சேலத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சேலம்: சேலத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போலீசார் அனுமதி அளித்து உள்ளனர்.சேலம் சீலநாயக்கன்பட்டியில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம், வரும் 13ல் நடத்த தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்காக அனுமதி கேட்டு, போலீசில் கடந்த, 3ல் கடிதம் வழங்கப்பட்டது. அதேபோல், மாநகர் போலீஸ் கமிஷனரிடம், கடந்த, 4ல் நிர்வாகிகள் மனு அளித்தனர். இந்த மனு குறித்து போலீசார் தீவிரமாக ஆலோசித்து வந்தனர்.இந்நிலையில், பிப்.,13ல் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.இதன்படி* 3 மணி நேரத்தில் நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வேண்டும்* நண்பகல் 12 முதல் மதியம் 3 வரை நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.* 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. * போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.* கர்ப்பணிகளுக்கு அனுமதி இல்லை.* குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என்பது போன்ற 51 கட்டுப்பாடுகளை போலீசார் விதித்து உள்ளனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்த கட்டுப்பாடு கூட இல்லனா கரூர் சம்பவ கதை தானே...
காவல்துறை தமிழக வெற்றி கழகத்திற்கு 51 கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் அதில் ஒரு கட்டுப்பாட்டினை கூட அவர்கள் கடைப்பிடிக்க மாட்டார்கள், பிறகு எதற்கு இந்த கூட்டம் , பிறகு எதற்கு இந்த மக்கள் சந்திப்பு , பிறகு எதற்கு இந்த கட்டுப்பாடு , மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளும் தமிழக அரசும் காவல்துறையும் இணைந்து மக்களை காப்பாற்றுங்கள் அப்பொழுதுதான் தேர்தல் அன்று வாக்கு போட நபர்கள் இருப்பார்கள்
காவல்துறை 51 கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் அதில் ஒரு கட்டுப்பாட்டினை கூட அவர்கள் கடைப்பிடிக்க மாட்டார்கள் அப்படி இருக்கும் பொழுது எதற்கு கட்டுப்பாடு எதற்கு கூட்டம் எதற்கு மக்கள் சந்திப்பு எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் மீண்டும் பிரச்சனையில் தமிழக வெற்றிக் கழகம்
This is gross injustice.Vijay is being singled out .Will they impose such conditions on DMK meetings.This is sheer political vendetta.Revenge flows in their blood.
ஒண்ணு புரியவே இல்லை. இரண்டு திருடர் கட்சிகளும் தினமும் கூட்டங்கள் நடத்தும் போது ஏன் விஜய்க்கு மட்டுமே இம்புட்டு கட்டுப்பாடு.
ஏன்னா எந்த கட்சி மீட்டிங்கிலேயும் 41 பேர் சாகவில்லை அதனால் கட்டுப்பாடு மிக மிக தேவையே .....
அரசியலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சினிமா நடிகன் நடிகை யாராக இருந்தாலும் அவர்களை நேரில் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும்போது சினிமா மோகம் உள்ள ஆண்கள் பெண்கள் கூட்டம் கூடுவது வழக்கம். தவெக ஜோசப் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூடுகிற கூட்டம் பிரபல கதாநாயகனாக திரைப்படங்களில் பார்த்த அவனை நேரில் பார்க்கும் ஆர்வம் காரணமாக கூடுகிற கும்பலில் உள்ளவர்கள் அனைவரும் தேர்தலில் அவனுடைய தவெக விசில் சின்னத்துக்கு வாக்களிக்கமாட்டார்கள்.
புலம்பி பொழுதை கழி
வாக்களிக்க மாட்டாங்கன்னா, அப்படி கஷ்டப்பட்டு போய் பாக்கணும்னு அவசியம் இல்ல
பசங்களா, பொண்ணுங்களை சந்தோசமா வைச்சுக்கனும் ...... பொண்ணுங்களா, பசங்களை டபுள் சந்தோசமா வைச்சுக்கனும் ..... விசிலடித்து இப்படி ஒரு மதம் மாற்றி கல்லூரி முதலாளி அறிவிப்பு .......வெட்கம் மானங்கெட்டவன்தான் இந்த கல்லூரிக்கு பெத்த மகன் மகளை படிக்க அனுப்புவான் .......ஆனால் இங்குள்ளவனுக்கு எவ்வளவு கேவலமாக பேசினாலும் சூடு சுரணை வராது .....
கிறிஸ்துவ மக்களிடேயே பிரபலமாக உள்ள மத போதகர்கள் வாயிலாக தங்களுடைய யுக்திகளை செயல்படுத்த விடியல் முடிவு செய்துள்ளதாம் ...அதன் துவக்கமாக கோவை மண்டலத்தில் ஊட்டியில் முதல் நிகழ்ச்சி ....அற்புத பெருவிழா நடத்தப்பட்டுள்ளதாம் .... சிறப்பு பிரார்த்தனையில் சி எஸ் ஐ போதகர்கள் உள்ளிட்ட கிறிஸ்துவ முக்கிய பிரமுகர்களும் அதில் பங்கேற்றார்களாம் ..இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊட்டி நகர தி மு க செயலரும் மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான ஜார்ஜ் ஏற்பாடு செய்திறந்தாராம் ..இதற்கு பெயர்தான் மத சார்பற்ற கூட்டணி ..
நடிகர் கட்சிக்கு பல்வேறு பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளை சேர்ந்த பாதிரியார்களும் களம் இறங்கி உள்ளார்களாம் ...புதிய கூட்டணிக்காக கிறிஸ்துவ மக்களை தயார் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்களாம் ....அதுவும் மத சார்பற்ற கூட்டணியாம் ...அதனால்தான் நடிகர் அவனது கொள்கைகளுக்கு மத சார்பற்ற கொள்கை என்று பெயர் வைத்தார்களாம் ....