தெலுங்கு தேசம் எம்.பி., 315 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல்

புதுடில்லி:வங்கிகளில் கடன் பெற்று, மோசடியில் ஈடுபட்ட, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., - ஒய்.எஸ்.சவுத்ரிக்கு சொந்தமான, 315 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்க துறை பறிமுதல் செய்தது.

ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இந்த கட்சியை சேர்ந்த, ரஜ்யசபா, எம்.பி., - ஒய்.எஸ்.சவுத்ரி. இவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்தார். தெலுங்கு தேசம் கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, சவுத்ரி, அமைச்சர் பதவியை, கடந்தாண்டு ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், தான் நடத்தி வந்த சுஜானா குழுமம் என்ற நிறுவனத்தின் பெயரில், 2012 - 13ல், மூன்று வங்கிகளில், 364 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று, மோசடியில் ஈடுபட்டதாக, சவுத்ரி மீது, பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சவுத்ரிக்கு சொந்தமான, 315 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்க துறை பறிமுதல் செய்துள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)