடுத்து, மக்களை ஏமாற்றலாம் என்பது தான்!விடுதலை சிறுத்தைக் கட்சி, திருமாவளவன் மகளிர் உரிமை தொகை பெறும் பெண்களுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தொகை ரூ.3 ஆயிரம், கோடைக்கால இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் என 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இது மகளிரை மனம் குளிரச் செய்யும் மகத்தான அறிவிப்பாகும். இதைச் செயல்படுத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். துணை முதல்வர் உதயநிதி தமிழகம் என்றால் மகளிர் நாடு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு. பெண்களுக்கு இன்று ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மகிழ்ச்சியை மேலும் இரட்டிப்பாக்கும் வகையில், திராவிட மாடல் 2.0 ல் மகளிருக்கான உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என முதல்வர் அறிவித்துள்ளார்கள். தமிழக மகளிர் வெல்லும், தமிழ் பெண்கள் ஆக நடைபோட என்றும் துணை நிற்போம்.தவெக தான் போட்டி தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்? இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான். அதுமட்டுமா? தி.மு.க. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.க.வைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.எனவே, தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள். நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி.திமுக அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி. இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

pkgk
பிப் 14, 2026 13:51

நீங்கள் ஆட்சியிலே உகந்தபின்னடி பெண்களுக்கு பணம் அதாவது உரிமை தொகை குடுப்பீங்களா இல்லையா ?


Easwar Samban
பிப் 13, 2026 22:40

இத்தருணத்திலேயே 75வயதிற்க்கு மேல் உள்ள Sr.Citizenஆண்களுக்கு இலவச பயணத்தையும் அளித்து மகிழ்ச்சியூட்டவும்.


தாமரை மலர்கிறது
பிப் 13, 2026 19:32

பிஹாரில் நிதிஷ் செய்ததை அப்படியே ஸ்டாலின் இங்கு காப்பி அடிப்பார் என்று முன்பே சொல்லப்பட்டது. ஆனால் தேர்தல் கமிஷனை அங்கு கோட்டைவிட்டதை இங்கு பிடிக்கும். ஸ்டாலினின் இந்த நாடகத்தை தடுத்து நிறுத்தும். ஐந்தாயிரம் கொடுக்க அனுமதிக்கப்படாது. மக்களின் வரிப்பணத்தை ஸ்டாலின் வீணடிப்பதை தேர்தல் கமிஷன் உடனடியாக நிறுத்தும்.


Oviya Vijay
பிப் 13, 2026 19:06

உண்மையில் எடப்பாடி அறிக்கையைப் படிக்கும் போது சிரிப்பு தான் வருகிறது... கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக தலைமையில் ஆட்சி அமைந்து, தான் தான் முதல்வர் என்று நம்பிக் கொண்டுள்ளார்... பாவம்... களநிலவரம் தெரியாமல்...


M Ramachandran
பிப் 13, 2026 18:46

சும்மா தூக்கி விடு வரப்போறவன் மாறடிக்கட்டும். ஆப்பூ விடியலுக்கு நிச்சய மாயிடிச்சுட்டு ஊ ஊ தான் என்று.


Prem Kumar
பிப் 13, 2026 16:36

மக்கள் வரி பணத்திலிருந்து மாதந்தோறும் பெண்களுக்கு உரிமை தொகை என்ற பெயரில் வழங்கி கஜானாவை காலி செய்து வரும் தி.மு.க. வை போல், அதி.மு.க.வும் பெண் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அறிவிப்பை தேர்தல் வாக்குறுதியாக அளித்து ஆசை காட்டி வருகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் உண்மையிலேயே உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் சொந்த கட்சி பணத்திலிருந்து தகுதி நிர்ணயம் செய்யாமல் ஓட்டுரிமை உள்ள பெண் வாக்காளர்கள் அனைவருக்கும் ஐந்து ஆண்டுகள் ஓவ்வொரு மாதமும் ஐநூறு ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்குமா?


Modisha
பிப் 13, 2026 16:34

கடந்த நாலு வருஷங்களில் கோடை காலமே வரவில்லையா .


அருண் பிரகாஷ் மதுரை
பிப் 13, 2026 15:50

மது குடித்து வாகனம் ஓட்டுவோர் வழக்கு மிகவும் அதிகமாக வேண்டுமென்றே பதிவு செய்யப்படுகிறது.. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினால் நன்றாக இருக்கும்.. அரசே மதுபானம் விற்று அதை அங்கேயே குடிக்க வைத்து காவலர்கள் மூலமாக வழக்குப் பதிவு செய்வது இந்த ஆட்சியில் மிகவும் அதிகம்.. எதிர்க்கட்சி தலைவர்கள் இதையும் கவனித்தால் நன்றாக இருக்கும்..


amuthan
பிப் 13, 2026 17:22

புது கண்டு பிடிப்பு.எல்லா நாட்டிலும் மது விற்கிறார்கள். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் அபதாரம் தான்.


Palanisamy T
பிப் 13, 2026 18:04

To Amuthan . - 1. நீங்கள் சொல்வது சரி. மறுக்க வில்லை . எல்லா நாடுகளிலும் மது விற்பனை செய்கின்றார்கள். தமிழக அரசு எப்படி மது விற்பனை செய்கின்றதென்று பாருங்கள். இந்திய மாநிலங்களும் எப்படி மது விற்கின்றார்களென்றும் பாருங்கள். பிறகு உங்களின் கருத்தை சொல்லுங்கள்.


Anantharaman Srinivasan
பிப் 13, 2026 15:27

அரசு பணத்தை வாரியிறைத்து ஓட்டுக்களை பெற்று ஆட்சியை பிடிப்பதை விட இரவு தொழில் நடத்தி சாம்பாதிக்கலாம்.


Palanisamy T
பிப் 13, 2026 18:18

1. இவர்களின் ஆட்சியில் இந்த தொழில்கள் இல்லையென்று உங்களால் மறுக்கமுடியாமா? அரசுப் பணத்தை வாரியிறைத்தால் மட்டும்தான் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளமுடியும். மேலும் மக்கள் மக்களாக இல்லையே நினைத்தால் நெஞ்சமே வலிக்கின்றது .


V Venkatachalam, Chennai-87
பிப் 13, 2026 15:16

கல்லு நம்மளுது இல்ல. மாங்காயும் நம்மளுது இல்ல. கல்ல எடுத்து மாங்காயை அடிப்போம். மாங்காய் விழுந்தா டபுள் சந்தோஷம். கல்லு மட்டும் விழுந்தா நஷ்டமில்லே. அதுனால கஜானா நம்ம கையில இருக்கு. அள்ளி வுடு. எவன் அப்பன் வூட்டு பணம். எவன் கேக்க போறான்.


மேலும் செய்திகள்