அ.தி.மு.க., பிரமுகரின் பெட்ரோல் பங்க்கில் ரெய்டு
கும்மிடிப்பூண்டி:தேர்தல் பட்டுவாடாவுக்காக பணம் பதுக்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அ.தி.மு.க., பிரமுகரின் பெட்ரோல் பங்க்கில் நேற்று, பறக்கும் படையினர், 'ரெய்டு' நடத்தினர்.கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில், தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்காக, ஏராளமான பணம் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து, வருமான வரி துறை பறக்கும் படையினர் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படையினர், நேற்று மாலை, அந்த பெட்ரோல் பங்க்கில் ரெய்டு நடத்தினர். அந்த பெட்ரோல் பங்க், கும்மிடிப்பூண்டி ஒன்றிய அ.தி.மு.க., அம்மா பேரவை அவைத் தலைவரான ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமானதாகும். இவரது மனைவி நாகலட்சுமி, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழுத் துணை தலைவராக இருக்கிறார். ஒரு மணிநேர சோதனையின் போது பணம் ஏதும் சிக்கவில்லை.