Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்போம்: திருமா திட்டவட்டம்

திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்போம்: திருமா திட்டவட்டம்

சென்னை: இந்த முறை நாங்கள் கூடுதலான இடங்களில் போட்டியிட விரும்புகிறோம். திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்போம் என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தி.மு.க., கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாக பனிப்போர் நீடித்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதி என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது; இது, தி.மு.க.வுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

பா.ம.க.,வை கூட்டணியில் சேர்த்தால், நான் வெளியேறுவேன் என்று திருமாவளவன் எச்சரித்துள்ளார். இன்று அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம் என திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவர் புதுச்சேரியில் நிருபர்களை சந்தித்தார்.

கேள்வி: சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது நீங்கள் திமுகவிடம் எப்பொழுது தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறீர்கள் ?


திருமாவளவன் பதில்: திமுக தரப்பில் பேச்சுவார்த்தைக்கான ஒரு குழுவை நியமிப்பார்கள். அந்தக் குழு அதிகாரப்பூர்வமாக ஒவ்வொரு தோழமைக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கும். அப்பொழுது நாங்கள் அவர்களோடு பேசி எங்களுக்கான தொகுதிகளை நாங்கள் முடிவு செய்வோம்

கேள்வி: கடந்த தேர்தல் போல இருக்குமா? இந்த முறை போட்டியிடும் தொகுதிகளில் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா?

திருமா பதில்: ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று விரும்பி பேச்சுவார்த்தையில் அழுத்தம் கொடுத்து வந்து இருக்கிறோம்.

அதேபோல் இந்த முறையும் நாங்கள் கூடுதலான இடங்களில் போட்டியிட விரும்புகிறோம். அந்த விருப்பத்தை வெளிப்படுத்துவோம். அதிக தொகுதிகள் கேட்போம். பேச்சுவார்த்தையில் முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்

Advertisement

பிப் 09, 2026 08:24 am

கேளு... கேளு.. யாரிடம் கேட்கிறாய்.. அண்ணனிடம் தானே கேட்கிறாய்... கேளு... ஆனால் தம்பிக்கு 2 சீட் மற்றும் பிளாஸ்டிக் சேர் மட்டுமெ கொடுக்கும் நிலையில் தான் அண்ணன் இருக்கிறான் என்பதை மறந்து விடக்கூடாது.

Reply Rate this

அதிக தொகுதிகள் கேட்போம்.. கொடுக்க மாட்டார்கள்.. அப்புறம் என்ன எப்போதும் போல கொடுக்கும் தொகுதியில் நிற்போம்.. மத வாதம், சமூக நீதி, தமிழ் இவற்றுக்காக விட்டுக் கொடுத்து செல்கிறோம் என்று அறிக்கை விடுவேன்.. அவ்ளோதான்

Reply Rate this
அப்படியே அந்த பெட்டி.. அது மட்டும் பெரிதாக இருந்தால் போதும்.. அப்போ அதிக எண்ணிக்கையில் சீட்.. தாழ்த்தப்பட்ட மக்கள் நலன்.. அவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன.. நமக்கு தேவை எல்லாம்... காசு... பணம்.... துட்டு.... மணி.... மணி.
பிப் 09, 2026 08:27 am
Rate this
பிப் 08, 2026 07:05 pm

எப்புடியாவது பாஜக என்னும் நோட்டா கட்சி உள்ள வந்துடும் ன்னு உருட்டி போன தடவை வாங்குனதை விட ஓரு சீட்டாவது ஓரே ஒரு சீட்டாவது வாங்கிடு வோம்.‌ இன்னிக்கு தான் து மு. உதவா நிதி திருவிழா வில் கடை போடுற மாதிரி கட்சி முளைச்சிருக்கு திருவிழா வுக்கு அப்புறம் காணாம போயிடும்ன்னாரு. அதையும் சொல்லி ஒரு சீட் கூட வாங்குவோம். ஓங்குக சமநீதி.

Reply Rate this
பிப் 08, 2026 06:38 pm

அதிக தொகுதிகள் கேட்டு என்னபன்ன போறீங்க?

Reply Rate this
பிப் 08, 2026 05:28 pm

சிவாஜி பாஸ் என்ற படத்தில் ஒரு காமெடி வரும். அது போல வெளியே அறிவாலயத்துக்கு உள்ளே போங்கள் என்று சொல்வார். 15 நிமிடங்கள் கழித்து போன தேர்தலில் கொடுத்ததே போதும். இனி வேண்டாம் சாமி என்று வெளியே வந்ததும் சொல்வார்கள்.

Reply Rate this
பிப் 08, 2026 05:04 pm

எப்படியும் காங்கிரஸ் கிடையாது கூட்டணியில் - பாமக போல் வேறு யாரும் வர வழியில்லை! உங்களுக்கு தேவையானது கேட்காமலே கிடைக்கும்!

Reply Rate this
பிப் 08, 2026 04:50 pm

சந்திரபாபு பாட்டு. சிரிப்பு பாருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது

Reply Rate this
பிப் 08, 2026 03:42 pm

கூடுதல் தொகுதிகள் பத்தி அப்புறமா பேசிக்கலாம். மொதல்ல நல்ல சேரா கேளுங்க.

Reply Rate this
பிப் 08, 2026 03:41 pm

மொதல்ல ஒரு நல்ல சேர் கெட்டு வாங்கு அப்புறம் மத்ததெல்லாம்.....

Reply Rate this
பிப் 08, 2026 03:11 pm

வழக்கம் போல கூடுதல் தொகுதிகள் கேட்போம்! அவர்கள் வழக்கம் போல கூடுதல் தொகுதிகளெல்லாம் கொடுக்க முடியாது என்பார்கள்! நாங்கள் வழக்கம் போல கொடுப்பதை ஏற்றுக் கொள்வோம்! வழக்கம் போல பா.ஜ.க உள்ளே வந்திரும் என்போம், அப்புறம் வழக்கம் போல ஸ்டாலின் வாழ்க, உதயநிதி வாழ்க என்போம்!

Reply Rate this