தேர்தல் கமிஷன் குழு 2 நாள் ஆலோசனை
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பணிகளை ஆய்வு செய்ய, தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் குழு நேற்று சென்னை வந்தது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு, வரும் ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான பணிகள் குறித்த ஆய்வு செய்வதற்காக, தேர்தல் கமிஷன் துணை கமிஷனர்கள் பானு பிரகாஷ், மனேஷ் கார்க், கியானேஷ் பார்த்தி, பவன்குமார் சர்மா, சஞ்சய்குமார், ஆஷிஷ் கோயல் உள்ளிட்ட, ஏழு பேர் குழுவினர், நேற்று மதியம் 1:00 மணிக்கு சென்னை வந்தனர். பின், துணை தேர்தல் கமிஷனர் மனேஷ் கார்க் அளித்த பேட்டி: தமிழக அரசு அதிகாரிகள், கலெக்டர்கள், எஸ்.பி.,க்களுடன் கூட்டங்கள் நடத்தி, அனைத்து வகையிலும் தேர்தலுக்காக தயார்படுத்துவது குறித்து, நாங்கள் ஆய்வு மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார். பின்னர், தேர்தல் கமிஷன் குழுவினர், புதுச்சேரி சென்றனர். புதுச்சேரியில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய பின், சென்னை திரும்பும் அவர்கள், இன்றும், நாளையும் சென்னையில் ஆய்வு நடத்தவுள்ளனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அன்று துரோகிகள்; இன்று கூட்டணி கட்சியினர்: என்ன சொல்வார் பிரேமலதா!
பிப் 19, 2026 06:44 pm
எனக்கு அரசியலே பிடிக்காது; காலச் சூழ்நிலையை காரணம் சொல்லி வைகோ மகன் துரை குமுறல்
பிப் 19, 2026 09:15 pm
கூட்டணி என்பது தலைவர்களின் விருப்பம்: தேமுதிக-திமுக கூட்டணி குறித்து இபிஎஸ் பேட்டி
பிப் 19, 2026 05:21 pm