சத்ருஹனை 'சத்ரு' ஆக்கும் ராகுல்

புதுடில்லி : மோடி அரசின் பலம் வாய்ந்த 2 அமைச்சர்களுக்கு எதிராக சத்ருஹன் சின்கா குடும்பத்தினரை போட்டியிட வைக்க ராகுல் தீர்மானித்துள்ளார்.

கடந்த 35 ஆண்டுகளாக பா.ஜ.,வில் இருந்த இந்தி நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருஹன் சின்கா, 10 ஆண்டுகளாக பா.ஜ., எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். சமீபத்தில் கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பா.ஜ.,வில் இருந்து விலகி, நேற்று காங்.,கில் இணைந்தார். சிறிது நேரத்திலேயே, பா.ஜ, அளிக்க மறுத்த சீட்டை காங்., அளித்து, பாட்னா சாகிப் தொகுதி வேட்பாளராக சத்ருஹன் சின்காவை அறிவித்தது.
பாட்னா சாகிப் தொகுதியில் ரவிசங்கர் பிரசாத்திற்கு எதிராக சத்ருஹன் சின்காவையும், அவரது மனைவி பூனம் சின்காவை லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங்கிற்கு எதிராகவும் போட்டியிட வைக்க ராகுல் தீர்மானித்துள்ளார். இதற்காக சத்ருஹன் சின்காவின் குடும்பத்துடன் ராகுல் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் பூனம் சின்காவிற்கு லக்னோ தொகுதியில் சமாஜ்வாதி சீட் வழங்க உள்ளதாகவும்,. அவருக்காக சின்கா பிரசாரம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் சமாஜ்வாதி கட்சி சார்பில் பூனம் சின்கா போட்டியிட உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணிக்காக உ..பி.,யில் காங்., விட்டுக் கொடுத்த 7 தொகுதிகளில் லக்னோவும் ஒன்று. அந்த தொகுதியில் தாங்கள் வேட்பாளரை நிறுத்த போவதில்லை என காங்., உறுதியாக உள்ளது.

அதனால் சமாஜ்வாதி சார்பிலேயே பூனம் சின்கா போட்டியிட உள்ளதாகவும், அவருக்கு ஆதரவாக சத்ருஹன் சின்கா பிரசாரம் செய்வார் எனவும் காங்., தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் ராஜ்நாத் சிங்கற்கும், பூனம் சின்காவிற்கும் நேரடி போட்டி ஏற்பட உள்ளது. லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே, அவருக்கு எதிராக பூனம் சின்கானை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்து விட்டன. எதிர்க்கட்சி வேட்பாளராக இருந்தாலும், ராஜ்நாத் சிங்கிற்கும் எதிராக நிறுத்தப்பட்டுள்ளதால் பூனம் சின்காவிற்கு ஆதரவு தர காங்.,தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமாஜ்வாதி தரப்பு தகவல்கள் கூறுகையில், நன்கு களப்பணி ஆற்றிய பிறகே பூனம் சின்காவை லக்னோ தொகுதியில் நிறுத்த முடிவு செய்யப்பட்டது. லக்னோவில் 4 லட்சம் கயாஷ்தா இன வாக்காளர்களும், 1.3 லட்சம் சிந்தி இன வாக்காளர்களும் உள்ளனர். இவர்கள் தவிர 3.5 லட்சம் இஸ்லாமிய வாக்காளர்கள் உள்ளனர். பூனம் சின்கா சிந்தி இனத்தை சேர்ந்தவர். சத்ருஹன் சின்கா கயாஷ்தா இனத்தை சேர்ந்தவர். இதனால் இரு இன மக்களின் ஓட்டுக்களும் பூனம் சின்காவிற்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

2014 தேர்தலின் போது லக்னோவில் மொத்தமாக பதிவான 10,06,483 ஓட்டுக்களில் 55.7 சதவீதம் ஓட்டுக்களை ராஜ்நாத் சிங் பெற்றிருந்தார். லக்னோ தொகுதியில் உள்ள முக்கியமான 5 இன மக்களின் ஓட்டுக்களையும் அவர் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்., எம்எல்ஏ.,வும், உ.பி., முன்னாள் காங்., தலைவருமான ரிதா பகுகுணா ஜோஷி 2,88,357 ஓட்டுக்களை மட்டுமே பெற்றார். இதை கருத்தில் கொண்டே இந்த முறை, சமாஜ்வாதி வேட்பாளரும், அவரது மனைவியுமான பூனம் சின்காவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சத்ருஹன் சின்காவை களமிறக்க ராகுல் வியூகம் வகுத்துள்ளார். லக்னோவில் மட்டும் சமாஜ்வாதிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய காங்., திட்டமிட்டுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)