பிப்., 17க்குள் கூட்டணி முடிவு: பிரேமலதா இறுதி நம்பிக்கை
சென்னை: ''தே.மு.தி.க., யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற அறிவிப்பு, வரும் 17 ம் தேதிக்குள் முறைப் படி வெளியிடப்படும்'' என, அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார். தே.மு.தி.க., சார்பில், தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனு பெறும் பணி நேற்று துவங்கியது. சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், விருப்ப மனு வினியோகத்தை துவக்கி வைத்து பிரேமலதா கூறியதாவது: தே.மு.தி.க., சார்பில் 234 தொகுதிகளிலும், போட்டியிட விரும்பும் கட்சி யினரிடம், 12ம் தேதி வரை, விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. தே.மு.தி.க., கூட்டணியை அறிவிப்பதில் எந்த காலதாமதமும் செய்யவில்லை. தே.மு.தி.க., இடம்பெறும் கூட்டணி, இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றியை பெறும். யூகமான கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பது கிடையாது. வரும் 17 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை, இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது. அதற்குள் தே.மு.தி.க., கூட்டணி அறிவிப்பை முறைப்படி வெளியிடுவோம். யாருடன் கூட்டணி பேசுகிறோம் என்பதை சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எத்தனை சதவிகிதம் ஓட்டு உங்களுக்கு இருக்கு என்று தெரியுமா .? நீங்க என்னமோ பெரிய கட்சி என்று உதார் விட்டுட்டு இருக்கீங்க.
மேலும் செய்திகள்
பிரவீன் - தாகூர் மீது நடவடிக்கை இல்லை; காங்., தலைமை முடிவால் தி.மு.க., கடுப்பு
பிப் 18, 2026 01:18 am
ஆட்சியில் பங்கு கேட்டு சென்னையில் ஒட்டப்பட்ட காங்கிரஸ் போஸ்டர்கள்; மர்ம நபர்கள் கிழிப்பு
பிப் 17, 2026 06:09 pm