கிராமங்களுக்கான அடிப்படை வசதிகள் செஞ்சி தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
செஞ்சி: கிராமங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்வதில் அக்கறை காட்டுவேன் என செஞ்சி தொகுதி தி.மு.க., வேட்பாளர் மஸ்தான் பேசினார். செஞ்சி தொகுதி தி.மு.க., வேட்பாளர் மஸ்தான் செஞ்சி ஒன்றியம் தச்சம்பட்டு, நெல்லிமலை, நடுநெல்லிமலை, மூலநெல்லிமலை பாக்கம், தாண்டவசமுத்திரம், கல்லேரி, சிறுவள்ளிகுப்பம், கொணலுார், புதுப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் ஓட்டு சேகரித்தார். பல கிராமங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், விஜயராகவன், விவசாய அணி அரங்க ஏழுமலை, கணேசன், தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் மணிவண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜேந்திரன், குமார், நிர்மலா ஜெயராமன், அன்புகிருஷ்ணன், அவைத்தலைவர்கள் சரவணன், பச்சையப்பன், மாணவரணி அய்யாதுரை, பழனி, செந்தில்முருகன், ஊராட்சி செயலாளர்கள் ரவிச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, இறையராஜா, ஏழுமலை, ஆறுமுகம், நாகமுத்து, முனுசாமி மற்றும் காங்., நிர்வாகிகள் சண்முகம், தினகரன், சரவணன், நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிராம மக்களிடம் பேசிய வேட்பாளர் மஸ்தான், தான் வெற்றி பெற்றால் கிராமங்களின் அடிப்படை வசதிகளை செய்வதில் அக்கறை காட்டுவேன் என உறுதியளித்தார்.