/ செய்திகள் / விஜய் புகழை பரப்பினால் போதும்; அண்ணாதுரையை கைவிட்ட த.வெ.க.,

விஜய் புகழை பரப்பினால் போதும்; அண்ணாதுரையை கைவிட்ட த.வெ.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை, கட்சி கொள்கை தலைவராக சமீபத்தில் அறிவித்த த.வெ.க., தலைவர் விஜய், அவரை கழற்றிவிடும் முடிவுக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, த.வெ.க., மாவட்ட செயலர்கள் சிலர் கூறியதாவது: த.வெ.க., துவங்கும்போது, ஈ.வெ.ரா., காமராஜர், அம்பேத்கர், அஞ்சலை, வேலுநாச்சியார் ஆகியோரை கொள்கை தலைவர்களாக விஜய் அறிவித்தார். அதன்பின், மதுரை த.வெ.க., மாநாட்டில், அண்ணாதுரையையும் எம்.ஜி.ஆரையும், கொள்கை தலைவராக சேர்த்து, மாநாட்டில் அவர்களின் படங்களை வைத்தார். அதைத்தொடர்ந்து, பழைய கொள்கை தலைவர்கள் குறித்து பேசுவதை நிறுத்திய விஜய், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., குறித்து மட்டும் பேசினார். சமீபத்தில், த.வெ.க., மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., இருந்த இடத்தில், இப்படிப்பட்டவர்கள் இருக்கின்றனரே என, விஜய் ஆதங்கப்பட்டார். எனவே, அண்ணாதுரை நினைவு நாளான நேற்று, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த, ஒருங்கிணைந்த மாவட்டச் செயலர்கள் தயாரானோம். ஆனால், தலைமையிடமிருந்து எந்த தகவலும் இல்லை. இது குறித்து தலைமையிடம் கேட்டபோது, 'அண்ணாதுரை குறித்து பேசி கட்சிக்கு எந்த பயனும் இல்லை. அவரை பேசுவதால், திராவிட கட்சிகள்தான் பயன் அடைகின்றன. எனவே, கொள்கை தலைவர்கள் பட்டியலில் இருந்து அண்ணாதுரையை கழற்றிவிடும் முடிவுக்கு விஜய் வந்துவிட்டார். இனி விஜய்தான் உங்களுக்கு எல்லாமே. அவரின், புகழை மட்டுமே பரப்புங்கள்; அவரின் பிறந்த நாளை மட்டும் கொண்டாடுங்கள்' என தெரிவித்தனர்.அதனால்தான், அண்ணாதுரையின் படத்தை, அவருடைய நினைவு நாளில் விஜய் பகிரவில்லை. கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளும், அண்ணாதுரை குறித்து பேசாததற்கு இதுதான் காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

பாபு
பிப் 05, 2026 00:45

பெரியாரையும் விடப்போறாராமா? கொள்கையாம் கொள்கை. புண்ணாக்கு.


sundararajan
பிப் 04, 2026 22:32

அவர்களின் கட்சியின் கொ.ப.செ ஆக வர வாய்ப்புள்ளது


தமிழ்வேள்
பிப் 04, 2026 21:16

திராவிடிய தெரசா அன்னை திரிசா புகழ் பாடவேண்டாமாடா டோமர்களா? எதிர்காலத்தில் தறுதலை வெட்டி கட்சியின் எதிர்கால கொ.ப.சே மற்றும் முதல்வர் வேட்பாளர் அவ நம்பிக்கை நட்சத்திரம் இல்லாமல் ஓட்டு குவிந்து விடுமா என்ன?


bharathi
பிப் 04, 2026 18:51

Only jesus and josep Gospels


Madras Madra
பிப் 04, 2026 17:04

இனிமே எல்லாம் விஜயின் அற்புத சுகம் அளிக்கும் கூட்டங்கள்தான்


raju
பிப் 04, 2026 15:56

முதலில் அண்ணாதுரை தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் ? என்று யாரவது கூறுங்கள், யாரைக்கேட்டாலும் அவர் சிறந்த பேச்சளார், கதை எழுதுவார், தமிழ்நாடு என்று பெயர் வைத்தார் என்று தான் சொல்கிறார்கள் . காமராஜர் மாதிரி கல்வி புரட்சி, பெல் , நெய்வேலி நிலக்கரி , பல அணைகள், தொலைநோக்கு பார்வை, எப்படி எதுவுமே செய்யாத அண்ணாதுரை பெயரில் தமிழ்நாடு முழுவதும், சிலை, சாலை, யூனிவர்சிட்டி , பல் திட்டங்கள் உள்ளது, அந்த அளவுக்கு தமிழ் நாட்டுக்கு என்ன செய்தார் ? யாராவது கூறுங்கள்


kulanthai kannan
பிப் 04, 2026 14:42

நல்ல முடிவு. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது அண்ணா மிக்சர் சாப்பிட்டார் என்பதை பராசக்தி படம் பட்டவர்த்தனமாக ஆகிவிட்டது.


பாலாஜி
பிப் 04, 2026 13:23

ஜோசப் விஜயை புகழ புஸ்ஸிகள் மட்டும் இருக்கின்றன.


duruvasar
பிப் 04, 2026 15:20

கவலை படாதீர்கள் உங்களை விட 100 ரூபாய் கூடுதலாக 300 ரூபாய் ஸ்கீம் வரவிருப்பதாக தகவல்.


RAVINDRAN.G
பிப் 04, 2026 11:06

அண்ணாவை வைத்து ஒரு குடும்பம் பிழைப்பு நடத்துகின்றது. இன்னொன்னு அண்ணா பெயரில் கட்சி நடத்துகின்றது. இந்த ரெண்டில் ஒண்ணாவது அண்ணாவை போல பிறர் சொத்து மீது ஆசை படுவது, ஊழல் செய்யும் எண்ணம் இல்லாமல் இருப்பது, காலத்துக்கு தகுந்தல்போல தனித்தமிழ்நாடு கொள்கை கைவிட்டது, குடும்பத்துக்கு எதுவும் சேர்த்துக்கொள்ளாதது என்று பண்புள்ளவர்கள் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறி. ஆகவே விஜய் அண்ணாவை நினைவு கூற தேவையில்லை. விஜயை அண்ணா என்றுதான் பெரும்பாலும் அழைக்கின்றனர். விஜயின் பிம்பமே போதும்.


BHARATH
பிப் 04, 2026 17:00

என்னது பிம்பமா? இந்த ஆளு நம்ப முதுகுல குத்தறவன்னு ஊருக்கே தெரியும். செங்கோட்டையனை கம்ப்ளீட்டா கார்னர் பண்ணியாச்சு. சொங்கி ஆகமா இருக்கணும்னா தாய் கட்சி ஆ தி மு க விடம் வரணும். இல்லேனா தகர டப்பாதான்.


ஆரூர் ரங்
பிப் 04, 2026 10:52

அன்னை தெரசா ஆட்சி அமைக்கப்படும்ன்னு பிரச்சாரம் செய்யலாம்.